மூக்குச் சதை வளர்ச்சி (நாசால் பாலிப்ஸ்) என்றால் என்ன?
மூக்குச் சதை வளர்ச்சி என்பது மூக்கின் உட்பூச்சில் வளரக்கூடிய மென்மையான, வலியில்லாத, திசு போன்ற பாதிப்பில்லாத கட்டி அல்லது சைனஸ்கள் ஆகும்.இவை பொதுவாக பாதிப்பில்லாதவைகளே, ஆனால் சிகிச்சையளிக்க தவறிவிட்டால், மூக்கில் அடைப்பை ஏற்படுத்துவதோடு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவும் காரணமாக இருக்கலாம்.இந்நிலை, மக்கள் தொகையில் 4% பேரை பாதிக்கிறது.இத்தகைய பாலிப்ஸின் வளர்ச்சி 1,000 பேரில் 1ன்றிலிருந்து 20 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சாத்தியமே, அதோடு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
நாசால் பாலிப்ஸ்களின் அறிகுறிகள் பின்வருமாறு:
- அடைப்பு ஏற்பட்ட அல்லது காற்றோட்டமில்லாத மூக்கு (மேலும் வாசிக்க: நாசால் நெரிசல் சிகிச்சை).
- மூக்கில் நீர் வடிதல்.
- தும்மல்.
- வாசனை இழப்பு.
- சுவை இழப்பு.
- உங்களுக்கு சைனஸ் தொற்று இருக்கும் பட்சத்தில் தலைவலி ஏற்படலாம்.
- மேல் பற்களிலோ அல்லது சைனஸ் இருக்கும் இடத்திலோ அழுத்த உணர்வு மற்றும் வலி ஏற்படுதல்.
- மூக்கில் ஏற்படும் இரத்தக் கசிவுகள்.
- குறட்டை.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இந்நிலைக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் அவர் / அவள் பின்வரும் ஏதேனும் நிலையினை கொண்டிருந்தால் அவருக்கு நாசால் பாலிப்ஸ் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது:
- சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்.
- ஆஸ்துமா.
- ஹே காய்ச்சல்.
- ஒவ்வாமைகள்.
- நீண்ட கால சைனஸ் தொற்றுகள்.
- ஆஸ்பிரின் உணர்திறன்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
நாசால் பாலிப்ஸ் நிலையை கண்டறிய பின்வரும் பின்வரும் சிகிச்சை முறைகள் பின்ப்பற்றப்படுகின்றன:
- நாசால் வழியில் நேரடி பரிசோதனை மேற்கொள்ளப்படலாம்.நாசி துவாரத்தில் பாலிப்ஸ்களின் புறவளர்ச்சி வெளிப்படையாக காணப்படுபவையே எனவே நேரடி பரிசோதனையில் அதை கண்டறியமுடியும்.
- உங்கள் சைனஸ்களுக்கான சி.டி. ஸ்கேன், நாசி வழிக்கான படத்தை கொடுக்கக்கூடியது. பாலிப்ஸ் என்பது வெண்படல புள்ளிகளாக காட்சியளிக்கக்கூடியது. முதிர்ந்த நிலையில் இருக்கும் பாலிப்ஸ்கள் சில நேரங்களில் சைனஸ்களுக்குள் சென்று எலும்புகளை தகர்க்க வழிவகுக்கக்கூடியது.
இதற்கான மருந்துகள் அறிகுறிகளை கட்டுப்படுத்துகின்றன,ஆனால் இந்நிலையை குணப்படுத்த உதவுவதில்லை.பின்வரும் மருந்துகள் பொதுவாக நாசால் பாலிப்ஸ்களின் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றன:
- பாலிப்ஸ் கட்டிகள் சுருங்கவும் மற்றும் மூக்கிலிருக்கும் அடைப்பை நீக்கவும் நாசால் ஸ்டெராய்டுகள் மற்றும் கார்ட்டிகோஸ்டிராய்டு மாத்திரைகள் அல்லது திரவங்கள் பரிந்துரைக்கப்படலாம்.
- ஒவ்வாமைக்கான மருந்துகள்.
- நோய்த்தொற்றுக்களுக்கான ஆண்டிபயாடிக்குகளை உட்கொள்தல்.
மருந்துகள் செயல்படாத நிலையிலோ அல்லது பாலிப்ஸ்கள் பெரிய அளவில் இருக்கும்போதோ, அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். எண்டோஸ்கோபிக் சைனஸ் அறுவைசிகிச்சை எனும் அறுவை சிகிச்சையே பொதுவாக நாசால் பாலிப்ஸ் சிகிச்சைக்காக செய்யப்படுகிறது.