பொன்னுக்கு வீங்கி என்றால் என்ன?
பொன்னுக்கு வீங்கி என்பது குழந்தைகளில் பொதுவாக காணப்படும் ஒரு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். இது முகத்தின் இரு பக்கங்களிலும் உள்ள காதுகளுக்கு அடியில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும் ஒரு நிலை. இதனால் வலிமிகுந்த வீக்கம் ஏற்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொன்னுக்கு வீங்கி வைரஸ் (மம்ப்ஸ் வைரஸ்) காரணமாக தொற்று ஏற்பட்ட 14 முதல் 25 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதில் ஒரு சில அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- வீங்கிய, மென்மையான தாடை.
- தலைவலி.
- தசை வலி.
- மூட்டு வலி.
- தாடைப் பகுதியில் வீக்கம்.
- வாய் உலர்தல்.
- பசியின்மை.
- காய்ச்சல்.
- பலவீனம்.
- விந்தணுப்பையில் வலி.
- குழப்பம்.
- எரிச்சலூட்டும் தன்மை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பாராமிக்ஸோவைரஸ் குடும்பத்தைச் சார்ந்த ஒரு வைரஸ் காரணமாக பொன்னுக்கு வீங்கி நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் மூக்கு அல்லது வாய் மூலமாக உள்ளே நுழையும் காற்று துளிகள் வழியாக உடலுக்குள் நுழைகிறது. இவ்வாறு, காற்று வழியாக இந்த நோய் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களுக்கு தும்மல் மற்றும் இருமல் ஏற்படுகையில் அவர்கள் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்வதனால் இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவுவதை தடுக்கலாம்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
நோய்கண்டறிதல்:
- பொன்னுக்கு வீங்கி நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் போட்ட வரலாறு குறிப்பிடத்தக்கது.
- உடல் பரிசோதனை, குறிப்பாக தொண்டை மற்றும் காதுகளின் பரிசோதனை.
- வைரஸ் மற்றும் வைரஸை எதிர்க்கும் எதிர்ப்புரதத்தை கண்டறிய ரத்தப் பரிசோதனை.
- வைரஸை கண்டறிய வாய்/வாய்க்குழி பஞ்சுருட்டு மாதிரியை சோதித்தல்.
- சிறுநீர்ப் பரிசோதனை.
சிகிச்சை முறைகள்:
இந்த நோய் வைரஸ் காரணமாக ஏற்படுவதால் ஆன்டிபயாடிக்ஸ் பயனற்றதாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வரை அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதில் சிகிச்சை கவனம் செலுத்துகிறது. அசௌகரியத்தை எளிதாக்குவதற்காக நடவடிக்கைகள் பின்வருமாறு:
- தொற்று பரவுவதை தடுக்க மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல்.
- காய்ச்சலுக்கு பாராசிட்டமல்.
- வீக்கத்திற்கு இப்யூபுரூஃபன்.
- வீக்கத்திற்கு சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம்.
- மெல்ல வேண்டிய உணவுகளை தவிர்த்தல்; மென்மையான உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது.
- அதிகமாக திரவங்களை உட்கொள்ளுதல்.
தடுப்பு முறைகள்:
மீசில்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா (எம்.எம்.ஆர்) தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. சி.டி.சி பரிந்துரையின் படி, அனைத்து குழந்தைகளும் இரண்டு தடவை எம்.எம்.ஆர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்: குழந்தையின் 15 மாதங்களில் ஒரு முறை மற்றும் 4-6 வயதில் ஒரு முறை. குழந்தை பிறந்து 28 நாட்களுக்கு பிறகு இந்த மருந்து கொடுக்கப்படுகிறது ஏனென்றால், தாயிடமிருந்து குழந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள ஆன்டிபாடிகள் (எதிர்ப்புரதங்கள்) சில நோய்களில் இருந்து குழந்தைகக்கு பாதுகாப்பு அளிக்கிறது.