மெயோசிஸ் (குன்றல் பிரிவு) என்றால் என்ன?
மெயோசிஸ் இருக்கக்கூடிய கண்ணில், கண்மணி (மையத்தில் இருக்கும் கருப்பு) சுருங்கியதாக காணப்படுகின்றது,அதாவது கண்களின் கருவிழிப்படத்தில் இருக்கக்கூடிய சுருங்கும் தசை அதிகமாக சுருக்கமடைவதினால் இந்நிலை ஏற்படுகின்றது.கண்களின் கருவிழி படலத்தில் இருக்கும் கண்மணியின் மென்மையான தசைகளில் பக்கவாதம் ஏற்படுவதாலும் மெயோசிஸ் நோய் உருவாகலாம்.மெயோசிஸ் பொதுவாக ஒரு அடிப்படை நோயிலிருந்தோ அல்லது நார்க்கோடிக்ஸ் மற்றும் ஓபியொய்ட்ஸ் போன்ற சில போதை மருந்துகளை உபயோகிப்பதன் காரணமாக ஏற்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
மெயோசிஸ் நோயுடன் தொடர்புடைய முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- வாந்தி.
- சுவாசித்தலில் ஏற்படும் சிரமம்
- மங்கலான பார்வை.
- டெலிரியம் எனப்படும் சித்தப்பிரமை.
- குமட்டல்.
- தலைவலி.
- தூக்கக் கலக்கம்.
- வலி.
- விழிப்புணர்வின்மை.
- குழப்பம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மெயோசிஸ் நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- ஓபியொய்ட் போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல்.
- மூளையில் ஏற்படும் இரத்தக்கசிவு.
- தூரப்பார்வை (ஹைபரோபியா).
- கடுமையான வைட்டமின் டி குறைபாடு.
- நியூரோசிபிலிஸ் (சிகிச்சையளிக்கப்படாத சிபிலிஸ் நோயின் விளைவினால் கண்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்று).
- வயது (பிறந்த குழந்தை மற்றும் வயது முதிர்ந்தவர்கள்).
- பிறவியிலேயே ஏற்படும் குறைபாடு.
- கருவிழியின் இழைகளுக்குச் செல்லும் பரிவு நரம்பு மண்டலதில் ஏற்படும் எரிச்சல்தன்மை.
- கருவிழியிலிருக்கும் பரிவு நரம்பு மண்டலத்தை இணைக்கக்கூடிய நரம்பில் ஏற்படும் காயம்.
- ஹார்னர் சிண்ட்ரோம் (பொதுவாக மெயோசிஸினை அதன் அறிகுறிகளில் ஒன்றாக வெளிப்படுத்தக்கூடிய சிண்ட்ரோம்).
- கண்களில் ஏற்படும் வீக்கம் .
- டிரைஜெமினல் மூளை நரம்பில் ஏற்படும் காயம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
பின்வரும் முறைகளை பயன்படுத்தி மியோசிஸ் நோய் கண்டறியப்படுகிறது:
கண் மருத்துவர் கண்மணிகள்(ப்யூபிள்) ஒளி வெளிச்சத்திற்கு எதிர்செயலாக சுருங்குதல் மற்றும் விரிவடைதலை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை அளவிட சில சோதனைகளை மேற்கொள்வார்.ஹார்னர் சிண்ட்ரோம் நோயினை கண்டறிய மருத்துவர் கழுத்து, மார்பு அல்லது மூளை ஆகியவைகளுக்கான இமேஜிங் சோதனைகளான சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ சோதனை போன்றவற்றை மேற்கொள்ள கட்டளையிடலாம்.ஃப்ளூரெசண்ட் ட்ரிபோன்மால் ஆன்டிபாடி-உறிஞ்சுதல் சோதனை (எப்டிஏ மற்றும் ஏபிஎஸ்) மற்றும் விடிஆர்எல் சோதனை போன்றவைகள் நியூரோசிபிலிஸிசை கண்டறிய பயன்படுத்துகிறது.
மியோசிஸ் நோய் பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது:
- கண்ணில் ஏற்பட்டிருக்கும் கட்டி அல்லது சிதைவை நீக்க அறுவை சிகிச்சை.
- கண்ணில் ஏற்பட்டிருக்கும் வீரியம் மிகுந்த கட்டிகளை நீக்க கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை.
- ஆர்கான் லேசர் ஃபோட்டோ-மிட்ரியாசிஸ்.
- கண்மணியை(ப்யூபிள்) விரிவுபடுத்தும் சாதனங்கள், உதாரணத்திற்கு, அறுவை சிகிச்சையின் போது மெயோசிஸை தடுப்பதற்கு உதவும் சாதனங்களான ப்யூபிள் டைலேட்டர் மற்றும் ப்யூப்பிளரி வளையங்கள் ஆகிய கருவிகள் பொருத்தப்படுகின்றன.
- அத்திரோபீன் அல்லது ஹோமட்ரோபின் போன்ற கண் சொட்டு மருந்துகள்.
- ஸ்பைண்டெரோடோமி செயல்முறை (சுருங்குதசைகளுக்கான சிகிச்சை முறை).
- கண் மெயோசிஸினை விளைவிக்கக் கூடிய மருந்துகளை மாற்றுதல்.
- ஓபியேட் போன்ற போதை பழக்கத்துக்கு அடிமையான மக்களுக்கு மறுவாழ்வு.