தட்டம்மை - Measles (Rubeola) in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 29, 2018

September 10, 2020

தட்டம்மை
தட்டம்மை

சுருக்கம்

உலகளாவிய குழந்தைகள் மத்தியில் மரணத்திற்கு முக்கிய காரணியாக இருப்பது, மிகவும் மோசமான தட்டம்மை வைரஸ் தொற்று நோயாகும். ஆனால் 40 ஆண்டுகளாக இதற்கு பாதுகாப்பான தடுப்பூசி மருந்துகள், இந்த நோயை தடுக்க கிடைக்கிறது. தட்டம்மை அறிகுறிகள், நோய் தொற்று ஏற்பட்ட ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு பின்னர் அதிகமாகி, ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கும் அதிகமாக காலம் நீடிக்கிறது. இதன் அறிகுறிகளில் இருமல், ஒழுகும் மூக்கு, வலியுடன் கூடிய வெளிச்சம் பட்டால் கூசக்கூடிய சிவந்த கண்கள் ஆகியவை அடங்கும். முதலில் வாய்க்குள் கோபிளிக் புள்ளிகள் தோன்றி பின்பு தலையிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதும் சிரங்குடன் கோபிளிக் புள்ளிகள்(சிவப்பு-பழுப்பு நிற இடத்தால்  சூழப்பட்ட சிறிய வெள்ளை புள்ளிகள்) ஏற்படலாம் மேலும் நோய்த்தொற்றுடைய நபருடன் நேரடி தொடர்பு கொள்வது மூலமும் மற்றும் நோய்த்தொற்றுடையவர்கள் பயன்படுத்திய  பொருட்களைக் கையாளுவதனால்  மறைமுக தொடர்பு மூலமும் இந்த நோய் பரவுகிறது.

இந்த நிலைமையை குணப்படுத்த எந்த மருந்துகளும் இல்லை, பெரும்பாலான மக்கள் 7-10 நாட்களுக்குள் நன்கு குணமாகிவிடுகிறார்கள். காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளிடமிருந்து நிவாரணம் வழங்க மருந்து வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசியே இந்த நோயைத் தடுக்க பாதுகாப்பான வழி, குழந்தைகளுக்கு முதல் பிறந்த நாள் வருவதற்கு முன்னரே அல்லது பிறந்த நாள் முடிந்ததும் விரைவில் இந்த நோய்க்கான முதல் தடுப்பூசியை போட வேண்டும். முழுமையாக பாதுகாப்பிற்கு இரண்டு முறை இந்த தடுப்பூசியை போட வேண்டும். மோசமான உணவுப்பழக்கம், வளச்சியில் குறைபாடு கொண்ட மற்றும் போதுமான அளவு நோயெதிர்ப்பு சக்தி இல்லாத, ஒரு வருடத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும், தட்டம்மை காரணமாக சிக்கல்கள் ஏற்படலாம்.

தட்டம்மை அறிகுறிகள் என்ன - Symptoms of Measles (Rubeola) in Tamil

தொற்று நோய்களின் அறிகுறிகள் நிலையான ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஒன்றுக்கு பின் ஒன்றாக நோய் தொற்று வளரவளர, முறைப்படி  தோன்றும். ஒருவர் வைரஸ் தொற்றுக்கு ஆளானதற்குப் பின்னர் 7-14 நாட்களில் நோய் தாக்குதல் வெளிப்படையாக தெரியும். இந்த காலம் இன்குபேஷன்(அடைகாக்கும்) காலம் என அழைக்கப்படுகிறது.

  • காய்ச்சல்
    தட்டம்மைக்கான முக்கிய அறிகுறி காய்ச்சல். காய்ச்சல் வழக்கமாக பின்வரும் மூன்றில் குறைந்த பட்சம் ஒரு அறிகுறியுடன் சேர்ந்து வரும்:
  • கோபிளிக் புள்ளிகள்
    காய்ச்சல் ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள், கோபிக் பகுதிகள் என்று அழைக்கப்படும் சிறிய வெள்ளை புள்ளிகள் வாய்க்கு உள்ளே தோன்றும். இவை ஒரு தட்டம்மை நோய்த்தொற்றின் ஆரம்ப கட்ட அறிகுறிகளாக இருக்கின்றன.
  • தட்டம்மை சொறி:
    அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்த முதல் மூன்று முதல் ஐந்து நாட்களில் முகத்தில் ஒரு சொறி தோன்றும். ஒரு தட்டையான சிவப்பு புள்ளி நெற்றியில் முடிக்கற்றைக்கு அருகில் தோன்றி கழுத்து, தோள்பட்டை, உடல், கால்கள் மற்றும் பாதங்கள் என கீழ் புறமாக பரவுகிறது. சிவப்பு புள்ளிகளில் சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்பு உடலின் எல்லா பகுதிகளிலும் பரவி அவை ஒன்றாக இணைகின்றன. இது பெரும்பாலும் அதிக காய்ச்சலுடன் சேர்ந்து வருகிறது. சொறி இறுதியில் ஒரு சில நாட்களில் குறைய ஆரம்பிப்பதுடன் காய்ச்சலும் குறைந்து வர தொடங்குகிறது.
  • ஒளி மேலே படுவதால் கூச்சம், தசை வலி போன்ற மற்ற அறிகுறிகள் கூட இருக்கலாம்.

தட்டம்மை நோய் தொற்று பயம் உள்ள இடங்களுக்கு சென்று வந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு, மேலே குறிப்பிட்ட மூன்று அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சல் இருந்தால், மருத்துவரிடம் சென்று உங்கள் பயணத்தை பற்றி குறிப்பிட்டு உங்கள் நோய் பயம் பற்றிய சந்தேகத்தை தெரிவிப்பது மிகவும் அவசியம்.

தட்டம்மை சிகிச்சை - Treatment of Measles in Tamil

தட்டமைக்கு எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையும் கிடையாது மற்றும் அது பொதுவாக 7-10 நாட்களுக்குள் தானகவே குறைந்துவிடும். தட்டம்மைக்கான மருந்துகள் அதன் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கும் நோக்கம் கொண்டவை அதாவது, அறிகுறி சிகிச்சைகள் எனப்படும்.

தட்டமையால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலே இருக்குமாறும் மற்றும் பள்ளிக்கூடம், அலுவலங்கள் அல்லது பொது இடங்களில் குறைந்தது நான்கு நாட்களாவது செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுக்கிறது. முக்கியமாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற தொற்றுநோயை எளிதாக ஏற்கக்கூடியவர்களிடம் தொடர்பு கொள்ளாமல் இருப்பது அவசியமாகும். அறிகுறிகளுக்கான சிகிச்சைகள்:

  • காய்ச்சலை கட்டுப்படுத்தல்
    பராசட்டமால் அல்லது ஐபியூபுரோஃபென் போன்ற மருந்துகள் காய்ச்சலைக் குறைத்து மற்றும் உடல் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுக்கிறது.
  • நீரேற்றம்
    காய்ச்சலினால் ஏற்படும் உடல் வறட்சியை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இருமல் காரணமாக ஏற்படும் தொண்டை வலி நிவாரணத்திற்கு போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
  • கண் பராமரிப்பு
    சுத்தமான பருத்தி துணியை நீரில் நனைத்து மெதுவாக கண்கள், கண் இமைகள் மற்றும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளை துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பிரகாசமான விளக்குகளினால் கண்களுக்கு எரிச்சல் ஏற்படலாம்.
  • இருமல் மற்றும் குளிர்
    குளிர் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் சேர்ந்து தட்டம்மையாக இருந்தால், இந்த நிலையில் மருத்துவர் உங்களுக்கு மருந்துகளை பரிந்துரைப்பார். நீராவி எடுத்தல் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை உட்கொள்வதினால் சளிகள் தளர்த்த மற்றும் நிவாரணமளிக்க உதவுகிறது.
  • பிற நடவடிக்கைகள்
    மூச்சுத் திணறல், இரத்ததுடன் சேர்ந்த வாந்தி, தூக்கமின்மை, குழப்பம், மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கிறது என்றால் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

தட்டம்மை என்ன - What is Measles in Tamil

தட்டம்மை என்பது மிகுந்த தொற்றும் தன்மையுடை தொற்று நோயாகும். பாதிக்கப்பட்ட நபரிடம் நெருக்கமாக தொர்ப்பு கொள்ளுபவர்களில் பத்தில் ஒன்பது நபர்களுக்கு இந்த தொற்றானது பரவுகிறது. இது ஒரு காற்றில் பரவக்கூடிய தொற்று நோயாகும், ஆதலால் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் சுவாசிக்கும்போதும், தும்மும்போது மற்றும் இரும்மும்போது கிருமியானது காற்றில் பரவி நோய்த்தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதன் பிறகு, கிருமியானது காற்றில் இரண்டு மணிநேரங்கள் செயல் தன்மையுடன் இருக்க முடியும்.

தட்டம்மை என்றால் என்ன?

உலகிலேயே குழந்தைகளின் இறப்புகளின் முக்கிய காரணங்களில் ஒன்றாக, இந்த தட்டம்மை தொற்றுநோய் இருக்கிறது. இது மிகவும் வளர்ந்த நாடுகளில் தட்டம்மை தடுப்பூசியின் விளைவினால் குறைவாக காணப்படுக்கிறது, இருப்பினும், சில நேரங்களில் கவனக்குறைவால் அது வெடித்தலுக்குள்ளாகிறது. தட்டம்மை தடுப்பூசி போடாத நபர்களாக இருந்தால், அவர் எந்த வயதுடைய நபராக இருந்தாலும் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படலாம். எனினும், இது பொதுவாக குழந்தைகளில் ஏற்படுகிறது. ஒருமுறை தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வைரஸ் நோயைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.



மேற்கோள்கள்

  1. Robert T. Perry Neal A. Halsey. The Clinical Significance of Measles: A Review . The Journal of Infectious Diseases, Volume 189, Issue Supplement_1, 1 May 2004, Pages S4–S16; Published: 01 May 2004. [Internet] Infectious Diseases Society of America
  2. National Health Service [Internet]. UK; Measles
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Measles (Rubeola)
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Signs and Symptoms
  5. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Measles.
  6. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Travelers' Health
  7. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Measles

தட்டம்மை க்கான மருந்துகள்

Medicines listed below are available for தட்டம்மை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.