சுருக்கம்
ஊட்டச்சத்துக்குறைபாடு என்பது, தவறான ஊட்டச்சத்து என்று எளிமையாக அர்த்தமாகிறது. இது, ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதீத ஊட்டச்சத்து இரண்டையும் உள்ளடக்கிய பரவலான வார்த்தையாகும்.. ஊட்டச்சத்து பற்றாக்குறை, உலகளவில் லட்சக்கணக்கானோரைப் பாதிக்கின்ற உலகளாவிய ஆரோக்கியப் பிரச்சினையாகும். இந்தக்கட்டுரை, உலகம் முழுவதும் அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் மேல் முதன்மையான கவனம் செலுத்துகிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு, பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பாதிக்க முனைகிறது. ஊட்டச்சத்துக்குறைபாட்டின் அறிகுறிகளுள் சோர்வு, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமை மற்றும் கவனக் குறைவு ஆகியவை அடங்கும். சில பிரச்சினைகளில், எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம் என்பதால், ஊட்டச்சத்துக்குறைபாட்டை கண்டறியக் கடினமாக இருக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாடு, முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், சமூக-பொருளாதாரக் காரணிகள் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றின் காரணமாக ஏற்படக் கூடும். சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால், ஊட்டச்சத்துக்குறைபாடு, குழந்தைகளுக்கும், அதே போன்று பெரியவர்களுக்கும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும். ஊட்டச்சத்துக்குறைபாட்டுக்கான சிகிச்சை, ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் முறையாக உடல்நலப் பரிசோதனைகளுக்கு செல்வது உட்பட பல-பரிமாணங்களில் அணுகுவதைப் பின்பற்றுகிறது. சிகிச்சையின் போது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவும், சிகிச்சையில் நல்ல ஒரு பலன் கிடைக்க அவசியமானதாகும். சமூகரீதியான தளத்தில், சமுதாயத்தின், சமூக-பொருளாதார நிலையில் பலவீனமான பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு, மருத்துவ வசதிகள் மற்றும் உணவு ஆதாரங்களை வழங்குவது, ஊட்டச்சத்துக்குறைபாடு பரவுவது, சிக்கல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க உதவுகின்றன.