கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன?
கல்லீரல் புற்றுநோய் அல்லது ஹெபாடிக் புற்றுநோய் என்பது முதல்நிலை புற்றுநோயாகவோ அல்லது இரண்டாம்நிலை புற்றுநோயாகவோ இருக்கலாம். வேறுவிதமாக கூறினால், இந்நிலையின் தோற்றம் கல்லீரலிலோ (முதன்மை) அல்லது மற்ற உறுப்புகளிலிருந்து (இரண்டாம் நிலை) கல்லீரலுக்கு பரவியோ இருக்கலாம். இருப்பினும், இரண்டாம்நிலை வடிவம் முதல் நிலை புற்றுநோயை விட மிகவும் பொதுவாக ஏற்படக்கூடியது.
புற்றுநோய் என்பது உயிரணுக்களில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சி, இதில் செல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் இயங்குமுறை பாதிக்கப்படுகிறது. இது இயல்பாக நடக்கும் உடல் உறுப்புகளின் செயல்களில், செல்களின் குறிக்கிடுதல் ஏற்பட காரணமாகிறது. இருப்பினும், புற்றுநோயின் தாக்கத்தின் விளைவையும் மீறி கல்லீரல் தொடர்ந்து செயல்படலாம், இவ்வாறு இந்நிலையினை நீண்ட காலத்திற்கு கண்டறியமுடியாமல் போகலாம்.
முதன்மை கல்லீரல் புற்றுநோய்களுள் அடங்குபவை:
- ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (ஹெச் சி சி).
- ஃபைப்ரோலாமெல்லர் புற்றுநோய்.
- இன்ட்ராஹெப்டிக் கோலங்கிகோராரினோமா.
- கல்லீரல் அங்கியோரசோமா.
- ஹெபடொபிளாஸ்டோமா.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
மேற்கூறியபடி, முதன்மை கல்லீரல் புற்றுநோய் பெரும்பாலும் கண்டறியமுடியாமால் நீண்ட காலம் இருக்கக்கூடியது. அவற்றின் அறிகுறிகள் பின்வருமாறு
- விவரிக்கப்படாத எடை இழப்பு.
- குறைவாக சாப்பிட்டிருந்தாலும் முழுமையாக இருப்பது போன்ற உணர்வு.
- பசியின்மை.
- வாந்தி.
- மஞ்சள் காமாலை (சிறுநீர், கண்கள் மற்றும் நகங்கள் மஞ்சள் நிறமடைதல்).
- வயிறு பகுதியில் வீக்கம் அல்லது வலி.
- பலவீனம்.
- அரிப்புத்தன்மை கொண்ட தோல்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
கல்லீரல் புற்றுநோய் உறுப்பிற்கு பின்வரும் காரணத்தினால் பாதிப்பினை விளைவிக்கின்றது:
- மது பழக்கத்தால் கல்லீரல் திசு பாதிப்படைந்து சிரோசிஸ் ஏற்படுகின்றது.
- ஹெப்படைடிஸ் வைரஸ்கள் B, C, அல்லது D.
- ஆர்சனிக் வெளிப்பாடு.
- புகை.
- நீரிழிவு.
- குடல் அல்லது மார்பகத்தின் இரண்டாம்நிலை புற்றுநோய்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலையை கண்டறிய மருத்துவர்கள் பின்வரும் சோதனை முறைகளை கையாளுகின்றனர். அவை:
- கல்லீரல் செயல்பாடுகளை கண்டறிவதற்கான இரத்த பரிசோதனை.
- கல்லீரல் திசுப் பரிசோதனை.
- காந்த அதிர்வு விம்பங்கள் (எம் ஆர் ஐ) ஸ்கேன்.
- அப்பர் எண்டோஸ்கோபி.
- சிடி ஸ்கேன்.
- அல்ட்ராசவுண்ட்.
- லேபராஸ்கோபி.
ஒரு சென்டிமீட்டரை விட சிறியதாக இருக்கும் காயங்களுக்கு ஒவ்வொவொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் ஃபாலோ-அப் செய்வது போதுமானது. சில வழக்குகளில், பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களை நீக்குதல் மற்றும் புதிய செல்களின் வளர்ச்சிக்கு துளையிடும் அறுவை சிகிச்சை போன்றவை உதவுகிறது.
கல்லீரல் புற்றுநோய் சிகிச்சை முறை தாக்கத்தின் அளவு மற்றும் நோய் முன்னேற்றத்தின் இயல்பு ஆகியவற்றை சார்ந்தது. எனவே, அதற்கான தேர்வுகள் பின்வரும் வடிவில் உள்ளன:
- பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் சேதமடைந்த செல்களை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்தல்.
- டோனோர்களிடமிருந்து பெற்ற கல்லீரலை கொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தல்.
- டியூமரை கட்டுப்படுத்தக்கூடிய ரேடியோ அல்லது மைக்ரோவேவ் போன்ற இயங்குமுறைகளை உபயோகப்படுத்துதல். இந்த செயல்முறை சாதாரண அதாவது பாதிக்கப்படாத செல்களையும் அழித்துவிடக்கூடியது.
- கீமோதெரபி, அதாவது, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை பொருத்துதல்.
- மருத்துவ காரணங்களினால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளமுடியாதவர்கள் எம்போலிசேஷன் சிகிச்சைக்கு உட்படுதல்.
- செல்களின் வளர்ச்சியைக் குறைக்க குறிவைத்த சிகிச்சை முறையை மேற்கொள்தல்.