சுருக்கம்
கால் வலி என்பது இடுப்பு மற்றும் கணுக்கால் இடையே ஏற்படும் அசௌகரியம் ஆகும். கால் வலி, தனிச்சையான ஒரு நோய் அல்ல அது இரத்த ஓட்டம் பிரச்சினைகள், தசை காயங்கள், எலும்பு முறிவு அல்லது நரம்பு பிரச்சனைகள் போன்ற மற்ற நிலைமைகளின் அறிகுறி ஆகும். கால் வலியின் சரியான காரணத்தை கண்டறிய பல்வேறு வழிகள் உள்ளன. அதில் இரத்த பரிசோதனை, (CT ஸ்கேன்) மற்றும் எக்ஸ்-ரே போன்ற உருவரைவு பரிசோதனை ஆகியவை அடங்கும். இதன் சிகிச்சை ஆனது கால் வலியின் அடிப்படைக் காரணத்தை பொருத்து தீர்மானிக்க படுகிறது. போதுமான ஓய்வு, மருந்துகள், அறுவை சிகிச்சை, பிசியோதெரபி, கால் வார்ப்பு அணிவது அல்லது நடை-காலனி ஆகியவை இதன் சிகிச்சையின் பட்டியலில் அடங்கும். சோர்வு அல்லது சதைபிடிப்பு போன்ற தற்காலிக நிலைமைகளினால் ஏற்படும் வலி ஓய்வு எடுத்து மற்றும் ஐஸ் கட்டி ஒத்தடத்தை பயன்பதுத்தி சரி செய்து விடலாம்