சுருக்கம்
முதியவர்களுக்கு மூட்டு வலி மிகவும் பொதுவானது. இது தினசரி வேலைகள் மேற்கொள்ளும் போதொ, ஓய்வு அல்லது நடைபயிற்சி செய்யும் போதோ கால் மூட்டுகளில் தோன்றும் வலி ஆகும். பெரும்பாலான நேரங்களில், முதுமையில் மூட்டை சுற்றியுள்ள திசுக்கள் பலவீனமாவதனால் சேதம் அடைகிறது, இதுவே மூட்டு வழிக்கு காரணம். ஒரு விபத்து அல்லது அதிகப்படியான வேலையினாலும் மூட்டு வலி வரலாம். மூட்டுவலியை கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாறு, இரத்த பரிசோதனைகள், எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ராசோனோகிராஃபி போன்ற சில கதிரியக்க சோதனைகள் உட்படுத்தலாம்.மூட்டு வலியின் அடிப்படை காரணத்தை கண்டறநிது சிகிச்சை அளிக்கப்படும்.உதாரணமாக பருமனாக உள்ளவர்களுக்கு இடை குறைத்து, மீதமுள்ள அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் ஐஸ்க்கட்டிகள் ஒத்திடம் மற்றும் ஒய்வு தேவை படலாம் . பிசியோதெரபி மற்றும் குத்தூசி மருத்துவம் போன்ற சிகிச்சைகள் மூட்டுவலிக்கு பரிந்துரைக்கப்படலாம். அதையும் தாண்டி மூட்டுவலி நீடித்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மூட்டு வலியின் முன்கணிப்பு மிகவும் நல்லது. என்றாலும், சரியான நேரத்தில் கண்டறியா விட்டால், வலி மோசமாகும் அல்லது மூட்டை முழுமையாக சேதப்படுதிவிடும். நடப்பது, ஓடுவது, விளையாடுவது மற்றும் அன்றாட வேலைகள் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு மூட்டு மிக முக்கியம். ஆகவே முழங்காலுக்கு நிரந்தர சேதத்தை தடுக்க டாக்டரை உடனடியாக அணுகுவது நல்லது