சிறுநீரக நோய்த்தொற்று என்றால் என்ன?
சிறுநீரக நோய் தொற்று என்பது சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பாக்டீரியாவின் படையெடுப்பு அல்லது பாக்டீரியாவின் இருப்பு ஆகும், இந்த தொற்று சிறுநீர்ப்பையில் துவங்கி சிறுநீரகங்கள் வரை பரவுகிறது. இது சிறுநீரக நுண்குழல் அழற்சி எனவும் குறிப்பிடப்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
சிறுநீரக நோய்த்தொற்றுகள் என்பது பொதுவானது மற்றும் இதில் பின்வரும் பொதுவான அறிகுறிகள் காணப்படுகின்றன:
- சீழ் அல்லது சிறுநீருடன் வெளியேறும் இரத்தம்.
- எரிச்சல் தன்மை மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி.
- கெட்ட நாற்றத்துடன் கூடிய வெண்படலாமாக வெளியேறும் சிறுநீர்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- பின் முதுகில் மற்றும் அடிவயிற்றில் ஏற்படும் வலி.
- அதிக காய்ச்சலுடன் கூடிய சளி.
- வயிற்றில் ஏற்படும் அசௌகரியம்.
- பசியிழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சிறுநீரக தொற்றானது பாக்டீரியாவால் ஏற்படுவதோடு அரிதாக, சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பின் தோன்றுகிறது. இந்த தொற்றுக்கான அபாயம் ஆண்களை விட பெண்களிடத்திலேயே அதிகமாக இருக்கிறது, ஆசனவாய் மற்றும் சிறுநீர்க்குழாய் துவாரம் ஆகிய இரண்டும் அருகாமையில் இருப்பதால், பாக்டீரியா சிறுநீர்ப்பையை அடைவதற்கு ஏதுவாக இருக்கின்றது. கர்ப்பிணிகளே சற்று அதிகமான அபாயத்தில் இருக்கக்கூடியவர்கள், ஏனெனில் சிறுநீரகக் குழாயில் குழந்தை அழுத்தம் கொடுப்பதால் ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு தடுக்கப்படுகிறது. சிறுநீரக தொற்றினால் ஏற்படும் முக்கிய காரணிகள் பின்வருமாறு:
- சிறுநீரக குழாயில் உருவாகும் சிறுநீரக கல்.
- விரிவடைந்த புரோஸ்டேட் அல்லது அதில் ஏற்படும் நோய்த்தொற்று.
- நெரிந்த சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்க்குழாயின் அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகள்.
- ரிஃப்ளக்ஸ், இங்கு சிறுநீர் சிறுநீரகப்பையிலிருந்து சிறுநீரகத்திற்கு திரும்பி செல்லுதல்.
- சிறுநீர்ப்பையிளிருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேறாத நிலை.
- பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு.
- சிறுநீர்ப்பையில் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பு.
- சிறுநீர் வடிகுழாயைப் பயன்படுத்துதல்.
சிறுநீரக நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியம் ஈ.கோலி ஆகும்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நிலையினை உரிய நேரத்தில் கண்டறிதல் மற்றும் சிறுநீரகத்துக்கான சிகிச்சை அளித்தல் அவசியம், ஏனெனில் சிகிச்சை காலம் சற்று தாமதமானால் இது வாழ்க்கை-அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
- சீழ், இரத்தம் மற்றும் பாக்டீரியாக்களை கண்டறிய சிறுநீர் பரிசோதனை.
- பாக்டீரியா வகையினை அறிய சிறுநீரக கலாச்சார சோதனை.
- கற்கள் அல்லது அமைப்பின் குறைபாடுகளை சோதனை செய்ய அல்ட்ராசவுண்ட் மற்றும் சி டி ஸ்கேன் மேற்கொள்தல் அவசியம்.
- ஏதேனும் அடைப்புகள் இருப்பின் அதை கண்டறிய சிஸ்டோரெத்ரோகிராம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- சிறுநீரகத்தின் அமைப்பு, மோரோபோலஜி மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சரிபார்க்க டி.எம்.எஸ்.ஏ (டிமர்காப்டோசுசினிக் அமிலம்) சிண்டிகிராஃபிக் சிகிச்சை மேற்கொள்ளப்படுதல்.
சிறுநீரக தொற்றுக்கு பின்வரும் சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது:
- வாய்வழி ஆண்டிபையோட்டிக் பாக்டீரியல் தொற்று நோய்களை கட்டுப்படுத்தவும், அதனால் உண்டாகும் காய்ச்சலை கட்டுப்படுத்த காய்ச்சல் ஆண்டிபிரேட்டிக்குகளும் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான தொற்று ஏற்பட்டால், நரம்பு வழியாக (நரம்புக்குள்) ஆண்டிபையோட்டிக்குகள் மற்றும் திரவங்களை உட்செலுத்த மருத்துவமனையில் இருப்பது அவசியமாகும்.
- அடிக்கடி ஏற்படும் சிறுநீரக தொற்றுக்கு, நோயின் அடிப்படை காரணியை கண்டறிய சிறுநீரக மருத்துவரை கலந்தாலோசித்தல் நன்று.
- சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் இந்த சிறுநீரக தொற்றுக்களை நீங்கள் தவிர்க்கலாம். அதாவது அதிக தண்ணீர் அருந்துதல், பிறப்புறுப்புகளில் வாசனை திரவியம் பயன்படுத்துதலை தவிர்த்தல், சிறுநீரகம் மற்றும் மலம் கழித்த உடன் முன்பிருந்து பின்புறம் வரை நன்றாக சுத்தம் செய்தல் போன்றவைகளை பின்பற்றுதல் நன்று. ஒருவேளை இதன் அறிகுறிகள் அதிகரித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை சந்திப்பது சிக்கலைகளை தவிர்க்க உதவும்.