ஸ்போராரிக் கெராடோசிஸ் என்றால் என்ன?
ஸ்போராரிக் கெராடோசிஸ் என்பது பொதுவாக முதியவர்களிடத்தில் காணப்படும் ஒரு பொதுவான, புற்றுநோய் அல்லாத தோல் வளர்ச்சியாகும். பெரும்பாலான நிகழ்வுகளில், இது பாதிப்பில்லாததே ஆகும். ஆனால் இது கண்ணுக்கு இனிமை இல்லாத வகையில் தோற்றமளிக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த வகை வளர்ச்சி முகம், முதுகு, தோள்பட்டைஅல்லது மார்பில் தோன்றக்கூடும். இது உச்சந்தலையில் குறைவாகவே காணப்படுகிறது.
- இது மெழுகு போன்ற புடைத்திருக்கும் தோற்றத்தை கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி பொதுவாக சில சென்டிமீட்டர் அளவில் இருக்கும்.
- வட்ட அல்லது ஓவல் வளர்ச்சியின் வண்ணம் சில நேரங்களில் கருப்பு, வெயிற்பட்ட மேனிறம் அல்லது பழுப்பு நிறமாக இருக்கலாம்.
- இதன் வளர்ச்சி பொதுவாக பசை போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதாக விவரிக்கப்படுகின்றது.
- இவை அரிதாகவே வலி ஏற்படுத்தக்கூடும். ஆனால், குறிப்பாக ஆடைகள் அல்லது அணிகலன்கள் உடலை உரசும் போது அரிப்புத் தன்மை உடையதாகும்.
- தோற்றத்தின் அடிப்படையில், இது பல உருவவியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த அரிதான நிலை ஏற்படுவதற்கான சரியான காரணம் எதுவும் இல்லை. இருப்பினும், முதியவர்கள் பொதுவாக இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
- குடும்பத்தின் மருத்துவ பின்புலம் இதனை ஏற்படுத்தும் அறியப்பட்ட ஆபத்து காரணி ஆகும்.
- போதாத சான்றுகள், இந்த வளர்ச்சி தொடர்ச்சியான சூரிய வெளிப்பாட்டினாள் தோன்றும் என்று கூறுகிறது.
- இந்த வளர்ச்சியானது தொற்றும் தன்மை உடையது அல்ல, எனவே தொடர்பு மூலமாக இது பரவாது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
சருமத்தில் உள்ள திட்டுகளை சோதித்து மருத்துவர் இந்த நிலையை கண்டறியக்கூடும். கரும்புற்றுநோய் அல்லது மெலனோமா அல்லது வேறு எந்த புற்றுநோயும் இல்லை என்பதை உறுதி செய்ய, திசு பரிசோதனை அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக, பிற நோய் கண்டறிதல் பரிசோதனைகள் தேவையில்லை.
வழக்கமாக, இதற்கு சிகிச்சை தேவைப்படுவதில்லை. மிகவும் அரிப்புடையதாக அல்லது வலி மிகுந்ததாக இருந்தால் இந்த வளர்ச்சியை அகற்ற வேண்டும். ஒப்பனை ரீதியான காரணங்களுக்கும் கூட, ஸ்போராரிக் கெராடோசிஸ் அகற்றப்பட வேண்டும். இந்த வளர்ச்சி அறுவை சிகிச்சை மூலம் பல வழிகளில் அகற்றப்படுகிறது.
- அவை லேசர்கள் அல்லது சீரொளி உதவியுடன் அல்லது திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தும் உறைநிலை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்படலாம்.
- இந்த வளர்ச்சியை அகற்றுவதற்கான மற்றொரு முறை மின் அறுவை சிகிச்சையாகும். கெராடோசிஸை அகற்றுவதற்காக மின்சாரம் பயன்படுத்துகிறது.
- மற்றொரு அறுவை சிகிச்சை முறை சுரண்டல் ஆகும். இதில் வளர்ச்சி சுரண்டப்படுகிறது.
இந்த வளர்ச்சி, அதே இடத்தில் மீண்டும் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இல்லையென்றாலும், இது உங்கள் உடலின் மற்ற பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது.