இரும்புச்சத்து குறைபாடு என்றால் என்ன?
உடலில் இரும்பின் அளவு சராசரியாக ஆண்களில் 13.5 முதல் 17.5 கிராம் / டிஎல் வரை மற்றும் பெண்களில் 12.0 முதல் 15.5 கிராம் / டிஎல் வரையிலான வரம்பில் இருக்கும்.ஒருவர்க்கு இந்த அளவுக்கு கீழ் இருப்பின், அவருக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.அதன் பிற செயல்பாடுகளை தவிர, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் ஒரு முக்கிய கூறுபாடாக அமைகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவாக இரும்புச்சத்து குறைபாடு பின்வரும் வகையில் வெளிப்படுகிறது:
- குறைவான ஹீமோகுளோபின் காரணமாக ஏற்படும் இரத்தசோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த அணுக்கள் தவறான வடிவமைப்பில் மாறக்கூடும்.
- சோர்வு மற்றும் களைப்பு.
- எளிதில் நோய்த்தாக்குதலுக்கு வழிவகுக்கூடிய குறைந்த நோயெதிர்ப்பு சக்தி.
- வெளிறிய தோல்.
- முடி கொட்டுதல்.
- சிவந்த, அழற்சிக்கு உட்பட்ட நாக்கு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இரும்புச் சத்து உள்ளீர்ப்புக்கேடு ஆகும்.பொதுவாக சைவ உணவு உண்பவர்களின் உணவில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது.கால்சியமும் கூட இரும்புச்சத்து உறிஞ்சுதலில் குறுக்கிடக்கூடும்.எனவே, பால் நிறைந்த உணவுப் பொருட்கள் அல்லது பால் உடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது.கர்ப்பம் போன்ற சில நிலைகளில் அதிக அளவிலான இரும்புச்சத்து உட்கொள்ள வேண்டும்.பெரும் அதிர்ச்சி, உடலில் ஏற்படும் பெரும் காயங்கள் அல்லது அறுவை சிகிச்சையின் போது, இரத்த இழப்பு அதிகமாக ஏற்பட்டு, ஒருவற்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம்.எனவே, பிரசவத்திற்குப் பின் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகிறது.மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த இழப்பு என்பது பெண்களில் நிலவும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு பங்களிக்கும் மற்றொரு காரணியாகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இதன் கண்டறிதல் மருத்துவ பரிசோதனை மூலம் தொடங்குகிறது.இரத்தப் பரிசோதனை மற்றும் ஹீமோகுளோபின் மற்றும் ஹீமொட்டோகிரிட் சோதனைகள் பொதுவாக இரும்புச்சத்து குறைபாட்டை கண்டறிய போதுமானவையாகும்.இரும்புச்சத்து பிற்சேர்க்கைகள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது சிகிச்சையில் உள்ளடக்கியது ஆகும்.மருத்தவ குறிப்பின்றி வழங்கப்படும் மருந்துகளாக இரும்புச்சத்து மாத்திரைகள் கிடைக்கின்றன.இருப்பினும், இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால், ஒருவர் கவனமாக இதனை உட்கொள்ள வேண்டும்.இரும்பூச்சத்தின் உறிஞ்சுதலுக்கு இடையூறாக இருப்பதால், இரும்புச்சத்து பிற்சேர்க்கைகளை பாலுடன் உட்கொள்வதை தவிர்த்தல் வேண்டும்.இரத்த இழப்பு காரணமாக இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால், இரத்த மாற்றம் தேவைப்படக்கூடும்.