கருப்பையக வளர்ச்சி மந்தநிலை (இன்ட்ராயூட்டரைன் குரோத் ரிடார்டேஷன்) - Intrauterine Growth Retardation in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 03, 2018

March 06, 2020

கருப்பையக வளர்ச்சி மந்தநிலை
கருப்பையக வளர்ச்சி மந்தநிலை

கருப்பையக வளர்ச்சி மந்தநிலை என்றால் என்ன?

சில நேரங்களில், கர்ப்ப காலத்தில், கரு / குழந்தை எதிர்பார்த்த விகிதத்தில் வளர்வதில்லை. வளர்ச்சியில் ஏற்படும் இந்த தாமதம் கருப்பையக வளர்ச்சி மந்தநிலை (ஐ.யு.ஜி.ஆர்) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை இரண்டு வகைப்படும்: கருவின் உடல் விகிதாச்சாரமாக சிறியதாக இருக்கும் போது, ​​இது சமச்சீரான ஐ.யு.ஜி.ஆர் என்று அழைக்கப்படுகிறது மற்றும் கருவின் உடல் சிறிய அளவிலும் தலை மற்றும் மூளை சாதாரண அளவில் இருக்கும் போது, ​​அது சமச்சீரற்ற ஐ.யு.ஜி.ஆர் என்று அழைக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கருவின் சில அல்லது அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் தாமதமான வளர்ச்சியானது ஒரு அல்ட்ராசவுண்ட் சோதனையில் தெரிகிறது, இது ஐ.யு.ஜி.ஆர் நோய் இருப்பதை அறிவுறுத்துகிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஐ.யு.ஜி.ஆர் ஏற்படுவதற்கான காரணங்கள் நஞ்சுக்கொடி வழி அல்லது தாய்வழி காரணிகளாக இருக்கலாம். பொதுவான காரணங்கள் சில பின்வருமாறு:

  • தாய்வழி மருத்துவ நிலைமைகள்:
  1. நீரிழிவு நோய் (டயாபெட்டீஸ் மெல்லிடஸ்).
  2. நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம்.
  3. ஆக்கிகேன் குறைபாட்டினால் ஏற்படும் கடுமையான நுரையீரல் நோய்.
  4. ஆரம்ப கர்ப்பகாலத்தில் உண்டாகும் ஜன்னி அல்லது வலிப்பு நோய்.
  5. குடல் அழற்சி நோய்.
  6. நாள்பட்ட சிறுநீரக நோய்.
  7. உறுப்புசார் லூபஸ் எரிதிமடோசஸ்.
  • நஞ்சுக்கொடி ஒற்றை தொப்புள்சார் தமனி, பல திசு அழிவுகள் போன்ற நிலைகள்.
  • ராபர்ட்ஸ் சிண்ட்ரோம்; டிரைசோமி 13, 18 அல்லது 21; டர்னர்'ஸ் சிண்ட்ரோம் போன்ற குழந்தைகளில் உண்டாகும் நிலைகள்

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை மேற்கொண்ட பின்னர், அந்த கீழ்கொடுக்க்கப்பட்டுள்ள பரிசோதனைகளில் ஆய்வு முடிவுகளைக் கொண்டு மருத்துவரால் இந்த நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது:

  • முழுமையான இரத்த எண்ணிக்கை (சி.பி.சி) மற்றும் இரத்த வேதியியல் குழு.
  • நோய்த்தொற்றுக்கான .நோய்ப்பாதிப்பு ஆய்வு: டோக்சோப்ளாஸ்மா கோன்டி, ரூபெல்லா, சைட்டோமெகல்லோவைரஸ் மற்றும் ஹெச்.எஸ்.வி-1 மற்றும் ஹெச்.எஸ்.வி-2 டைட்டர்களை உள்ளடக்கிய தாய்வழி ஆன்டிபாடி டைட்டர்கள் (ஐ.ஜி எம் மற்றும் ஐ.ஜி ஜி).
  • சினைக்கரு நேர்மச்சோதனை (தூண்டுதலுக்கு முன்பு கருவின் முதிர்ச்சியை சோதிக்க உதவுகிறது).
  • கருப்பை உயரத்தை அளவிடுதல் (கருப்பையின் மேல்பகுதியில் இருந்து தொடை எலும்பின் மேல்பகுதி வரையில் உள்ள தாயின் வயிறு).
  • அல்ட்ராசவுண்ட் பரிசோதனை.
  • உயிரியல் சார்ந்த விவரம்.
  • டாப்ளர் வெலோசிமெட்ரி

ஐ.யு.ஜி.ஆர் நோயின் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

  • மகப்பேறுக்கு முற்பட்ட காலத்தின் போது மேலாண்மை:
    • துணை ஆக்ஸிஜன் ஒரு குறுகிய காலத்திற்கு கர்ப்பத்தை நீடிக்க உதவும்.
    • கருவிற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க படுக்கை ஓய்வு.         
    • தாய்வழி நோய் மேலாண்மை மற்றும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வழங்குதல்.
    • கருவின் நுரையீரல் முதிர்ச்சியை ஊக்குவிக்க ஸ்ட்டீராய்டுகள் உதவுகின்றன.
    • குறைந்த அளவிலான ஆஸ்பிரின் சிகிச்சை ஒருவருக்கு ஐ.யு.ஜி.ஆர் நோயின் ஆபத்து காரணிகளை குறைக்கிறது.
  • பிரசவத்தின் போது மேலாண்மை:
  1. பிரசவ காலம் முழுவதும் கருவின் இதய துடிப்பு பற்றிய மிக உன்னிப்பான கண்காணிப்பு.
  2. சிசுப்பை இணைவு பரிந்துரைக்கப்படுகிறது.
  3. கருப்பை அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
  4. கருப்பையக ஆக்சிகன் குறைவு மற்றும் வெப்பக்குறைவு காரணமாக ஏற்படும் இரதச் சக்கரைக் குறைவு மற்றும் இரத்த சிவப்பணு மிகை போன்ற பல நிலைகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்.
  5. கண்காணித்தலின் போது ஏதேனும் பிரச்சனை தோன்றினால், பிரசவத்திற்கு சீக்கிரமாக தூண்டுதல்.



மேற்கோள்கள்

  1. American Family Physician. [Internet]. Leawood, KS; Intrauterine Growth Retardation.
  2. Deepak Sharma. et al. Intrauterine Growth Restriction: Antenatal and Postnatal Aspects. Clin Med Insights Pediatr. 2016; 10: 67–83. PMID: 27441006.
  3. The Nemours Foundation. [Internet]. Shutterstock, New York, United States; Intrauterine Growth Restriction (IUGR).
  4. Laskowska M, Laskowska K, Leszczynska-Gorzelak B, Oleszczuk J (2011). Asymmetric dimethylarginine in normotensive pregnant women with isolated fetal intrauterine growth restriction: a comparison with preeclamptic women with and without intrauterine growth restriction.. J Matern Fetal Neonatal Med 24: 936–942.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Intrauterine growth restriction.

கருப்பையக வளர்ச்சி மந்தநிலை (இன்ட்ராயூட்டரைன் குரோத் ரிடார்டேஷன்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for கருப்பையக வளர்ச்சி மந்தநிலை (இன்ட்ராயூட்டரைன் குரோத் ரிடார்டேஷன்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.