கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் என்றால் என்ன?
கால் விரல் நகம் விரலின் பக்கவாட்டிலோ மூலையிலோ வளைந்து தோலுக்கு உள்ளாக வளர்ந்து இருப்பதே கால்விரல்கள் உள்நோக்கி வளர்தல் ஆகும்.இந்தப் பிரச்சனை கால்களின் பெருவிரல்களைத் தான் அதிகம் பாதிக்கிறது.உள்வளர்ந்த நகங்கள் தோலுக்கு உள்ளாக செல்லும் போது பாக்டீரியாக்கள் உள்ளே நுழையக்கூடும்.இதனால் துர்நாற்றம் மற்றும் வெளியேற்றத்துடன் கூடிய நோய்த் தொற்று ஏற்படக்கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் ஆரம்ப நிலை அறிகுறிகள் பின்வருமாறு:
- நகத்திற்கு பக்கவாட்டில் உள்ள தோல் மென்மையாகவும், வீங்கியும் காணப்படும்.
- கால் விரலின் மீது அழுத்தம் கொடுக்கும் போது, வலி ஏற்படுகிறது.
- கால்விரலைச் சுற்றி திரவம் திரள்தல்.
விரல் பாதிக்கப்பட்டிருந்தால், பின்வரும் அறிகுறிகள் இருக்கலாம்:
- இரத்தப்போக்கு.
- சீழ் வடிதல்.
- நகத்தை சுற்றியுள்ள தோல் அதிகப்படியாக வளர்தல்.
- நடக்கும் போது வலி இருத்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இது பெரும்பாலும் வியர்வை படிந்த கால்களில் ஏற்படுகின்றன. இதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- பெருவிரல் மீது அழுத்தம் ஏற்படுத்தும் வகையிலான காலணிகள்.
- கால் விரலை கத்தியால் குத்தும் போது அல்லது கனமான பொருள் கால் விரலின் மீது விழும் போது ஏற்படும் கால் விரல் காயம்.
- ஒழுங்கற்ற மற்றும் வளைந்த கால் விரல் நகம்.
- சரியாக வெட்டப்படாத கால் விரல் நகம்.
- பாதங்களை சுத்தமின்றி வைத்திருத்தல்.
- எப்போதாவது, இது பரம்பரை ரீதியாக வரக்கூடும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
வழக்கமாக, மருத்துவர் உடல் பரிசோதனை மூலம் கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தலை கண்டறியக்கூடும்.சில நேரங்களில், தோலில் உள் வளர்ந்த நகத்தின் அளவை சோதிக்க எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை தேவைப்படலாம்.
வீட்டு பராமரிப்பு சிகிச்சைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
- ஒரு நாளைக்கு 3-4 முறை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தல்.
- நாள் முழுவதும் கால்களை ஈரத் தன்மை இன்றி வைத்தல்.
- சௌகரியமான காலணிகளை அணிதல்.
- வலியிலிருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகளை பயன்படுத்துதல்.
2-3 நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால், மருத்துவரை அணுகுவதே சிறந்ததாகும்.உள் வளர்ந்த விரல் நகங்களின் பாதிப்பு நீடித்து இருந்தால், மருத்துவர் நகத்தின் சிறு பகுதி, நகப்படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மென்மையான திசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்.
பெரும்பாலான மக்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் குறைந்த வலியையே அனுபவிக்கின்றனர்.அவர்கள் மறு நாளே தங்கள் அன்றாட வேலைகளைத் தொடங்கலாம்.