கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம் என்றால் என்ன?
அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் அமில சுத்திகரிப்பு, கர்ப்ப காலத்தில் மிகவும் பொதுவானவை, இது கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெண்களை பாதிக்கிறது.இது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக ஏற்படலாம் மற்றும் இது குழந்தையின் உருவளவு அதிகரிப்பதன் காரணமாகக்கூட ஏற்படலாம்.இது கருப்பையின் அழுத்தத்தை அதிகரித்து வயிற்றுக்கு எதிராக தள்ளச் செய்கிறது.அகீரத்தினால் ஏற்படும் கடுமையான சிக்கல்கள் மிகவும் அரிதானவை ஆனால் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் ஏற்படலாம் மற்றும் இது கடுமையாகவும் அசௌகரியமாகவும் இருக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
குறிப்பாக உணவு அருந்திய பிறகு அல்லது ஏதேனும் குடித்தபிறகு கர்ப்பிணிப் பெண்கள் கீழ்கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகளைக் காணலாம்
- மார்பேலும்பைச் சுற்றி எரிச்சல் உணர்வு, இது தொண்டை வரை நீடிக்கலாம்.
- வயிறு உப்பல்.
- ஏப்பம் விடுதல்.
- அமில மீள்கொதிப்பு
இந்த அறிகுறிகள் கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும் ஆனால் பொதுவாக மூன்றாவது மூன்று மாதங்களில் காணப்படுகின்றன.இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த கர்ப்ப காலத்தை அனுப்பவிக்கும் பெண்களில், எல்லா கரு மும்மாதத்திலும், அஜீரணம் பொதுவாக உள்ளது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
கர்ப்ப காலத்தில் அஜீரண அதிகரிப்புக்கான முக்கிய காரணங்கள் அடங்கும்.
- கருப்பை விரிவடைவதால் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கிறது, இதன் காரணமாக உணவுக்குழாய் சுருக்குத் தசையில் தளர்ச்சி ஏற்படுகிறது, இதனால் இரைப்பை உள்ளடக்கங்கள் உணவுக்குழாய்க்குள் மீண்டும் செல்கிறது.
- கர்ப்பகால ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜென் முன்னிலையில், சுற்றும் ப்ரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதனால் பொதுவான அழுத்தம் பாதிக்கிறது அல்லது உணவுக்குழாய் சுருக்குத் தசையில் ஏற்படும் தளர்ச்சியின் மாற்றங்கள் காரணமாக இரைப்பை அமில மீள்கொதிப்பு ஏற்படுகிறது.மேலும், ப்ரோஜெஸ்ட்டிரோன் வயிற்றில் இருக்கும் முரிதுவான தசைகள் மீது செயல்படுவதால், வயிற்றில் இருந்து உணவு வெளியேறுவது தாமதமாகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோய் கண்டறிதல் முக்கியமாக அறிகுறிகளின் அடிப்படையில் ஏற்படுகிறது.கடுமையான நோய் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, வரலாற்றுப் பரீட்சை மற்றும் உடல் பரிசோதனைக்குப் பிறகு மேல் இரைப்பை அகநோக்கியல் பரிந்துரைக்கப்படலாம்.
உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும். அவை பின்வருமாறு:
- சீக்கிரமாக இரவு உணவு அருந்துதல்: அஜீரணத்திற்கான அறிகுறிகள் இரவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.எனவே, படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது இரண்டு மணிநேரம் முன்பு இரவு உணவு சாப்பிடுவது இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
- அதிகமான உணவு உண்வதை தவிர்த்தல்: ஒரே நேரத்தில் அதிகமான உணவு அருந்துவதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக அதிக தடவை உணவு உண்ணலாம்.
- நேராக இருத்தல்: சாப்பிடும் போது நேராக உட்காருங்கள்.இது வயிற்றில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
- சாப்பிடும்போது தண்ணீர் அருந்தாமல் இருத்தல்: இராய்ப்பை அமிலத்தை தண்ணீர் நீர்க்கச் செய்யும் என்பதால், சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது அஜீரணத்தின் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
- உணவை அவசர அவசரமாக சாப்பிடாதீர்கள்: மெதுவாக சாப்பிடுங்கள் மற்றும் முழுங்குவதற்கு முன் உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள், இது விரைவான செரிமானத்திற்கு உதவுகிறது.
- காரமான உணவு, மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்; இவை அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும்.
தடுப்பு நடவடிக்கைகள் பயனுள்ளதாக இல்லாதபோது, அஜீரணத்தின் அறிகுறிகள் துயரத்தை அதிகரிக்கின்றன.இதனால் ஏற்படும் அறிகுறிகளை சிகிச்சையளிக்க சில மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை:
- வயிற்றில் அமில அளவை சீராக்க அமிலமுறிகள்.
- அமில மீள்கொதிப்பு காரணமாக உண்டாகும் அஜீரணத்தை விடுவிப்பதற்காக அல்ஜினேட்ஸ்.
- இரைப்பை அமிலங்களின் சுரப்பைக் குறைக்க ஹெச்2- ஏற்பி பிளாக்கர்கள்.
- அமில உற்பத்தி சம்பந்தப்பட்ட வயிற்று என்சைம்களை தடுக்கும் புரோட்டான் பம்ப் தடுப்பான்கள்.