ஹைபர்கால்செமியா என்றால் என்ன?
உடலில் சரியான மொத்த சீரத்தின் கால்சியத்தின் சாதாரண வரம்பை விட அதிகமாகவோ அல்லது இரத்தத்தில் உயர்ந்த அயனியாக்கப்பட்ட கால்சியம் அளவானது அதிகம் காணப்படுவது ஹைபர்கால்செமியாவைக் குறிக்கிறது. பொதுவாக இந்த ஹைபர்கால்செமியா மக்கள் தொகையில் 0.5% முதல் 1% வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள அதிக கால்சியம், இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளை பாதித்து, மேலும் அது எலும்புளை பலவீனமாக்குகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவான அறிகுறிகள்:
- மத்திய நரம்பு அமைப்பு: மயக்கம், சோம்பல், கோமா, மனநிலையில் மாற்றங்கள், மனநோய்.
- செரிமான அமைப்பு: அனோரெக்ஸியா எனப்படுகிற பசியற்ற உளநோய் , அமிலப் பெப்டிக் நோய், மலச்சிக்கல், கணைய அழற்சி
- சிறுநீரகங்கள்: நரம்பியல் அழற்சி, பாலியூரியா.
- தசைக்கூட்டு அமைப்பு: மூட்டுவலி, தசைப்பிடிப்பு நோய்.
- இரத்த நாள அமைப்பு: உயர் இரத்த அழுத்தம்.
அவ்வப்போது ஏற்படும் கடுமையான அறிகுறிகளாவன:
- சைனஸ் பிரச்சனை.
- இதயத்திற்கு இரத்தத்தை கடத்துவதில் ஏற்படும் இடையூறுகள்.
- மாரடைப்பு ஏற்படுவதற்கான ஒத்த அறிகுறிகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஹைபர்கால்செமியாவின் பொதுவான காரணங்கள் அடங்கியவை:
- சுரப்பியின் விரிவாக்கத்தின் காரணமாக அதிகமாக சுரக்கும் மிகைப்பு தைராய்டு சுரப்பிகள்.
- பராதைராய்டு சுரப்பிகள் ஒன்றின் வளர்ச்சியின் காரணமாக பராதைராய்டு ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்தி செய்தல்.
மற்ற காரணங்கள் அடங்கியவை:
- நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற புற்றுநோய் உடலில் எலும்புமண்டலங்களுக்கு பரவுவதால் இந்நோய் ஏற்படலாம்.
- காசநோய் மற்றும் இணைப்புத்திசுப் புற்று போன்ற நோய்கள்.
- பரம்பரை காரணிகள்.
- கால்சியம் மற்றும் வைட்டமின் டி மருந்துகள், லித்தியம் மற்றும் டையூரிடிக் மருந்துகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளல்.
- படுக்கையில் அசைவில்லாதிருத்தல் அல்லது வாரக்கணக்கில் செயலற்ற நிலையில் இருத்தல்.
- நாள்பட்ட சிறுநீரக நோய்.
- கடுமையான நீரிழப்பு.
- மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த ஹைபர்கால்செமியா பிரச்சனை அதிக ஆபத்து ஏற்படுத்தும் காரணியாக உள்ளது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஒரு வழக்கமான இரத்த பரிசோதனையானது, முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஹைபர்கால்செமியா நோயைக் கண்டறிய உதவும் மற்ற சில ஆய்வுகளும் பரிந்துரைக்கப்படுகிறது.
உடலில் சந்தேகத்திற்குரிய நோய்களின் அடிப்படை சுகாதார நிலையை கண்டறிய உங்கள் மருத்துவர் கூடுதல் சோதனைகளை பரிந்துரைக்கலாம்.
ஆய்வுகள் அடங்கியவை:
- சீரம் கால்சியம், பாராதைராய்டு ஹார்மோன் மற்றும் வைட்டமின் டி அளவை சோதிக்கிற பரிசோதனைகள்.
- சிறுநீர் கால்சியம் அளவை அளவிடுவதற்கான சோதனைகள்.
உங்கள் இரத்தத்தில் இருக்கும் கால்சியம் அளவை கட்டுப்படுத்த மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
முதல் நிலை உயர் பாராதைராய்டிசத்தை பொறுத்தவரையில், நோய் பாதித்தவருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
கடுமையான ஹைபர்கால்செமீமியா நிலையில் நரம்பு திரவ சிகிச்சை மற்றும் பிஸ்ஃபோஸ்ஃபோனேட்டுகள், ஸ்டீராய்டுகள் அல்லது சிறுநீரிறக்கி மருந்துகள் போன்ற மருந்துகளும் தேவைப்படலாம்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் உங்கள் மருத்துவர் டையாலிசிஸ் செய்ய ஆலோசனை கூறலாம்.