ஹண்டிங்டன்'ஸ் நோய் என்றால் என்ன?
ஹண்டிங்டன்'ஸ் நோய் என்பது ஒரு நரம்பியல் மரபுவழி நோய் ஆகும், இது ஹெச்.டி.டி என்னும் ஒற்றை குறைபாடுள்ள மரபணு மூலம் ஏற்படுகிறது மற்றும் இது நரம்பு உயிரணுக்களின் தொடர்ச்சியான முறிவுக்கு வழிவகுக்கிறது.ஹண்டிங்டன்'ஸ் நோய் ஒரு நோயாளியின் சாதாரண திறன்களைக் கட்டுப்படுத்துகிறது, அவை இயக்கம், சிந்தனை மற்றும் மனநல குறைபாடுகள் என்று வகைப்படுத்தப்படுகிறது.குறிப்பாக, ஹண்டிங்டன்'ஸ் நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பெரியவர்களில் 30 அல்லது 50 வயதுகளில் தோன்றும்.
அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஹண்டிங்டன்'ஸ் நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் 3 முக்கிய பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
- இயக்கக் கோளாறு.
- அனிச்சையான நடுக்கம்.
- தசை பிரச்சினைகள்.
- நடைப்பங்கு, தோற்றப்பாங்கு மற்றும் சமநிலையின் குறைபாடு.
- விழுங்குவதில் சிரமம் அல்லது பேச்சுக்குரிய உடல் உற்பத்தியில் சிரமம் (மேலும் வாசிக்க: விழுங்குவதில் சிரமத்திற்கான சிகிச்சை).
- அறிவாற்றல் (சிந்தனை) கோளாறு.
- எண்ணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துவதில் சிரமம்.
- தன் சொந்த நடத்தைகள் மற்றும் திறன்களில் விழிப்புணர்வு இல்லாதது.
- தடுமாற்றம்.
- புதிய தகவலை ஏற்றுக்கொள்வதில் சிரமம்.
- உளவியல் சீர்கேடு.
- எரிச்சலூட்டும் தன்மை.
- தூங்குவதில் சிரமம்.
- சமூகத்திலிருந்து தன்னைத்தானே தனிமையடுத்துதல்.
- அடிக்கடி மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள்.
எச்.டி. காரணமாக ஒருவரின் தினசரி நடவடிக்கைகளில் சார்புநிலை ஏற்படுகிறது, இது இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கிறது.மரணம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நிமோனியா ஆகும்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
ஹண்டிங்டன்'ஸ் நோய் ஒரு மரபார்ந்த மனநலக் கோளாறு ஆகும். பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு செல்லும் ஹெச்.டி.டி என்னும் ஒரு தவறான மரபுவழி மரபணு குழந்தையின் இந்த கோளாறுக்கு காரணமாகிறது.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஹண்டிங்டன்'ஸ் நோயின் நோயறிதல் முறை அதன் மருத்துவ தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் மூலம் செய்யப்படுகிறது.நோயாளியின் ஒரு துல்லியமான குடும்ப வரலாறு நோயறிதலை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மிக சமீபத்திய நோயறிதல் முறை டி.என்.ஏ உறுதிப்பாட்டை உள்ளடக்கியது, இது ஹண்டிங்டன்'ஸ் நோயை உறுதிப்படுத்த உதவுகிறது.
ஹண்டிங்டன்'ஸ் நோய் தற்போது மீளமைக்க முடியாத ஒரு நோய்.எச்.டியின் சிகிச்சை மருந்து மற்றும் மருந்து அல்லாத முறைகளை உள்ளடக்கியது மற்றும் அறுவை சிகிச்சைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கவில்லை.
- ஒளன்சபைன் மற்றும் பிமோசைடு ஆகியவை மீச்செயற்பாட்டை குறைக்க உதவுகின்றன.
- சிடாலோப்ரம் மற்றும் ஃப்ளூக்ஸைடின் போன்ற மருந்துகள் மனச்சோர்வை குணப்படுத்த உதவுகின்றன.
- மரபணு சிகிச்சையானது மிகவும் உறுதியான சிகிச்சையாகும் மற்றும் இது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பதிலாக அதை முழுமையாக தவிர்ப்பதற்கு இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.