தோல் அரிப்பு (ஹைவ்ஸ்) என்றால் என்ன?
தடிப்புச்சொறி எனவும் அறியப்படும் தோல் அரிப்பு (ஹைவ்ஸ்) என்பது சருமத்தில் சொறி போன்ற மேடான, அரிப்புள்ள சிவப்பு நிற புடைப்புகள் (வீக்கங்கள்) ஏற்படும் ஒரு தோல் வியாதி ஆகும். இது பொதுவாக ஒவ்வாமையால் தூண்டப்படும் எதிர்வினையாகும், தோல் அரிப்பு (ஹைவ்ஸ்) மாறுபட்ட அளவுகளில் இருக்கும் மற்றும் அவை ஒரு சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் அல்லது தானாகவே மறைந்து விடும். கடுமையான தோல் அரிப்புகள் (ஹைவ்ஸ்) 6 வாரங்களுக்குள் சரியாகிவிடும். பெரும்பாலும் தோல் அரிப்புகள் (ஹைவ்ஸ்) சில நாட்களுக்குள்ளாகவே மறைந்து விடும். எனினும், நாள்பட்ட தோல் அரிப்பு சிகிச்சையின்றி 6 வாரங்களுக்கு மேலாக நீடிக்கலாம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- தோலின் மீது புடைப்புகள் காணப்படுவது தோல் அரிப்பின் அறிகுறி ஆகும்.
- இந்த புடைப்புகள் சிவப்பாகவோ, இளஞ்சிவப்பாகவோ அல்லது தோலின் நிறத்திலேயே கூட காணப்படும்.
- புடைப்பை சுற்றி அரிப்பு அல்லது எரியும் உணர்வு ஏற்படும்.
- இந்த தோல் அரிப்புகள் தானாகவே தோன்றி மறையும் அல்லது உடலில் வேறு ஒரு பகுதியில் தோன்றும்.
- தோல் அரிப்பு (ஹைவ்ஸ்) இருக்கும் இடத்தை அழுத்தும் போது, சருமம் வெளிறியது போலத் தோன்றும். இதனை ப்ளான்சிங் என்ற சொல் விவரிக்கின்றது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- தோல் அரிப்பிற்கு மிக பொதுவான காரணம் ஒவ்வாமையே ஆகும். பலதரப்பட்ட ஒவ்வாமைகள் குறிப்பிட்ட மக்களுக்கு ஏற்படுகின்றன.
- மீன், பால், சாக்லேட், பாதாம் போன்ற பருப்பு வகைககள், கடற்சிப்பிகள், மட்டி மற்றும் பல உணவு பொருட்களால் தோல் அரிப்பு ஏற்படுகின்றது.
- பூச்சி கடி அல்லது சல்ஃபா போன்ற சில மருந்துகளால் தடிப்புச்சொறி ஏற்படுகிறது.
- கல்லீரல் அழற்சி மற்றும் புற்றுநோய் போன்ற அமைப்பு ரீதியான நோய்களால் நாள்பட்ட தோல் அரிப்பு ஏற்படுகிறது.
- சூரிய ஒளி, குளிர், சூடு போன்ற பல காரணங்களால் உடலில் தோல் அரிப்பு ஏற்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
இந்த தோல் அரிப்பு நோயை கண்டறிய குறிப்பிட்ட பரிசோதனைகள் ஏதும் இல்லை. உங்களின் அறிகுறிகளை அடிப்படையாக கொண்டு, மருத்துவர் உங்களின் சமீபத்திய பழக்கவழக்கங்கள், உணவுமுறை, ஏற்கனவே இருக்கும் ஒவ்வாமைகள் மற்றும் பலவற்றை பற்றி கேட்டறிவார். ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணம் அறிய சிறுது காலம் ஆகும். தொற்று உள்ளது என சந்தேகம் இருந்தால், இரத்த பரிசோதனை பரிந்துரைக்கப்படலாம். தோல் அரிப்பின் ஒவ்வாமைத் தன்மையை உறுதிப்படுத்த, ஐஜிஇ இரத்த பரிசோதனைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படலாம்.
ஒருமுறை இதற்கான காரணம் கண்டறியப்பட்டால், உங்களது உணவு முறையிலிருந்து அதனை நீக்குவதோடு அதன் வெளிப்பாட்டை தவிர்ப்பதன் மூலமாக தோல் அரிப்புக்கு சிகிச்சையளிக்கப் படுகிறது. ஹிசுட்டமின் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகள் அறிகுறிகளிலிருந்து வெளிவர உதவுகிறது. சில தீவிரமான நிகழ்வுகளில், அட்ரீனலின் ஊசிகள் தோல் அரிப்பிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இந்த தோல் அரிப்பு மற்ற நோயுடனோ அல்லது தொற்றுடனோ தொடர்பில் இருந்தால், அதற்கு சிகிச்சை அளித்த பின்னர், தோல் அரிப்பு சரியாகிவிடும்.