ஹை லிப்போப்ரோடீன் என்றால் என்ன?
லிப்போப்ரோடீன்கள் (கொழுப்புப்புரதங்கள்) இரத்தத்தில் கொழுப்பைக் கொண்டுசெல்லும் முகவர்களாகும். இரண்டு வகையான லிப்போப்ரோடீன்கள் உள்ளன. அவை குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்.டி.எல்), இது கெட்ட கொழுப்பு எனவும் அழைக்கப்படுகிறது மற்றும் அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் (எச்.டி.எல்), இது நல்ல கொழுப்பு எனவும் அழைக்கப்படுகிறது.அதிக அளவிலான எல்.டி.எல் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தினை அதிகரிக்கிறது, ஆனால் எச்.டி.எல்லின் அதிக அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தினைக் குறைக்கிறது. லிப்போப்ரோடீன் ஏ (எல்.பி ஏ) எல்.டி.எல் கொழுப்புக்கு ஒத்ததாக இருக்கிறது, மேலும் அதன் அளவு அதிகரிப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. இந்த கொழுப்புகளின் அதிக அளவு தமனிகளில் குவிந்து, தமனிக் குழாய்களைக் குறுகலடையச் செய்து அடைப்பினை ஏற்படுத்துகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உயர் கொழுப்புப்புரத அளவு உள்ள நபர்கள் எந்தவித அறிகுறிகளும் இன்றி பொதுவான ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கின்றனர். மிகுதியாக உள்ள கொழுப்புப்புரதங்கள் இரத்த குழாய்களில் குவிந்து அதை இதயத்திற்கும் மூளைக்கும் எடுத்து செல்கிறது. இதனால் இரத்த குழாய்கள் அடைப்பட்டு, உடல் உறுப்புகளுக்கு குறைவான இரத்தத்தை அனுப்புவதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கலாம். உயிருக்கு ஆபத்தான நிலையில் அல்லது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் போது மட்டுமே அதிகமான நபர்கள் இந்த உயர் கொழுப்புப்புரதங்கள் குறைபாட்டைக் கண்டறிகின்றனர்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உயர் கொழுப்புப்புரதம் நிலை ஏற்படுத்தும் காரணிகள் பின்வருமாறு:
- கொழுப்புச் சத்து மிகுதியாக உள்ள உணவு வகைகளை உண்ணும் ஒழுங்கற்ற உணவுப்பழக்கம்.
- உடற் பருமன்.
- உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருத்தல்.
- பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் மரபணு காரணி.
- மன அழுத்தம்.
- உயர் இரத்த அழுத்தம்.
- புகைப்பிடித்தல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நோயறிதல் முறைகள் பின்வருமாறு:
- மருத்துவ அறிக்கை மற்றும் குடும்ப வரலாற்றை தெரிந்து கொள்ளுதல்.
- உடல் பரிசோதனை.
- தைராய்டு ஹார்மோன் அளவை பரிசோதிக்கும் இரத்த பரிசோதனைகள் ஏனென்றால் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் சுரப்பதால் அது மேலும் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
- தோல் திசுப்பரிசோதனை.
- அதிக கொழுப்பு அளவுகளை ஏற்படுத்தும் பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறியீட்டை அறிய பெல்விக் (இடுப்பு) அல்ட்ராசவுண்ட் சிகிச்சை முறை.
மிகுதியாக உள்ள தேவையற்ற கொழுப்பால் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த பின்வரும் சிகிச்சை முறைகளை மருத்துவர் பரிந்துரைக்கிறார்:
- பி.எம்.ஐ அளவை சராசரி நிலைக்கு கொண்டுவர தினசரி உடற்பயிற்சி.
- புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துதல்.
- லிப்போப்ரோடீன் அப்ஹெரீசிஸ், இந்த முறையில் லிப்போப்ரோடீன் இரத்தத்திலிருந்து வடிகட்டப்பட்டு நீக்கப்படுகிறது.
- கொழுப்பு அடங்கிய உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
- மன அழுத்த நிர்வகிப்பு.
- உங்கள் ஆபத்து காரணிகளை பொறுத்து கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்ளுதல்.