ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸ் (ஹெச்.எஸ்.இ) என்றால் என்ன?
அரிதாக நிகழும் போதிலும், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸ் உயர்ந்த இறப்பு விகிதம் மற்றும் நோய்மை விகிதம் உடைய ஒரு நரம்பியல் கோளாறாகும்.இது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸால் ஏற்படுகின்றது.காய்ச்சல், அதீத செயல்பாடு, அயர்வு மற்றும் /அல்லது பொதுவான பலவீனம் ஆகியவையாக வெளிப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- ஆரம்பகால அறிகுறிகள் பின்வருமாறு:
- தலைவலி.
- காய்ச்சல்.
- வலிப்புத்தாக்கங்கள்.
- அயர்வு மற்றும் பொதுவான பலவீனம்.
- குழப்பம்.
- தன்னிலையிழத்தல்.
- பிற்கால அறிகுறிகள் பின்வருமாறு:
- பேச்சு அல்லது எழுத்து மூலம் தொடர்புகொள்வதில் சிரமம்.
- வாசனை நுகரும் உணர்வின் இழப்பு.
- மறதி.
- அதீத செயல்பாடு.
- உளப்பிணி.
- கூடுதல் தீவிரமான அறிகுறிகள் பின்வருமாறு:
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
- ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸ் ஏற்படுவதற்கான பொதுவான காரணம் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை I நோய்த் தொற்றே ஆகும்.
- மற்ற பொதுப்படையற்ற காரணங்கள் பின்வருமாறு:
- ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை II நோய்த் தொற்று (இது பிறந்த குழந்தைகளில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது).
- மூளையின் இரத்த கசிவுடன் கூடிய இழையநசிவுடன் (திசு இறப்பு) தொடர்புடைய திசு நலிவின் விளைவாக ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸின் சில அறிகுறிகள் தோன்றக்கூடும்.
- அழுத்தம் அல்லது அதிர்ச்சியின் விளைவாக, நரம்பின் திசுவில் செயலற்ற நிலையில் உள்ள ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் மீண்டும் செயல்படத் தொடங்கும் போது, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸ் ஏற்படுகிறது.உள்ளிருக்கும் வைரஸ் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸின் ஆரம்ப கால வெளிப்பாட்டின் பல ஆண்டுகளுக்குப் பின்னும் மீண்டும் செயல்படும் தன்மையுடையது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸ் நோய்க்கான கண்டறிதல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இதற்கான ஆய்வுகள் பின்வருமாறு:
- இரத்த பரிசோதனை.
- மூளை தண்டுவட திரவ பரிசோதனை.
- மூளைமின்அலைவரைவு.
- காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
- மூளையின் திசுப் பரிசோதனை.
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸ் நோயிலிருந்து மீண்டு வர வைரஸ் தடுப்பு மருந்துகளின் ஆரம்ப கால சிகிச்சை நன்மை பயக்கிறது.
தேவையைப் பொறுத்து, மருத்துவர் 14 நாட்களுக்கு ஏசைக்ளோவிர் மாத்திரைகளை பரிந்துரை செய்யக்கூடும்.
நோயின் தீவிரத்தை பொறுத்து, மருத்துவர் நரம்பு வழியாகவும் ஏசைக்ளோவிரை உட்செலுத்தக்கூடும்.
வலிப்புத்தாக்கங்கள் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் என்ஸெபலிடிஸ் நோயுடன் தொடர்புடையதாக இருந்தால், வலிப்பு அடக்கிகள் மிகவும் அவசியமானதாகும்.
தமனி சார்ந்த கார்பன் டை ஆக்சைட் குறைவுபட்ட அழுத்தத்தை சீர் செய்ய, தலையை உயர்த்தி வைத்து, மெனிட்டால் அல்லது கிளிசரால் கொடுத்தல் மற்றும் அதிவளியோட்டம் (விரைவாகச் சுவாசித்தலுக்கு வழிவகுத்தல்) பரிந்துரை செய்யப்படுகிறது.