ஹீல் ஸ்பர் என்றால் என்ன?
ஹீல் ஸ்பர் என்பது பாதத்தில் இருக்கும் குதிகாலில் ஏற்படும் அசாதாரண எலும்பு வளர்ச்சியாகும், இதன் விளைவால் நடக்கும் போது, நிற்கும் போது அல்லது ஓடும் போது வலி ஏற்படும். குதிகாலில் ஏற்படும் உளைச்சல் அல்லது அழுத்தத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய தசைகளில் ஏற்படும் காயம் அல்லது சேதம், கால்களின் தசைநாண் அல்லது தசைநார் போன்றவைகளில் கால்சியம் குவிந்திருப்பதினாலேயே இத்தகைய புறவளர்ச்சி ஏற்படுகின்றது.
இது பொதுவாக குழந்தைகளை விட நடுத்தர வயதுடைவர்களிடமே அதிகமாக காணப்படுகிறது. இது ஆண் மற்றும் பெண்களிடத்தில் சமமான பாதிப்பினை அடிக்கடி ஏற்படுத்துகின்றது. இந்திய ஆய்வின் படி,குதிகால் வலியுள்ளவர்களில் 59% பேருக்கு ஹீல் ஸ்பர்ரின் நிகழ்வு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
ஹீல் ஸ்பர்ரின் முதன்மையான அறிகுறியாக குதிகால் வலியே கருதப்படுகிறது. ஆனால் இத்தகைய வலி ஏற்படுவதற்கு ஹீல் ஸ்பர் மிக அரிதாகவே காரணமாக இருக்கிறது. குதிகால் அருகில் உள்ள திசுக்களில் இந்த எலும்பு வளர்ச்சியின் அழுத்தம் காரணமாக நீங்கள் வலியை உணரலாம். காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் வைக்கும் அடிகளில் ஒருவித கூர்மையான வலியை உணரக்கூடும், பின்னர் அது மெதுவாக குறைந்துவிடும். உங்கள் குதிகாலில் வீக்கம் மற்றும் நொய்வு போன்றவைகள் கூட இருக்கக்கூடும்.
இணைப்பு திசுக்களில் ஏற்படும் காயம் அல்லது அழற்சியானது குதிகாலில் தொடங்கி கால்விரல் பகுதி முழுவதும் பரவக்கூடிய பிளான்டார் ஃபேசியைட்டிஸ் நிலையை உடையவர்களுக்கு ஏற்படும் அறிகுறியை ஒத்ததாகவே ஹீல் ஸ்பர்ரின் அறிகுறிகளும் இருக்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பல வழக்குகளில் இந்த ஹீல் ஸ்பர்க்கான முக்கிய காரணியாக பிளான்டார் ஃபேசியைட்டிஸ் இருக்கிறது. ஒருவேளை பிளான்டார் ஃபேசியைட்டிஸில் காயம் ஏற்பட்டால், உங்கள் பாதங்களுக்கு சிரமம் ஏற்படாமல் பாதுகாக்கும் இணைப்பு திசு, குணமடைய அதிக காலம் எடுத்துக்கொள்கிறது, அந்தநேரத்தில் சிறிய எலும்பின் உருவாக்கம் தொடங்கக்கூடும். இந்த ஹீல் ஸ்பரின் மற்ற காரணிகள் பின்வருமாறு:
- பாதங்களில் உள்ள தசைகள் மற்றும் தசை நார்களில் ஏற்படும் அதீத சிரமம்.
- கால் தசைகளை அதிகமாக ஸ்ட்ரெட்ச் செய்தல்.
- விளையாட்டு வீரர்கள் செய்யும் ஓட்டப்பயிற்சி மற்றும் குதித்தல் போன்ற உடலியல் செயல்பாடுகள்.
- நீண்ட நேரம் அல்லது நெடு நேரமாக நிற்பது.
- தட்டைப்பாதம் அல்லது வளைந்த பாதம் உடையவர்கள்.
- தள்ளாட்டமான நடை.
- பொருத்தமற்ற காலணிகளை அணிதல்.
- அதிக எடை.
- கர்ப்பகாலம்.
- கீல்வாதம் அல்லது நீரிழிவு போன்ற நோய்கள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
உங்களுக்கு ஹீல் ஸ்பர் நோயிக்கான அறிகுறி இருந்தால், உங்கள் மருத்துவர் முதலில் உங்கள் பாதங்களை பரிசோதனை செய்வதோடு நோயிக்கான காரணத்தை கண்டறிவதற்கான மருத்துவ அறிக்கையை எடுப்பார். அதன் பிறகு எக்ஸ்-கதிர்கள் சோதனை பரிந்துரைக்கப்படும். இருப்பினும், சோதனைகளான, காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) மற்றும் அல்ட்ரா சவுண்ட் போன்ற சோதனைகள் அரிதாக பரிந்துரைக்கப்படும்.
மருந்துகள், அதாவது எதிர்ப்பு-அழற்சி மருந்துகள் வலியிலிருந்து நிவாரணம் பெற பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஹீல் ஸ்பர் நோயினால் ஏற்படும் வலியினை கையாள மற்ற சுய பாதுகாப்பு தேர்வுகள் பின்வருமாறு:
- தேவையான அளவு ஓய்வெடுத்தல்.
- குதிகாலில் வலியுள்ள இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தல்.
- பொருத்தமான காலணிகளை அணிதல்.
- கடுமையான மேற்பரப்பில் வெறுங்காலுடன் நடந்து செல்வதை தவிர்த்தல்.
- தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சயினை மேற்கொள்ளுதல்.
- அதிக எடையிருப்பின் எடையை குறைத்தல்.
அறுவை சிகிச்சை அல்லாத முறைகளில் நிவாரணம் பெறவில்லையெனில், அறுவை சிகிச்சை செய்வதே கடைசி வாய்ப்பாகும்.