சுருக்கம்
பெரும்பாலும், நாம் 'நெஞ்செரிச்சல்' என்ற வார்த்தையை ஒரு கோளாறு அல்லது இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனை என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையில், 'பைரோசிஸ்' எனப்படும் நெஞ்செரிச்சல், மருத்துவ சொற்களில், உணவுக்குழாயில் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும். இது ஒரு நோயல்ல, ஆனால் உணவு குழாய் மற்றும் அதன் செரிமானப் பாதை (இரைப்பை குடல்) செயல்பாட்டில் ஏதேனும் அசாதாரணத் தன்மை ஏற்பட்டதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். நெஞ்செரிச்சல் என்பது GERD-ன் (காஸ்ட்ரோ-ஓசோபாகல் ரிஃப்ளக்ஸ் நோய்) மிகவும் பொதுவான அறிகுறியாகும். இது மார்பு பகுதியில் ஒரு எரியும் உணர்வு உணர்வது ஆகும். பொதுவாக, அது அமிலத்தன்மை(அசிடிட்டி) அல்லது உயர் அமிலத்தன்மை(ஹைபர் அசிடிட்டி) என அறியப்படுகிறது. இதன் சிகிச்சையில் பொருத்தமான மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் வாழ்க்கை முறையிலும் உணவிலும் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.