கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைவலி என்றால் என்ன?
கருவுற்றிருக்கும் காலத்தில் உண்டாகும் தலைவலி என்பது மிக பொதுவாக அனைத்து கர்ப்பிணி பெண்களும் செய்யக்கூடிய புகார் ஆகும்.மேலும் இது ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.இருப்பினும், இந்த தலைவலி என்பது கர்ப்பகாலத்தின் முதல் மற்றும் மூன்றாம் ட்ரீம்ஸ்ட்டர்களில் சகஜமாக தோன்றக்கூடியது.தலைவலியுடன் மற்ற அறிகுறிகள் ஏதும் தோன்றாத வரை இதை பற்றி பயப்படுவதற்கான அவசியம் இல்லை.
இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
கார்பக்காலத்தில் ஏற்படும் தலைவலி லேசானதாக இருந்தாலும் நெற்றியில், பின்னந்தலையில் அல்லது கண்களுக்கு பின் போன்ற பகுதிகளில் ஏதோவொன்று குத்துவது போன்ற வலியை உணர்த்தக்கூடியது.
மைக்ரேனினால் ஏற்படும் தலைவலி என்பது ஆழமான வலி அது சிலநேரங்களில் கழுத்து வரைக்கூட நீடித்திருக்கும்.
பின்வரும் அறிகுறிகள் ஏற்படும் நிலையில் ஒருவர் கண்டிப்பாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.
- காய்ச்சல் மற்றும் வாந்தியுடன் கூடிய தலைவலி.
- தலைவலி சிறிது நேரத்தில் குணமடையாகாதது அல்லது மேலும் மோசமடைவது.
- தலைவலியின் காரணத்தினால் ஏற்படும் மங்கலான பார்வை மற்றும் தெளிவின்மை.
- மூக்கு அல்லது கண்கள் போன்ற பகுதிகளில் ஏதெனும் ஒரு வகையில் ஏற்படும் இரத்தக்கசிவு (மேலும் படிக்க: மூக்கில் ஏற்படும் இரத்தித்திற்கான காரணம்).
இதன் முக்கியமான காரணங்கள் என்ன?
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்கள் தலைவலியை அதிகரிக்கக் கூடியது.
பொதுவாக, இது கருவுற்றிருக்கும் ஆரம்ப காலத்தில் ஏற்படக்கூடியது, ப்ரோகெஸ்டெரோன் கருப்பையில் இருக்கும் தசைகள் மற்றும் தலையில் இருக்கும் இரத்த நாளங்கள் போன்றவைகள் தளர்வடைய வழிவகுக்கின்றது.இதன் விளைவால் இரத்தம் வெயின்களின் வழியாக ஊடுருவி செல்லும்போது அடிக்கடி தலைவலியை ஏற்படுத்துகின்றது.
தலைவலிக்கு வழிவகுக்கக்கூடிய மற்ற காரணிகளும் இருக்கின்றன, அவை தூண்டுகோள்களாக செயல்படுகின்றன:
- சோர்வு
- பசியின்மை
- நீர்ப்போக்கு
- மனஅழுத்தம்
- சுறுசுறுப்பின்மை
- இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்கள்
- சைனஸ் அடைப்பு
கர்ப்பாகாலத்தில் மைக்ரேன் தலைவலியும் ஏற்படக்கூடும்.இருப்பினும், சில பெண்களுக்கு கர்ப்பகாலத்திற்கு முன் இருந்த மைக்ரேன் தலைவலயின் தீவிரம் குறையவும் செய்யலாம்.மிக அரிதாக மூளையின் தமனியில் ஏற்படும் சிதைவு அல்லது அதிகமான இரத்த அழுத்தம் போன்ற தீவிரமான காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
பொதுவாக, இதனால் ஏற்படும் அறிகுறிகளின் எளிதான விளக்கத்தின் மூலமே தலைவலியை கண்டறிந்துவிடலாம்.இருப்பினும், ஒருவேளை தலைவலி மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்படுவதோடு நீண்ட நேரம் குணமடையாமல் இருக்கும் பட்சத்தில், மருத்துவர் இதன் அசாதாரணத்தை பரிசோதிக்கக்கூடிய மற்ற சோதனைகளான சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, அல்லது சிடி ஆஞ்சியோகிராபி போன்றவைகளை மேற்கொள்ளக்கூடும்.இது காரணத்தை அடையாளம் காண உதவும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி என்பது பொதுவாக வீட்டு சிகிச்சையின் மூலமே குணமடையக்கூடியது, அவை பின்வருமாறு:
- சூடான ஒத்தடம்.
- குளிர்ந்த ஒத்தடம்.
- மசாஜ்.
- படுக்கையிலேயே ஓய்வெடுத்தல்.
- அரோமாதெரபி.
தலைவலியை தடுப்பதற்கு, மருத்துவர் ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் வழக்கமான உடல் பயிற்சியில் ஈடுபடுதல் அதாவது யோகா மற்றும் மற்ற உடற்பயிற்சிகளையும் பரிந்துரைக்கலாம் (துறை வல்லுனரின் மேற்பார்வையின் கீழ்).
மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் எந்த மருந்தினையும் உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் கர்ப்பக்காலத்தில் உபயோகப்படுத்தக்கூடிய பாதுகாப்பான வலி நிவாரணிகள், அல்லது இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகளை பரிந்துரைக்கக்கூடும்.