மாயத்தோற்றம் (ஹாலுசினேஷன்) என்றால் என்ன?
மாயத்தோற்றம் என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் ஒருவருக்கு கற்பனையான அனுபவங்களைக் கொடுக்கும் ஒரு அறிகுறியாகும். எந்த ஒரு வெளிப்புற கிளர்வின்றி ஒருவரால் மற்றொருவரின் இருப்பை அனுபவிக்க, உணர, கேட்க அல்லது நுகர முடியும். டிமென்ஷியா மற்றும் சித்தபிரமை (டேலிரியம்) உள்ளிட்ட பல மனநல மற்றும் மருத்துவ நிலைமைகளோடு இது தொடர்புடையது. இது முதியவர்களுக்கு வயதாவதின் ஒரு பகுதியாக ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மாயத்தோற்றம் ஆறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது:
- செவித்திறன்.
- பார்வைத்திறன்.
- நுகர்வு.
- சுவைப்புலன்.
- தொட்டுணர்தல்.
- உடல் கூறு சார்ந்த.
மாயத்தோற்றம் என்பது உண்மையில் நடக்கும் சூழ்நிலையை தவறான கருத்தில் எடுத்துக்கொள்ளும் ஒரு மாயை (இல்லுசன்) போன்றது அல்ல.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- செவித்திறன் (ஒலி) சார்ந்த மாயத்தோற்றம்:
இந்த வகையில், நோயாளிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரல்களை உண்மையான வெளிப்புற மூலமின்றி கேட்கக்கூடும்.
சில சமயங்களில், உங்களைப் பற்றி இரு நபர்களின் உரையாடல்களை மூன்றாவது நபரைப் போல் நீங்கள் கேட்பதாக உணரலாம். நீங்கள் கேட்கும் இந்த குரல்கள் உங்கள் தலையில் உள்ளே அல்லது வெளியே இருக்கலாம். சில நேரங்களில், உங்கள் சிந்தனை உங்களுக்கே சத்தமாக கேட்கலாம்.
- பார்வைத்திறன் (பார்வை) சார்ந்த மாயத்தோற்றம்:
இல்லாத ஒரு நபர் இருப்பதுபோன்றோ அல்லது இல்லாத ஒரு ஒளி பிரகாசத்தையோ நீங்கள் பார்க்கக்கூடும்.
- நுகர்வு (வாசம்) சார்ந்த மாயத்தோற்றம்:
ஒரு உட்புற அல்லது வெளிப்புற மூலத்திலிருந்து வரும் வாசனையை நீங்கள் உணரலாம். சில நோயாளிகள் மிக அதிகமாக குளிக்கலாம், வாசனை திரவியங்கள் அல்லது நாற்றம் நீக்கிகளை அதிகமாக பயன்படுத்தலாம் அல்லது தன்னிடம் ஒரு கெட்ட மணம் வருவதாக கருதிக்கொண்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
- சுவைப்புலன் சார்ந்த மாயத்தோற்றம்:
சுவையில் மாற்றங்கள், அதிகமான தாகம் மற்றும் அதிகரித்த உமிழ்நீர் சிறப்பு போன்ற மாற்றங்களை நீங்கள் உணரலாம்.
- தொட்டுணர்வு சார்ந்த மாயத்தோற்றம்:
பூச்சிகள் உங்கள் தோலுக்குக் கீழ் அல்லது தோல் மேல் ஊறுவது போன்ற உணர்வுகளை நீங்கள் உணரலாம்.
- உடல் (உணர்ச்சி) சார்ந்த மாயத்தோற்றம்:
மற்றவர்களின் உடலைத் தொடுதல், ஆனால் அவர்களின் இருப்பை உணராதிருத்தல் போன்ற அசாதாரணமான உடல் உணர்வுகளை நீங்கள் அனுபவிக்கலாம்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
மாயையின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மாயைகளில் ஏற்படும் பொதுவான நிலைமைகள் பின்வருமாறு:
- செவித்திறன் (ஒலி) சார்ந்த மாயத்தோற்றம்:
- நரம்பு மண்டலத்தின் கோளாறு.
- காது நோய்.
- உளவியல் கோளாறுகள் (மேலும் வாசிக்க: உளப்பிணி அறிகுறிகள்).
- மருந்துகள்.
- மதுபழக்கத்தை கைவிடுதல்.
- வலிப்புத்தாக்கம்.
- பக்கவாதம்.
- கவலை.
- நுகர்வு (வாசம்) சார்ந்த மாயத்தோற்றம்:
- கண் நோய்.
- நரம்பியல் கோளாறு.
- ஒற்றைத் தலைவலி.
- மருந்துகள்.
- உளவியல் சீர்கேடு.
- புரையழற்சி.
- தூக்கமின்மை.
- சுவைப்புலன் சார்ந்த மாயத்தோற்றம்:
- புரையழற்சி.
- தொட்டுணர்வு சார்ந்த மாயத்தோற்றம்:
- ஆட்டிப்படைக்கும் எண்ணங்கள் கொண்ட கோளாறு.
- சில மருந்துகளை அதிகமாக உட்கொள்ளுதல்.
- மனச்சிதைவு நோய்.
- உடல் (உணர்ச்சி) சார்ந்த மாயத்தோற்றம்:
- நரம்பு மண்டல கோளாறு.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
முதலில் உங்கள் மருத்துவர் இந்த மாயத்தோற்றத்திற்கான காரணத்தை கண்டறிய முயற்சிப்பார். பின்னர், நிலைமைக்கு ஏற்ப சில மருந்துகளை பரிந்துரைப்பார். இரத்த சோதனைகள், மூளை சி.டி. ஸ்கேன், மின்முனை வரையம் சிகிச்சை (இ.இ.ஜி), மற்றும் எம்.ஆர்.ஐ போன்ற சோதனைகள் செய்யப்படலாம். நிலையை கண்டறிந்தபிறகு, சிகிச்சை மூலம் நோய்க்கு தீர்வு காண வேண்டும்.
வழக்கமாக, மாயத்தோற்றத்திற்கு சிகிச்சையளிக்க மனநல எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏதேனும் மருந்துகளில் பக்கவிளைவினால் மாயத்தோற்றம் ஏற்படுகிறது என்று மருத்துவர் சந்தேகித்தால், அந்த மருந்துகளில் அளவுகளை மருத்துவர் குறைக்கக்கூடும்.