கிரேவ்'ஸ் நோய் என்றால் என்ன?
கிரேவ்ஸ் நோய் என்பது தைராய்டு சுரப்பியை பாதிக்கும் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அதிகமாக உற்பத்திக்கு வழிவகுக்கும் ஒரு நிலை. இது வெளிக்காரணிகளுடன் போராடும், தைராய்டு உயிரணுக்கள் மீது செயல்படும் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அதிகமான உற்பத்திக்கு காரணமாக இருக்கும் தைராய்டு தூண்டும் எதிர்ப்புப்புரதங்கள் (டி.எஸ்.ஹெச்) என்று அழைக்கப்படும் எதிர்மங்களில் காரணமாக ஏற்படும் ஒரு தற்சார்பு எமக்கோளாறு ஆகும். தைராய்டு சுரப்பி பட்டாம்பூச்சி போன்ற வடிவமுடையது மற்றும் உங்கள் கழுத்தின் முன் கீழ்பகுதியில் அமைந்துள்ளது. தைராய்டு சுரப்பி மூலம் வெளியிடப்படும் ஹார்மோன்கள் ஆற்றலை வழங்க மற்றும் பிற உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமாகிறது.
இந்திய புள்ளிவிபரங்களின்படி, ஆண்களை விட பெண்களுக்கு இந்த கிரேவ்ஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நீங்கள் மெதுவாக இந்த அறிகுறிகளை உணர தொடங்கலாம் அல்லது அது திடீர் என உருவாகலாம். இந்த கிரேவ்ஸ் நோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வீங்கிய கண்கள்.
- எதிர்பாராவிதமான எடை இழப்பு.
- வேகமான இதய துடிப்பு.
- எரிச்சலுணர்வு.
- நரம்புத் தளர்ச்சி.
- கை நடுங்குதல்.
- வெப்பத்தை சகிக்க முடியா நிலை.
- வீங்கிய கழுத்து.
- தளர்வான மலம்.
- தூங்குவதில் சிரமம்.
- முடி கொட்டுதல்.
நோயெதிர்ப்பு மண்டலம் கண் செல்களை பாதித்திருந்தால், பின்வரும் அறிகுறிகளைக் காணலாம்:
- கண்களை சுற்றி வீக்கம்.
- வறண்ட கண்கள்.
- சிவத்தல் மற்றும் வலி (மேலும் வாசிக்க: சிவந்த கண்கள் சிகிச்சை).
- உறுத்தல்.
- பார்வை தொந்தரவு.
சில அரிதான சந்தர்ப்பங்களில், தடிமனான சிவப்பு புள்ளிகள் முழங்கால் மற்றும் சிலசமயங்களில் கால் பாதத்திலும் கூட தோன்றலாம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இது தைராய்டு செல்களை பிணைத்து அதிக தைராய்டு ஹார்மோன்களை சுரக்க நமது இரத்தத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்கும் ஒரு தற்சார்பு நோயாகும். இந்த நிலை முக்கியமாக 30-50 வயதுள்ள பெண்களை பாதிக்கிறது.இந்த நோயிற்கான காரணி இன்னும் அறியப்படவில்லை.
உங்களில் கிரேவ்ஸ் நோய் உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- கிரேவ்ஸ் நோய் ஏற்கனவே ஏற்பட்ட குடும்ப வரலாறு.
- வகை ௧ நீரிழிவு நோய் உள்ளவர்கள்.
- கர்ப்பிணிப் பெண்கள்.
- மன அழுத்தம் கொண்ட நபர்கள்.
- வகை 1 நீரிழிவு நோய் உள்ளவர்கள்.
- முடக்குவாதம் உள்ளவர்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உங்களுது கழுத்து பகுதியில் ஏதேனும் வீக்கம் இருக்கிறதா என்று அறிய மருத்துவர் ஒரு உடல் பரிசோதனையை மேற்கொள்வார், தைராய்டு ஹார்மோனின் அளவை தெரிந்து கொள்ள (டி3, டி4, and டி.எஸ்.ஹெச்) மற்றும் உங்கள் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை (டி.எஸ்.ஐ) அறிந்துகொள்ள இரத்த பரிசோதனைகளை பரிந்துரைப்பார். தைராய்டு சுரப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு அயோடின் எடுத்து கொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள கதிரியக்க அயோடின் உட்கொள்ளுதல் (ஆர்.ஏ.ஐ.யு) என்று அழைக்கப்படும் ஒரு இமேஜிங் சோதனையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
கிரேவ்ஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க தைராய்டு எதிர்ப்பு மருந்துகள், கதிரியக்க சிகிச்சை மற்றும் தைராய்டு அறுவை சிகிச்சை போன்ற மருந்துகள் உள்ளன. உங்களுடைய நிலையின் அடிப்படையை பொறுத்து உங்கள் மருத்துவர் சரியான சிகிச்சை முறையை தேர்ந்தெடுப்பார். நீங்கள் கர்ப்பமாக இருந்தால்,ஒவ்வாமை விளைவு ஏற்பட்டால், எதிர்ப்பு தைராய்டு மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அல்லது உங்களது சுரப்பிகள் மிகவும் பெரிதாக விரிவடைந்தால் தைராய்டு அறுவைசிகிச்சை என்பது ஒரு கடைசி வாய்ப்பாகும்.
நம் உடலில் ஏற்படும் தைராய்டு நிலைகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் நிலைமைக்கு தகுந்தாற்போல் சோதனையை திட்டமிட முடியும்.