மேக வெட்டை நோய் (கோனோரியா) என்றால் என்ன?
மேகவெட்டை நோய் என்பது நெய்சீரியா கோனோரியா என்னும் பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு பால்வழி பரவும் நோய் ஆகும். இது பொதுவாக தொற்று இருப்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் பரவுகிறது.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
இந்த மேகவெட்டை நோய் உள்ள நபர்களுக்கு எந்த வித அறிகுறிகளும் தெரிவதில்லை மற்றும் அறிகுறிகள் தெரிந்தாலும் அது மிகவும் குறைவாகவே இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு என்பது இந்த மேகவெட்டை நோயின் பொதுவான அறிகுறியாகும்.
ஆண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- ஆண்குறியிலிருந்து வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் திரவம் வெளியேறுதல்.
- விந்தகத்தில் வீக்கம் அல்லது வலி (அரிதாக காணப்படும்).
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசாதாரண யோனி இரத்தப்போக்கு.
- பிறப்புறுப்பிலிருந்து அதிக திரவம் வெளியேறுதல்.
ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் தொற்றுநோய்களின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வேதனை.
- இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்.
- மலவாய் அரிப்பு.
- வலியுடனான குடல் அசைவுகள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இந்த பாக்டீரியா விந்தணு (கம்), ப்ரீ-கம் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட நபரின் யோனி வெளியரற்றத்தில் காணப்படுகிறது மற்றும் முக்கியமாக பாதுகாப்பற்ற யோனி, மலவாய் அல்லது வாய் வலி உடலுறவில் ஈடுபடுவதன் காரணமாக இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட திரவங்களைக் கொண்ட கைகளைக் கொண்டு கண்களை தொடுவதால் கண்களில் தொற்று ஏற்படுகிறது .இந்த தோற்று பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிரசவ நேரத்தில் பிறந்த குழந்தைக்கும் பரவலாம்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
தொடக்கத்தில், ஒரு விரிவான மருத்துவ வரலாறு மருத்துவரால் எடுக்கப்படுகிறது, அதன்பிறகு ஒரு முழுமையான உடல் பரிசோதனை செய்யப்படும். இதைப் பொறுத்து, மருத்துவர் பின்வரும் சோதனையை அறிவுறுத்துவார்:
- பாதிக்கப்பட்ட பகுதியை துளைத்து அதன் மாதிரியை பரிசோதித்தல்.
- கோனோரியா சோதனை-மாதிரி, மாதிரிகள் நுண்ணோக்கி பரிசோதனை மற்றும் நியூக்ளிக் அமிலம் பெருக்கம் சோதனை (என்.ஏ.ஏ.டி).
- சோதனைக்கு சிறுநீர் மாதிரி சேகரித்தல்.
சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- இரட்டை சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இது ஒரு ஒற்றை டோஸ் வாய்வழி மருந்தாகவும் மற்றும் தசையூடான ஊசியாகவும் போடப்படுகிறது.
- தொற்று உள்ள நபருடன் (60 நாட்களுக்குள் நோய் கண்டறிதல்) பாலியல் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள் கட்டாய சோதனை மற்றும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
- மேக வெட்டை நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட நபர்களுக்கு தொடர்ந்து சோதனை செய்தல்.
- மேக வெட்டை நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட நபர்கள் கிளாமிடியா நோய்க்கும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
- சிகிச்சை முடியும் வரை உடலுறவு தவிர்க்கப்பட வேண்டும் (ஒரு ஒற்றை டோஸ் சிகிச்சைக்கு பிறகு, உடலுறவு வைத்து கொள்ள 7 நாட்கள் காத்திருக்கவும்).