பித்தப்பை கற்கள் என்றால் என்ன?
வயிற்றுப் பகுதியின் வலதுபுறத்தில் பேரிக்காயின் தோற்றத்தில்இருப்பதே பித்தப்பை ஆகும். பித்தப்பையில் சேரும் கால்சியம் மற்றும் இதர உப்புகள் அனைத்தும் இறுகி கடினமான கற்கள் போன்று தென்படும், அதுவே பித்தப்பைக்கட்டி அல்லது பித்தப்பை கற்கள் எனப்படும்.
இப்படி சேர்ந்த கற்கள் பித்தப்பை குழாய்களின் செயல்பாட்டை தடுக்கலாம், இதனால் வலி மற்றும் பிற அறிகுறிகள் ஏற்படலாம். எப்போதாவது, பித்தப்பையில் வெளிப்படையான அறிகுறிகள் ஏற்படும்வரை பித்தப்பையில் கல் இருப்பதாய் உங்களால் உணர முடியாமல் இருக்கலாம்.
இதன் முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?
பல சந்தர்ப்பங்களில், பித்தப்பை கற்கள் அறிகுறிகளை தோற்றுவிக்காமல் இருக்கின்றன. அவைகள் நீண்ட காலத்திற்கு பித்தப்பைகளில் வலி உண்டாக்காமல் இருக்கலாம். இருப்பினும், இந்த கற்கள் குழாயில் தடுப்பை ஏற்படுத்தும் போது அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் இவற்றை உள்ளடக்கும்
- மேல் வயிறு மற்றும் தோள்பட்டையில் அதீத வலியை உண்டாக்குகிறது.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- வயிற்றுப் பிடிப்புகள்.
இரண்டு வகையான கற்கள் உள்ளன:
- கொலஸ்ட்ரால் கற்கள்.
- நிறமி கற்கள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
- அதிக கொழுப்பு அதிகப்படியான பித்தநீர் கற்களை உருவாக்கலாம். பித்தப்பையில் அதிகப்படியான கொழுப்பு இருந்தால், அது கரையாமல் அப்படியே இருந்து கடினமான கற்களை உருவாக்குகிறது.
- பித்த நீரில் பித்தத் துகள் என்று அழைக்கப்படும் நிறமி உள்ளது. கல்லீரலில் உள்ள சில குறைபாடுகள் அல்லது இரத்தக் குழாய்நோய்கள், அதிகப்படியான பித்ததுகள்களை உருவாக்குகின்றன, இது நிறமி கற்களை உருவாக்க வழிவகுக்கிறது.
- பித்தப்பை சரியாக செயல்படவில்லையெனில், அது வெற்றிடமாக இல்லாமல் கற்களை குவிக்கிறது.
- நீரிழிவுநோய் உட்பட சில ஆபத்து காரணிகளாவன, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், உடல் பருமன், மற்றும் வாய்வழி கருத்தடுப்பிகள்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர் உங்கள் அறிகுறிகளை மதிப்பீடு செய்வார், பின்னர் சி.டி ஸ்கேன் அல்லது அல்ட்ராசவுண்ட் சிகிச்சையை கற்களைப் பரிசோதிப்பதற்கு ஆலோசனையாக கூறுவார்.கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தை அறிய ஒரு கல்லீரல் செயல்பாடு சோதனை செய்யப்படும்.பித்த நீர் குழாய் வழியாக ஒரு சிறப்பு சாய ஓட்டத்தை பயன்படுத்தி ஒரு எக்ஸ்ரே காட்சிப்படுத்தப்படுகிறது. இரத்த சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் இதனுடன் தொடர்புடைய சிக்கல்களையும் தொற்றுநோய்களையும் சரிபார்க்க உதவுகின்றன.
நோயாளிகளுக்கு பித்தப்பை நோயின் அறிகுறி இல்லாமல் இருந்தால், எந்த சிகிச்சையும் தேவையில்லை. அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பைகளை அகற்றுவது, மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் பித்தப்பை கற்களை கட்டுப்படுத்த மிகவும் சிறந்த வழியாகும். பித்தப்பையை நீக்குதல் உடலில் எந்தவொரு உடலியல் செயல்பாட்டையும் பாதிக்காது.அரிதாக, மருந்துகள் கற்களை கரைக்க பயன்படுத்தப்படுகின்றன.எனினும், இவை அறுவைசிகிச்சை அணுகுமுறை போன்று மிகவும் பயனுள்ளதாக இல்லை, இதன் மறுபரிசீலனை விகிதம் அதிகமாக உள்ளது.