கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்றால் என்ன?
கர்ப்பத்தின் போது அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது மிகவும் பொதுவான மற்றும் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது முதல் மூன்று மாதங்களின் முதல் சில வாரங்களில் தொடங்குகிறது, பெரும்பாலான பெண்களுக்கு, இது கர்ப்பகாலம் வரை தொடர்கிறது.
இதனுடன் தொடர்புடைய முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?
- கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு பெண்ணுக்கு பெண் மாறுபடலாம். சில கர்ப்பிணி பெண்கள் இந்த சிறுநீர் கழித்தல் பிரச்சனையை கர்ப்ப காலம் முழுதும் அனுபவிக்கலாம், சிலர் இதை எதிர்கொள்ள கூட மாட்டார்கள்.
- மூன்று மாதங்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் இந்த உணர்வின் போக்கு குறையலாம், சிறுநீர்ப்பைக்கு மேலே குழந்தை வளர்வதனால் மூன்றாவது டிரைமெஸ்டரில் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து மறுபடியும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் தொடரலாம்.
- கர்ப்பிணிப் பெண்களில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI), தொடர்புடையது, இது குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்படும் பொதுவான தொற்று ஆகும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
- கருப்பையில் சிசு வளர்வதனால் கருப்பை விரிவடைகிறது,இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை உண்டாக்குகிறது, இது கர்ப்பிணிப் பெண்களில் சிறுநீர் கழித்தலுக்கு காரணமாகிறது.
- கர்ப்பகாலத்தின் போது, உடலில் அதிக ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இவை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தலுக்கு வழிவகுக்கிறது.
- உடலில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, சிறுநீரகங்கள் அதிக திரவங்களை உற்பத்தி செய்கின்றன. அப்படியென்றால் சிறுநீர்ப்பையில் அதிக அளவு சிறுநீர் உருவாகிறது மற்றும் அதை காலி செய்வதற்கான தூண்டுதல் காரணமாகக் கூட மிகவும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் நிகழலாம்.
- இந்த அறிகுறி கர்ப்ப நேரத்தில் உண்டாகும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது, இல்லையெனில் இது கர்ப்பக்கால நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
இது பொதுவாக கர்ப்ப காலத்தில் தோன்றும் சாதாரண அறிகுறியாகும். எனினும், நீங்கள் சிறுநீர் கழிக்கையில் ஏதேனும் வலியோ , இரத்தப்போக்கோ அல்லது நிற மாற்றத்தையோ உணர்ந்தால், உங்கள் மருத்துவரிடம் செல்வது சிறந்தது.
- தேவைப்பட்டால், இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மற்றும் பிற சோதனைகள் அறிவுறுத்தப்படலாம்.
- உங்களுக்கு குமட்டுவது போன்று ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், கர்ப்பகால நீரிழிவிற்கான பரிசோதனைகள் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும்.
இது ஒரு சாதாரண நிகழ்வு என்பதால், மற்ற அறிகுறிகள் இல்லாத போது அடிக்கடி சிறுநீர் கழித்தலுக்கு சிகிச்சை ஏதும் தேவை இல்லை.
- ஒருவேளை ஏதெனும் தொற்று இருந்தால், உங்கள் மருத்துவர் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பார்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தலை கட்டுப்படுத்த, காஃபின் கொண்டிருக்கும் காபி- டீ குடிப்பதைத் தவிர்க்கவும்.
- கர்ப்பகாலத்தின் போது சிறுநீர்ப்பை தசைகளின் கட்டுப்பாட்டை பெறுவதற்கு இடுப்பு உடற்ப்பயிற்சிகள் உதவுகின்றன.