அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்றால் என்ன?
வழக்கமாக சிறுநீர் கழிப்பதை விட அடிக்கடி சிறுநீர் போக வேண்டுமென்று உங்களுக்கு தோன்றினால், அதற்கு காரணமாக நோய்தொற்றோ அல்லது சிறுநீரகக்கல் போன்ற பிரச்னையின் விளைவாக இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது அதனுடன் தொடர்புடைய பல பிரச்சினைகளை உருவாக்கும் மற்றும் ஒரு நபரின் தினசரி வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும்.
இதனுடன் தொடர்புடைய முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?
- சராசரியாக, ஒரு மனிதன் 24 மணி நேரத்தில் 7 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது என்பது வழக்கமானது. இது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது என்றாலும் கூட, குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிக தடவை சிறுநீர் கழிப்பது ஒரு பிரச்சனையாக கருதப்படுகிறது.
- அடிக்கடி சிறுநீர் போவதென்பது குறிப்பாக இரவில் அதிகமாக இருக்கும், வழக்கமான இது உங்கள் முழு நீள துக்க சுழற்சிக்கு இடையூறாகவும் மற்றும் நாள் முழுவதும் மந்தமாகவும் மற்றும் அரைத்தூக்க நிலையை ஏற்படுத்தும்.
- அடிக்கடி சிறுநீரகம் கழிப்பதன் காரணமாக, தாகம் பொதுவாக அதிகரிக்கும்.
- சில அசாதாரண அறிகுறிகளாவன:
- காய்ச்சல் மற்றும் குளிர்தல்.
- முதுகு வலி அல்லது அடிவயிற்று வலி.
- சிறுநீர் கழித்தலின் போது அசாதாரணமாக ஏதாவது வெளியேறுதல்.
- குமட்டல் உணர்வு.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
- அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது அதிகப்படியான திரவங்களை குடிப்பதனாலும் அல்லது மிகுந்த குளிர்ந்த சூழலாலும் இது போன்ற ஒரு உளவியல் மாற்றம் காரணமாக இருக்கலாம்.
- நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய்க்குறி இருப்பவர்களுக்கும் கூட அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் பாதிக்கப்படுகிறார்கள்.
- சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் மிகைப்புச் சிறுநீர்ப்பை. ஆகியவை அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் ஒருவித அறிகுறியாகும்.
- பெண்களில், மாதவிடாய் அல்லது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும்.
- சிறுநீர்ப்பை கற்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான மற்றொரு காரணமாகும்.
- சில நேரங்களில், வலிப்பு நோய்க்கு தரப்படும் எதிர்ப்பு மருந்துகளும் கூட இந்த அறிகுறியை உண்டாக்கலாம்.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவர் அறிகுறிகளின் தொடக்க நிலை மற்றும் எவ்வளவு நாட்களாக இது நிகழ்கிறது என்பதற்கான அறிக்கையை எடுத்துக்கொள்வார். அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்த்து வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதையும் உங்கள் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.
- காலையில் எடுக்கப்படும் சிறுநீர் மாதிரியிலிருந்து பொதுவாக இரத்தம், குளுக்கோஸ், புரதங்கள் அல்லது சிறுநீரில் உள்ள வேறு ஏதாவது அசாதாரண நிலை உள்ளதா என பரிசோதனை செய்யப்படும்.
- சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை முற்றிலும் காலியாக உள்ளதா என்பதை அறிய அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யப்படுகிறது. சிடி ஸ்கேன் அல்லது இடுப்பு பகுதியிலும் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
- நீரிழிவுத் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், அதை சார்ந்த சோதனைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக அளிக்கப்படும் சிகிச்சையானது முற்றிலும் அது எதனால் ஏற்படுகிறது என்ற அறிகுறியை பொறுத்தே வழங்கப்படும்.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை ஒருவேளை தொற்றின் காரணமாக இருந்தால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (ஆண்டிபயாடிக்) உதவியாக இருக்கும்.
- சில வாழ்கை முறை மாற்றங்களுடன், இன்சுலின் சிகிச்சை அல்லது மருந்துகளால் இந்த நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன.
- மிகைப்பு சிறுநீர்ப்பை ஒரு காரணம் என்றால், சிறுநீர்ப்பை தசைகளை தளர்த்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. சிறுநீர்ப்பை பயிற்சிகான உடற்பயிற்சிகளும் இதற்கு பயனுள்ள தீர்வாக அமையும்.