மூக்கெலும்பு முறிவு என்றால் என்ன?

மூக்கெலும்பு முறிவு என்பது நாசி எலும்பு அல்லது மூக்கின் சுவர்களில் ஏற்படும் முறிவு ஆகும். மூக்கெலும்பு முறிவு மற்ற முக பாகங்களில் ஏற்படும் முறிவுகளுடன் இணைந்து ஏற்படுகிறது. நாசி குருத்தெலும்பு முறிவினால் மூக்கினுள்ளே இரத்தக்கசிவு உண்டாகலாம், இதனால் மூக்கினுள்ளே அடைப்பு உண்டாகலாம்.

அதிர்ச்சியின்போது தலையில் ஏற்படும் தாக்கம் அல்லது மூக்கின் ஓரங்களில் ஏற்படும் தாக்கத்தினால் மூக்கெலும்பு முறிவு ஏற்படலாம். ஒரு பக்கத்தில் மட்டும் அதிர்ச்சி ஏற்பட்டால், மூக்கு மையத்திலிருந்து விலகிவிடும். தலையில் அதிர்ச்சி ஏற்பட்டால், மூக்கெலும்பு மேலே நகர்ந்து, அனைத்து இடங்களுக்கும் பரவுகிறது மற்றும் இதனால் மூக்கு அகலமாக காட்சியளிக்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மூக்கெலும்பு முறிவின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • மூக்கை தொட்டுப்பார்க்கும்போது மென்மையாக இருத்தல்.
  • மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
  • மூக்கு வழியாக மூச்சு விடுவதில் சிரமம்.
  • வலி மற்றும் வீக்கம்.
  • கண்களை சுற்றி சிராய்ப்பு காணப்படுதல் மேலும் இது பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்கு பிறகு மறைந்துவிடும்.
  • இடைவிடாத தலைவலி.
  • கழுத்து வலி.
  • நினைவிழப்பு.
  • மூக்கு அல்லது முகத்தில் கீறல் காயங்கள் ஏற்படுதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

முகத்தில் முக்கியமான எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் மூக்கெலும்பு முறிவினால் பாதிக்கப்படுகின்றன.

பொதுவாக அதிர்ச்சியினால் மூக்கெலும்பு முறிவு ஏற்படுகிறது, மற்ற பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • சண்டை, விபத்து மற்றும் விளையாட்டு.
  • இயந்திர வாகனங்களினால் ஏற்படும் விபத்து.
  • மூக்கு அடிபடுமாறு கீழே விழுதல்.

மூக்கெலும்பு முறிவு கீழ்கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களை ஏற்படுத்தலாம்:

  • முக அமைப்பில் சீர்குலைவு.
  • நீடித்த நாசி பிரிசுவர் சீர்குலைவு.
  • செரிப்ரோஸ்பைனல் திரவம் கசிவு (சி.எஸ்.எப்).
  • கண்களை சுற்றி வீக்கம்.
  • மூக்கு அடைப்பு.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மூக்கெலும்பு முறிவின் அறிகுறிகளை கவனித்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகவேண்டும். மருத்துவர் மூக்கின் உள்ளேயும் வெளியேயும் முழுமையாக சோதனை செய்வார். இந்த பரிசோதனை ஒருவேளை வலி மிகுந்ததாக கூட இருக்கலாம். எந்த இடத்தில் எலும்பு முறிவாகி உள்ளது என உறுதிப்படுத்த எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனையை பரிந்துரைப்பார். முறிவு மிக கடுமையாக இருந்தால் சி.டி ஸ்கேன் சோதனையும் தேவைப்படலாம்.

நீங்கள் மருத்துவ கவனிப்பை பெரும் வரை, 1-2 மணிநேரத்திற்கு ஒரு முறை 15 நிமிடங்களுக்கு பனிக்கட்டி ஒத்தடம் தர வேண்டும். வழக்கமாக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்கும் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் வலி கட்டுப்படுத்தப்படுகிறது. நோயின் தீவிரத்தை பொறுத்து, ஒரு திறந்த அல்லது மூடிய குறைப்பு சுட்டிக்காட்டப்படலாம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மூக்கெலும்பு முறிவு காரணமாக மூக்கின் அமைப்பில் இழப்பு ஏற்படலாம் மற்றும் குறைபாடு காணக்கூடிய வகையிலும் மற்றும் இது பார்வை குறைபாடுகள் மற்றும் சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

Read more...
Read on app