காறை எலும்பு முறிவு என்றால் என்ன?
காறை எலும்பு முறிவுகளில், 2.6 லிருந்து -5% வரை உள்ள முறிவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் பொதுவான காயமாகும். காறை எலும்பு முறிவு என்பது தொடர்ந்திருக்கும் காறை எலும்பில் ஏற்படும் முறிவு, இது மார்பக எலும்பின் மேற்பகுதியை தோள்பட்டையுடன் இணைக்கக்கூடிய நீளமான, மெல்லிய எலும்பாக இருக்கின்றது. இரண்டு வகையான காறை எலும்புகள் உள்ளன, அவை இரண்டும் மார்பக எலும்பின் இரண்டு பக்கத்திலும் அமைந்திருக்கும். காறை எலும்பு என்பது மருத்துவ முறையில் க்ளாவிக்கள் என அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
லேசாக உடைந்த காறை எலும்பின் அறிகுறிகள்:
- எலும்பு உடைந்த இடத்தில் வலி ஏற்படுதல்.
- தோள்பட்டை அல்லது கைகளை அக்கும்போது வலி ஏற்படுதல்.
- கீழ்நோக்கியோ அல்லது முன்நோக்கியோ தொங்கும் தோள்பட்டை.
- உங்கள் கைகளை உயர்த்தும் போது எலும்பு முறிவதன் ஒலி அல்லது உராயும் உணர்வு ஏற்படுதல்.
- காறை எலும்புகளில் சிராய்ப்பு, வீக்கம், புடைப்பு அல்லது தொடுதலின் போது வலிப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.
மிகவும் கடுமையான முறிவின் அறிகுறிகள் பின்வருமாறு:
- உங்களது கைகள் அல்லது விரல்களில் குறைவான உணர்ச்சி திறன் அல்லது கூச்ச உணர்வு ஏற்படுதல்.
- காறை எலும்பு முறிவு தோலுக்கு எதிராகவோ அல்லது தோலின் வழியாகவோ துருத்தி கொண்டிருத்தல்.
காறை எலும்பு முறிவுடன் தொடர்புடைய சில சிக்கல்கள் பின்வருமாறு:
- நரம்பு அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் காயம்.
- பற்றாக்குறையாகவோ அல்லது தாமதமாகவோ குணமடைதல்.
- எலும்பில் ஏற்படும் கட்டி: இது எலும்பு முறிந்துபோன பிரிவில் குணமடைந்து கொண்டிருக்கும் பகுதியில் ஏற்படுகின்றது.
- கீல்வாதம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- உங்கள் தோள்பட்டை அல்லது நீட்டியிருக்கும் கைகளின் மேல் எதிர்பாராவிதமாக விழுதல்.
- விளையாடலின் போது ஏற்படும் காயங்கள்: ஒருவருக்கு தோள்பட்டையில் நேரடியாக அடிப்படும் போது எலும்பு முறிவு ஏற்படுகின்றது.
- வாகன அதிர்ச்சி அல்லது விபத்து.
- பிறவி காயம்: இது குழந்தை பிறப்பு கால்வாய் வழியை கடந்து பிறக்கும் போது ஏற்படுகிறது.
அசாதாரண காரணங்கள் பின்வருமாறு:
நிற்கும் உயரத்திலிருந்து கீழே விழுதல்: இது வயதானவர்கள் மத்தியிலேயே ஏற்படக்கூடியது, ஆஸ்டியோப்போரோடிக் கொண்டவர்கள் அல்லது சில நோயுற்ற நிலைகளின் காரணமாகவும் இவ்வாறு ஏற்படுகின்றது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
காறை எலும்பு முறிவை கண்டறிய தேவையானவை மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளின் குறிப்புகளாகும்.
நோயாளி நிற்கும் நிலையிலோ அல்லது அமர்ந்திருக்கும் நிலையிலோ முறிந்த எலும்பில் உடலியல் பரிசோதனை மேற்கொள்தலே சிறந்த முறையில் செய்யும் பரிசோதனையாகும், அதோடு எலும்பில் ஏற்பட்ட முறிவினை மதிப்பீடு செய்தல் மற்றும் எலும்பு முறிந்த இடத்தின் மேலுள்ள தோலின் உணர்வுகளை தொடுதலின் மூலம் பரிசோதித்தல் ஆகியவையும் அடங்கும்.
நரம்பு அல்லது இரத்த நாளங்களில் காயம் அல்லது சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிவது மிகவும் அவசியமானது.
பரிசோதனைகளுள் அடங்குபவை:
- எக்ஸ்-கதிர்கள்.
- சிடி ஸ்கேன்.
காறை எலும்பு முறிவின் சிகிச்சைகள் காயத்தின் தீவிரத்தை பொறுத்து அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சை முறை தீர்மானிக்கப்படலாம்.
அறுவை சிகிச்சையல்லாத சிகிச்சை முறை:
- கைகளுக்கான ஆதரவு: ஆதரவிற்காகவும், கை செயல்பாடுகளின் கட்டுபாட்டிற்காகவும் ஸ்லிங்கை பயன்படுத்துதல்.
- அறிகுறி நிவாரணம்: வலி நிவாரணி மருந்துகள்.
- விறைப்பு தன்மையை தடுக்கும் உடற்பயிற்சிகள்.
சுய-பாதுகாப்பு முறைகள்:
- குளிர் ஒத்தடத்தை கொடுத்தல்.
- எந்த கடுமையான உடல் செயல்பாடுகளையும் தவிர்த்தல் அவசியம் அதாவது விளையாட்டு போன்ற உடல் செயல்பாடுகளை கொண்டவைகள்.
அறுவை சிகிச்சைகள்:
அறுவை சிகிச்சை உடைந்த எலும்பு துண்டுகளை வரிசைப்படுத்தவும் மற்றும் எலும்புத்துண்டுகள் அவற்றின் இடத்திலிருந்து இடம்பெயர்தலை தவிர்ப்பதற்காகவும் செய்யப்படுகிறது.