கால் ஆணி என்றால் என்ன?
அதீத உராய்வினாலோ அல்லது அதிகரித்த அழுத்தம் காரணமாகவோ தடித்திற்கும் தோல் பகுதியே கால் ஆணி அல்லது வெறும் ஆணி எனப்படுகிறது. இது பெரும்பாலும் முறையான பராமரிப்பில்லாத பாதம் மற்றும் பொருந்தாத காலணிகளின் உபயோகத்தல் போன்றவையுடன் தொடர்புடையது. இந்தியாவின் புள்ளிவிவரப்படி 10.65 கோடி மக்கள்தொகையில் 2.6 கோடி பேருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
கால் ஆணியினால் ஏற்படும் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே காணப்படும். அந்த அறிகுறிகளுள் அடங்குபவை:
- கடினமான தோல்.
- பாதிக்கப்பட்ட பகுதி கூம்பு வடிவமாகவோ அல்லது வட்டமாக தோற்றமளித்தல்.
- வலி.
- பாதிக்கப்பட்ட இடத்தில் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் போன்ற நிறமாற்றங்கள் ஏற்படுதல்.
- நடப்பதில் ஏற்படும் சிரமம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பொருத்தமற்ற ஷூக்களை பயன்படுத்துதல் மற்றும் உள்ளங்கால்கள்/தோல், காலணிகளுடன் மீண்டும் மீண்டும் உராய்தல் போன்றவையே பெரும்பாலும் கால் ஆணி ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள் ஆகும். ஹை ஹீல்ஸ் காலணிகளை உபயோத்தல் கால்களில் அழுத்ததத்தை அதிகரிக்கரிப்பதினால் இந்நிலை மேலும் சிக்கலடையச் செய்கிறது. கால் விரல்களின் அசாதாரணம் அதாவது சுத்தியல் அல்லது வளைந்த-வடிவத்தை உடைய நகம் போன்றவையும் கால் ஆணி ஏற்பட காரணியாக இருக்கின்றது.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இந்நோய் மருத்துவர் அல்லது போடியாட்ரிஸ்ட்டால் கண்டறியப்படுகிறது. இது பாதங்களை பரிசோதனை செய்வதாலும் நோயாளிக்கு எடுக்கப்படும் மருத்துவ வரலாற்றை வைத்தும் கண்டறியப்படுகிறது. காலின் தோற்றத்தை பார்த்தே அது கால் ஆணி என எளிதில் கண்டறியலாம். ஆணிகளை கண்டறிய அல்லது சிகிச்சையளிக்க இரத்தம் அல்லது இமேஜிங் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவையில்லை.
மருத்துவர்கள் ஸ்கிராப்பிங் மூலமாக தோலின் கடினமான பகுதியை அகற்றி இந்நிலைக்கு சிகிச்சையளிக்கின்றனர். நீரிழிவு போன்ற சில அடைப்படை காரணங்கள் இருப்பினும் இந்நோய் மீண்டும் ஏற்படுதலை கையாண்டு அவற்றை தவிர்த்தல் வேண்டும். உராய்வை குறைத்து கால்களை முறையாக பராமரித்தல் அவசியம், இதோடு கால் ஆணிக்கு வேறேதும் பெரிய மருத்துவ சிகிச்சையின் தலையீடுகள் தேவையில்லை. பெரும்பாலும் வலி மருந்துகள் அசௌகரியத்தை மாற்ற பயன்படுகிறது.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- காலணி மற்றும் தோல் / உள்ளங்கால்களுக்கிடையேயான உராய்வை தடுக்க இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
- எப்போதும் சரியான அளவு கொண்ட காலணிகளையே அணிய வேண்டும், வெறுங்கால்களுடன் எங்கேயும் செல்ல கூடாது.
- கால் விரல்களுக்கு இடையே இடைவேளையை உண்டாக்க கம்பளியை பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்ட இடத்தை குணப்படுத்த முடியும்.
- வலி அல்லது அழுத்தத்தைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட கால்விரல் நகங்களை சிறியதாக வெட்டிவிட வேண்டும்.
- கால்களை 20 நிமிடங்கள் மிதமான நீரில் ஊறவைத்து படிகம் போன்ற கல்லில் தேய்க்கலாம்.
- கால் ஆணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாய்ஸ்சரைசரை தடவுதல் மூலம் மென்மையான தோலை பெறமுடியும்.
இவை அனைத்தையம் சேர்த்து பார்க்கையில், கால் ஆணியை சரியான விதத்தில் பராமரித்தால் அதனை சுலபமாக கையாள முடியும்.