ஃபோலிகுலர் லிம்போமா என்றால் என்ன?
ஃபோலிகுலர் லிம்போமா என்பது நிணநீர் அமைப்பி பாதிக்கும் ஒரு வகை ஹாட்ஜ்கின் அல்லாத ஒரு வகை லிம்போமா ஆகும்.இது மெதுவாக பரவக்கூடியது மற்றும் இதன் அறிகுறி ஆரம்பத்தில் தெரிவதில்லை, நோய் பாதிக்கப்பட்டோர் எந்தவித அறிகுறியும் இன்றி பலநாட்கள் இயல்பாகவே இருப்பர்.இந்த நோய் மிக வேகமாக மீண்டும் வரக்கூடிய தன்மை பெற்றுள்ளதால், நோய் குணமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இது மறுபடியும் வரக்கூடும்.பொதுவாக இந்நோய் 60 வயதினருக்கும் மேற்பட்ட நபர்களில் காணப்படுகிறது.ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்நோய் 2.9/100,000 மற்றும் 1.5/100,000 என்ற மகணக்கில் ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.மேற்கில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் இந்நோயின் தாக்கம் குறைவாகத்தான் உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இது மெதுவாக அதிகரிக்கும் நோயாகும், எனவே இதன் அறிகுறிகளும் படிப்படியாவே தோன்றும். பொதுவாக கழுத்து, கைகளின் கீழ் மற்றும் இடுப்பு பகுதிகளில் கட்டிகள் தோன்றும்.இதன் மற்ற அறிகுறிகளாவன:
- உடல் எடை குறைதல்.
- உணவு உண்ணுதல் குறைந்து போதல்.
- உடலின் வெப்பம் அதிகரித்தல்.
- தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தல்.
- இரவு நேரங்களில் அதிகமாக வியர்ப்பது.
- அதிகமான வேலைகள் செய்யாமலேயே மிகுந்த சோர்வு உண்டாகுதல் (மேலும் படிக்க: சோர்வு ஏற்படும் காரணங்கள்).
மேலும் இருக்கும் சிக்கல்களாவன:
- குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள்.
- குறைந்த அளவு பிளேட்லெட்களின் எண்ணிக்கை.
- கம்மியான நியூட்ரோஃபில்களின் எண்ணிக்கை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஃபோலிகுலர் லிம்போமா நோயிற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.இது தொற்றுநோய் இல்லை என்றாலும் முக்கியமாக லிம்போமாவை ஏற்படுத்தக்கூடிய காரணங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வெளிப்படலாம்.இது ஒரு மரபணு கோளாறினால் ஏற்படுவது இல்லை என்றாலும், பொதுவாக கதிர்வீச்சு, நச்சுக்கள் மற்றும் எந்த ஒரு தொற்றின் காரணங்களாகவும் இதற்கு காரணமாக இருக்கலாம்.புகைப்பிடித்தல், ஆல்கஹால் குடிப்பது மற்றும் அதிக உடல் பருமன்(பிஎம்ஐ) போன்ற ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகளும் இந்நோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய பங்காகும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஃபோலிகுலர் லிம்போமாவை உடல் பரிசோதனை மற்றும் அதன் அறிகுறிகள் மூலமாக கண்டுபிடிக்கலாம்.இந்நோயின் அடிப்படை நிலைமைகளை கண்டுபிடிக்க இரத்த பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படலாம்.இந்நோயை கண்டுபிடிக்கும் மற்ற பரிசோதனைகளாவன:
- எலும்பு மஜ்ஜைகளை பற்றிய மதிப்பீடு.
- சிடி ஸ்கேன்.
- பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (பெட் ஸ்கேன்).
இந்த நிலையின் அறிகுறிகள் முன்னேற்றமடைகிறதா என மருத்துவர் காத்திருந்து பார்ப்பார்.இந்நோய் தாக்கியுள்ளது என தெரியவந்தால், கீழ்கண்ட சிகிச்சைகளை உபயோகிக்கலாம்:
- வேதியியல் ஆய்வியளுடன் கூடிய சிகிச்சை.
- இலக்குகளை தீர்மானிக்கும் சிகிச்சை.
- பராமரிப்பு சிகிச்சை.
- கதிர்வீச்சு சிகிச்சை.
- ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை.
சுய பாதுகாப்பு வழிமுறைகள்:
- அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அதனை கையாள்வது பயனுள்ள சிகிச்சைக்கு உதவும்.
- துரித உணவுகள் மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பதன் மூலமாக நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.
ஃபோலிகுலர் லிம்போமா நோயின் அறிகுறிகளின் போதே அதனை கண்காணிக்க வேண்டும் இல்லையென்றால் படிப்படியாக புற்றுநோயாக மாறக்கூடும்.