விரல் நகக்காயம் என்றால் என்ன?
விரல் நகக்காயம் என்பது விரல்நகத்தின் அமைப்பையும், செயல்பாட்டையும் பாதிக்கும் வெளிப்புற காயமாகும் .இது பணியிடங்களில் செய்யப்படும் கடின உழைப்பினாலும், விரல்நகத்தின் மிகுதியான வளர்ச்சியாலும்,அதிகமாக நகம் கடிப்பதினாலும் ஏற்படலாம். விரல்நகங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்வதினால் காயங்களை தவிர்க்கலாம். நகக்காயங்கள் தினசரி வேலைகளை கடினமாக்கக்கூடும்.
விரல் நகக்காயத்தின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விரல் நகக்காயத்தின் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடுக்குகிறது:
- நகத்தின் அடியில் குவியும் இரத்தத்தினால் ஏற்படும் கருநீல நிறமாற்றம்.
- தொடர்ச்சியான வலி.
- காய்ச்சல்.
- நகங்களில் குத்துவது போன்ற வலி.
- நகங்கள் பெயர்ந்துவிடல்.
- வீக்கம்.
- அவ்வப்பொழுது ஏற்படும் இரத்தக்கசிவு.
- சில நேரங்களில் சீழ் பிடித்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
விரல் நகக்காயத்திற்கான சில முக்கியக்காரணங்கள்:
- வெட்டப்படாத நீண்ட நகங்கள்.
- சிராய்ப்புகள்.
- அதிகப்படியான நகம் கடித்தல்.
- மேல்தோல் கடித்தல்.
- நுண்ணுயிரி மற்றும் நோய்க்கிருமி நோய்த்தொற்றுகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
விரல்நகக்காயங்கள் பாதிக்கப்பட்ட விரைவிலேயே அறிகுறிகளை காட்டத்தொடங்கிவிடும்.
விரல்நகம் அல்லது கட்டைவிரல்நகத்தில் ஏற்பட்டுள்ள காயத்தை மருத்துவர் உடல்சார்ந்த ஆய்வு செய்வார். தசைநார்களில் ஆழமான காயமிருந்தால் மட்டும் இரத்தப்பரிசோதனை மற்றும் இயல்நிலை வரைவு பரிசோதனை தேவைப்படும். பிறகு மருத்துவர் நோய்த்தொற்றினை குணப்படுத்த வலிநிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரை செய்வார்.
வலியை குறைக்க சில வழிகள்:
- அழுக்கையும், நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் களைய ஓடுகிற குளிர்ந்த நீரில் காயத்தை மென்மையாக கழுவ வேண்டும்.
- ஐஸ் பேக் - வலி நிவாரணத்திற்காக, ஒவ்வோரு சில மணிநேர இடைவெளியில், 20 நிமிடங்கள் ஐஸ் பேக் வைக்கவேண்டும். இது இரத்தக்கசிவையும், வலியையும். வீக்கத்தையும் கட்டுப்படுத்தும் முக்கியமான முதலுதவியாகும்.
- கம்ப்ரெஷன் சிகிச்சை.
- ஸ்டீராய்டு அற்ற மருந்துகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்.
விரல் நகக்காயங்களை தவிர்க்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்:
- நகங்களை சரியாக வெட்டுதல்.
- நகங்களையும், நகங்களின் மேல்தோலையும் கடிக்காமலிருத்தல்.
- குறிப்பாக மின்னணு இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யும்பொழுது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுதல்.