விரல் காயம் என்றால் என்ன?

விரல்களில் ஏற்படும் காயம் என்பது பெயர் குறிப்பிடுவது போலவே, விரலின் அமைப்பு மற்றும் செயல்பாடு வெவ்வேறு காரணங்களால் பாதிப்படையும் / மாற்றமடையும் ஒரு நிலைமையாகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படும் காயங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த சொற்கூறாகும். இது மூட்டழற்சி போன்ற நாள்பட்ட காயமாகவோ அல்லது விரல் எலும்புமுறிவு போன்ற கடுமையான காயமாகவோ இருக்கக்கூடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

விரல் காயத்தின் பொதுவான தாக்கங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு:

  • வலி.
  • வீக்கம்.
  • சிவத்தல்.
  • விரல்களை நேராக்க அல்லது வளைக்க இயலாமை.
  • இரத்தப்போக்கு.
  • சிராய்ப்புக் காயம்.
  • வெட்டுக்கள் மற்றும் புண்கள்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

விரல் காயங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • எலும்பு முறிவுகள்.
  • விரலில் உள்ள எலும்புகளின் இடப்பிறழ்வு.
  • மோதிரங்கள் அணிவதன் காரணமாக ஏற்படும் காயங்கள்.
  • மூட்டழற்சி.
  • விரல் சுளுக்கு.
  • கேம்கீப்பர் கட்டைவிரல் போன்ற கட்டைவிரல் சுளுக்கு.
  • விரல் நீக்கம்.
  • விரலில் உள்ள தசைநார்களின் முறிவால் வலி ஏற்படும் நிலைமையான சுக்கான் விரல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மேலே பட்டியலிடப்பட்ட தாக்கங்களும் அறிகுறிகளும் இருந்தால், குறிப்பாக அறிகுறிகள் மோசமாகுவது போல் தோன்றினால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவர் உங்கள் காயம் அல்லது காயமான விரல் அல்லது கட்டைவிரலைப் பரிசோதிப்பார். காயம் ஏற்படுவதற்கான காரணம், தீவிரத்தன்மை, அறிகுறிகள், மருத்துவ அறிக்கை மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்புடைய கேள்விகளைக் கேட்பார். அவர் /அவள் உங்கள் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சில வலி நிவாரணி மற்றும் மருந்துகளை பரிந்துரைபார்.

முறிவு அல்லது தசைநார் கிழிந்திருக்கிறதா என்பதையும் காயத்தின் மேலோட்டமான தன்மையையும் கண்டறிய எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை தேவைப்படுகிறது.  இரத்த பரிசோதனைகள் மற்றும் சி.டி/எம்.ஓர்.ஐ ஸ்கேன் அரிதாகவே தேவைப்படக்கூடும். 

விரல் காயத்திற்கு சிகிச்சையளிக்க சில பயனுள்ள மற்றும் எளிதான வீட்டு வைத்திய முறைகள் பின்வருமாறு:

  • பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பதே இதற்கான மிகப் பயனுள்ள முதலுதவி ஆகும்.
  • பனிக்கட்டி சிகிச்சை, காயமடைந்த பகுதி மீது பனிகட்டி வைப்பது விரலின் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். விரலை நேரடியாக பனிகட்டி மீது வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, பனிகட்டியை ஒரு சுத்தமான துண்டில் வைத்து சுருட்டி காயம் பட்ட இடத்தில் பயன்படுத்தலாம்.
  • அழுத்த சிகிச்சை, வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற காயத்திற்கு மருந்து வைத்து கட்டு போடுதல்.
  • காயமடைந்த விரலை போதுமான அளவு இரத்த ஓட்டம் இருக்கும் வகையில் உயர்த்தி பிடிக்கவும்.
  • வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க அணைவரிக்கட்டை மூலம் விரலின் அசைவுகளை கட்டுப்படுத்துதல்.

Medicines listed below are available for விரல் காயம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Flamingo Frog Splint M1 Device in 1 Packet165.0
Flamingo Frog Splint S1 Device in 1 Packet165.0
Read more...
Read on app