யானைக்கால் நோய் - Filariasis in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

January 10, 2019

September 10, 2020

யானைக்கால் நோய்
யானைக்கால் நோய்

சுருக்கம்

யானைக்கால் நோய், கொசுக்களால் பரப்பப்படும் ஒரு ஒட்டுண்ணி நோய்த்தொற்றாகும், இது நிணநீர் அமைப்பையும், தோலுக்கு அடியிலுள்ள திசுக்களையும் பாதிக்கிறது. இது, உச்செர்ரெரியா பேன்கிராஃப்ட்டி, போர்ஜியா மலாயி மற்றும் போர்ஜியா டிமோரி எனப் பெயர் கொண்ட ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. முதல் இரண்டு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள், இந்தியாவில் ஒரு மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இந்த நோய் இரண்டு பாலினத்தவரையும், எந்த வயதுப் பிரிவினரையும் பாதிக்கக் கூடும். இந்த நோய்த்தொற்று, கொசுக்கள் மூலமாகப் பரவுகிறது.

யானைக்கால் நோய், வெப்ப மண்டல நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, இந்தியா, தென்னமெரிக்கா மற்றும் சீனாவில் மிகவும் பொதுவானது. இந்த பிரச்சினைகளில் மூன்றில்- இரண்டு பங்கிற்கு மேல், ஆசியாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெகுஜன மருத்துவ நிர்வாகத்தின் காரணமாக பிரச்சினைகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்த போதிலும், இப்போதும் ஒரு சில பகுதிகளில் நோய்த்தொற்று விகிதம் அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு தீவிரமான வேகத்தில், நிணநீர் முடிச்சுகள் மற்றும் பிறப்புறுப்புகளில் வலிமிகுந்த வீக்கத்துடன் காய்ச்சல், உடல் வலிகள் தோன்றுகின்ற வேளையில், பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் அறிகுறிகள் காட்டாமல் இருக்கின்றது. நாள்பட்ட அறிகுறிகளோடு உள்ளவர்களுக்கு, கால்களின் கீழ்ப்பகுதியில் நீர் கோர்ப்பதன் காரணமாக, யானைக்கால் நோய் என அறியப்படும் பெருத்த வீக்கம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை, நிணநீர் பாதைகளில் ஏற்படும் அடைப்புகளால் உருவாகிறது. இரத்த உயிரணு ஓட்டத்தில் நோய் கண்டறிதல் உறுதி செய்யப்பட்ட பிறகு, ஒட்டுண்ணி எதிர்ப்பு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

யானைக்கால் நோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Filariasis in Tamil

யானைக்கால் நோய் தொற்றுக்களின் அறிகுறிகள், அவற்றுக்கு காரணமான ஒட்டுண்ணி இனங்களைப் பொறுத்து இருக்கிறது. வழக்கமாக, நோய்த்தொற்று ஏற்பட்ட நபர், கிருமிகளின் செறிவு அதிகமாக இருக்கும் வாலிப பருவத்துக்கு வரும் வரை, அறிகுறிகள் தென்படுவதில்லை. அறிகுறிகள் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:

அறிகுறியின்மை
பெரும்பாலான நிலைகளில், நோய்த்தொற்று ஏற்பட்ட நபரிடம் எந்த அறிகுறிகளும் எப்போதும் தோன்றுவதில்லை. இரத்தத்தில் அதிகமான அளவு ஒட்டுண்ணிகள் உள்ளவர்களுக்கு,மண்ணீரல் சிதைவின் காரணமாக ஏற்படும், குறுமணிகள் என அறியப்படும், திசுக்கள் அழற்சி இருப்பது காட்டக் கூடும். சிலருக்கு சிறுநீர் மங்கலாக இருக்கலாம்.

கடுமையான கட்டம்
யானைக்கால் நோயின் கடுமையான கட்டம், ஒட்டுண்ணிக்கு எதிரான உடலின் நோய் எதிர்ப்பு செயலின் காரணமாக, நோய்த்தொற்றுக்குப் பிறகு உடனடியாக ஏற்படுகிறது. இந்த தாக்குதல்கள், ஒரு நபர், அவர்/அவளின் வேலையைத் தவற விடும் அளவிற்கு அவரை அதிக அளவு பாதிக்கிறது. கடுமையான கட்டத்தில், அந்த நபர் இவற்றுக்கு உள்ளாகலாம்:

  • குறிப்பிட்ட இடைவெளியில் காய்ச்சல்.
  • நடுங்க வைக்கும் குளிர்.
  • உடல் வலிகள்.
  • வீங்கிய, வலிமிகுந்த நிணநீர் முடிச்சுகள்.
  • நிணநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூட்டுக்களிலும் பிறப்புறுப்புகளிலும், அறிகுறிகள் குறைந்த பின் சரியாகக் கூடிய, திரவ கோர்வை எனப்படும் அதிகப்படியான திரவம் சேருதல்.
  • பிறப்புறுப்பு, விரைகள், விந்து தண்டு மற்றும் விரைச்சிரைகளில் அழற்சி.
  • இடுப்புப் பகுதி அல்லது விரைகளில் வலி.
  • தோலின் மேற்படலம் உரிதல்.
  • மூட்டுக்களில் வீக்கம்.
  • நாள்பட்ட நிணநீர் தேக்க வீக்கம்.
    • நிணநீர் முடிச்சுகளில் தொடர்ந்த வீக்கம்.
    • விரைச்சிரை வீக்கம் எனப்படும் விரைகளில் திரவம் சேருதல்.
    • சிறுநீரில், அதற்கு ஒரு மங்கலான தோற்றத்தைக் கொடுக்கும் நிணநீர் திரவம் இருத்தல்.
    • ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்புகளில் ஏற்படும் திரவ கோர்வை.
    • யானைக்கால் வியாதி என அறியப்படும், மார்பகங்கள், கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் திரவ கோர்வை.
    • திரவ கோர்வை, தோல் கெட்டியாகவும் கடினமாகவும் மாறக் காரணமாகிறது.

தீவிர யானைக்கால் நோயின் மற்ற அறிகுறிகளில் அடங்கியவை:

  • வெப்ப மண்டல நுரையீரல் ஈசினோஃபிலியா
    இது, யானைக்கால் நோய்த்தொற்றின் ஒரு மறைமுக வகை. நோய்த்தொற்றுக்கு எதிரான அழற்சியின் காரணமாக அறிகுறிகள் இருக்கின்றன. அறிகுறிகளில் அடங்கியவை:
    • இரவுகளில் வறண்ட இருமல்
    • மூச்சிரைப்பு
    • மூச்சுத்திணறல்
    • கல்லீரல் வீக்கம் (ஹெப்பட்டாமெகலி)
    • நிணநீர் முடிச்சுகளில் வீக்கம்
    • பலவீனம் மற்றும் எடை இழப்பு
    • மார்பு எக்ஸ்ரேயில் அசாதாரணமான கண்டறிதல்கள்
  • ஆன்சோசெரிசியாசிஸ் (தொங்கும் விரைகள் அல்லது சிறுத்தை தோல் எனவும் அறியப்படும்)
    • தோலில் கசடு போன்ற வெளியேற்றம்.
    • எலும்பு துறுத்தல்களில் தோல் புடைப்புகள்.
    • சிலநேரங்களில் வலிப்பு உடன் இணைந்து வருகிறது.
  • லோயியாசிஸ்
    நைஜீரியாவில் கண்டறியப்பட்ட ஒட்டுண்ணி எல் லோவாவுக்கு எதிராக, குறிப்பிட்ட இடத்தின் அதிக உணர்திறன் காரணமாக, அறிகுறிகள் காணப்படுகின்றன. அவற்றுள் அடங்கியவை :
    • வலி
    • அரிப்பு
    • தோல் தடிப்பு அல்லது படை நோய்
    • மூட்டுக்களை சுற்றி வீக்கம்.
    • நரம்பு தொடர்பானவை.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

யானைக்கால் நோய் சிகிச்சை - Treatment of Filariasis in Tamil

யானைக்கால் நோய்க்கான சிகிச்சை நடைமுறைகள் பின்வருமாறு:

  • மருந்துகள்
    யானைக்கால் நோயின் தீவிர அறிகுறிகளுக்கு அவ்வப்போது ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலிநிவாரணிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருந்துகள் வெறுமனே அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, இரத்தத்தில் இருக்கும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளை நீக்குவதற்கு சிறந்த வழி, ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளின் ஒரு தொகுப்பைக் கொண்டு சிகிச்சை அளிப்பதாகும். இந்த மருந்துகள், இந்த புழுக்களின் லார்வாக்கள் உருவானதை அளிக்கவும், வளர்ந்த புழுக்களின் பெருக்கத்தைத் தடுக்கவும் மற்றும் அவற்றைக் கொல்லவும் கூட பயன்படுகின்றன. இந்த மருந்துகள் சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும் கூட, அழற்சி எதிர்ப்பு மருந்துகளால் விடுபட முடியக் கூடிய, பக்க விளைவுகள் அல்லது மோசமான விளைவுகளை உருவாக்காகக் கூடும். நிணநீர் முடிச்சுக்கள் அல்லது இரத்த நாளங்களில் இருக்கும், இறந்த புழுக்களின் தொகுப்பு, ஒரு ஒவ்வாமை விளைவைத் தூண்டி விட அல்லது சீழ்கட்டிகளை உருவாக்கக் கூடும் என்பதால், இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அறுவை சிகிச்சை
    ஒருவேளை, விரைகளில் அசாதாரணமான அளவு திரவம் சேருதல், நிணநீர் முடிச்சுகளில் சுண்ணாம்பு சத்து அதிகமாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால், மேலும், மீதமிருக்கும் புழுக்களின் லார்வாக்கள் உருவாக்கத்தை நீக்க அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

  • ஒரு நோய்த்தொற்றைத் தொடர்ந்து, மருந்துகளோடு பின்வரும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்:
  • கைகள் மற்றும் கால் விரல்களில் உள்ள வலைகளை சுத்தம் செய்தல்.
  • உலருமாறு துடைத்தல், அதன்பிறகு மாயிச்சரைசர் தடவுதல்.
  • நகங்களை வெட்டி சுத்தப்படுத்துதல்.
  • காயங்களையும், நோய்த்தொற்றுக்களையும் தவிர்த்தல்.
  • தொடர்ச்சியாக காயங்களை சோதித்தல் மற்றும் தேவைப்பட்டால் பூஞ்சை எதிர்ப்பு மருத்துவ களிம்புகளைத் தடவுதல்.
  • பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் நோய்த்தொற்றுக்களைத் தடுக்க மூட்டுக்களை தினசரி கழுவுதல்.
  • வீக்கத்தைத் தவிர்க்க கால்களை உயரத்தில் வைத்திருத்தல் மற்றும் தினசரி நடை.
  • போதுமான ஓய்வு எடுத்தல்.


மேற்கோள்கள்

  1. S Sabesan, P Vanamail, KHK Raju, P Jambulingam. Lymphatic filariasis in India: Epidemiology and control measures. Journal of Postgraduate Medicine; Year : 2010 | Volume : 56 | Issue : 3 [Internet]
  2. Ichimori K, King JD, Engels D, Yajima A, Mikhailov A, Lammie P, Ottesen EA. Global programme to eliminate lymphatic filariasis: the processes underlying programme success. PLoS neglected tropical diseases. 2014 Dec 11;8(12):e3328. PMID: 25502758
  3. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Lymphatic filariasis.
  4. National Organization for Rare Disorders [Internet], Filariasis
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Epidemiology & Risk Factors
  6. Stanford Health Care [Internet]. Stanford Medicine, Stanford University; Prevention and Treatment

யானைக்கால் நோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for யானைக்கால் நோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for யானைக்கால் நோய்

Number of tests are available for யானைக்கால் நோய். We have listed commonly prescribed tests below: