காய்ச்சல் - Fever in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

January 10, 2019

March 06, 2020

காய்ச்சல்
காய்ச்சல்

சுருக்கம்

மனித உடல் வெப்பநிலை, 37°செல்சியஸ் அல்லது 98.6°ஃபாரன்ஹீட்டில் பராமரிக்கப்படுகிறது. காய்ச்சல் என்பது, 1°செல்சியஸ் அளவுக்கு, உடல் வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். காய்ச்சல் என்பது, நோயை உருவாக்கும் நோய் கிருமிகளுக்கு எதிராக, உடலின் பாதுகாப்பு அமைப்பு போராடுவது என நம்பப்படுகிறது.

காய்ச்சலுக்கு எண்ணிலடங்கா காரணங்கள் இருக்கின்றன. இது, காரணமான நோய்க்காரணி, கால அளவு மற்றும் காய்ச்சலின் வகையைப் பொறுத்து, எளிமையானது முதல் சிக்கலானது வரை விதவிதமாக இருக்கிறது. உடலில் வளர்சிதை செயல்பாடுகள், முக்கியமாக வெப்பநிலையை சார்ந்தே இருக்கிறது, மேலும் ஒரு நபரின் உடல் வெப்பநிலை அரிதாகவே, அடிப்படை நிலையிலிருந்து 1°செல்சியஸ்க்கு மேல்  வேறுபடுகிறது. 

பாராசிட்டமால் போன்ற மருந்துக்கடையில் வாங்கும் மருந்துகள், மிதமான காய்ச்சலைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், பரிசோதனைகள் ஒரு நோய்த்தொற்றை வெளிப்படுத்தினால், அதன் பிறகு உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி தகுந்த சிகிச்சை தேவைப்படுகிறது.

காய்ச்சலின் நிலைகள் - Stages of fever in Tamil

காய்ச்சலின் நிலைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:

  செல்சியஸ் ஃபாரன்ஹீட்
வெப்பக்குறைபாடு <35°செல்சியஸ் <95° ஃபாரன்ஹீட்
இயல்புக்கும் குறைவான நிலை 35-36.7°செல்சியஸ் 95-97° ஃபாரன்ஹீட்    
இயல்பு நிலை 36.7-37.2°செல்சியஸ் 98-99° ஃபாரன்ஹீட்
மிதமான காய்ச்சல் 37.2-37.8°செல்சியஸ் 99-100° ஃபாரன்ஹீட்
நடுத்தரமான காய்ச்சல் 37.8-39.4°செல்சியஸ் 100-103° ஃபாரன்ஹீட்
அதிகமான காய்ச்சல் 39.4-40.5°செல்சியஸ் 103-105° ஃபாரன்ஹீட்
மிகையான காய்ச்சல் >40.5°செல்சியஸ் >105° ஃபாரன்ஹீட்

காய்ச்சல் கண்டுபிடித்தல் - Diagnosis of Fever in Tamil

உங்கள் உடலை இயல்பாக இயங்க அனுமதிக்காத, சில நோய்த்தொற்று அல்லது அந்நிய பொருட்கள், உங்கள் உடலில் இருக்கும் போது காய்ச்சல் ஏற்படுகிறது. இது ஒரு உடல்நலக் குறைவு அல்ல, ஆனால் மறைந்திருக்கும் ஒரு நோய்த்தொற்று அல்லது மற்ற நோய்களை சுட்டிக்காட்டுவதாகும். காய்ச்சலின் மறைந்திருக்கும் காரணம், ஒரு பொருத்தமான சிகிச்சையை ஆரம்பிக்க, கண்டிப்பாகக் கண்டறியப்பட வேண்டும். ஒருவேளை, காய்ச்சலுக்கான காரணம் தெளிவாக இல்லாவிட்டால், மருத்துவர், காய்ச்சலுக்கான மறைந்திருக்கும் அந்த காரணத்துக்கான, ஒரு தடயத்தை கொடுக்கும் வேறுபட்ட குறிகளை சோதிக்க, அந்த நோயாளியின் விரிவான மருத்துவ சரித்திரத்தை எடுப்பார். ஒரு மருத்துவர் பரிந்துரைக்கக் கூடிய சில பொதுவான பரிசோதனைகள் பின்வருமாறு:

  • இரத்தப் பரிசோதனைகள் (தனிப்பட்ட இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை உட்பட)
  • சிறுநீர் பரிசோதனை மற்றும் ஊடுபொருள் நோய்த்தொற்று சோதனை
  • சிறுநீர் பரிசோதனை மற்றும் ஊடுபொருள் நோய்த்தொற்று சோதனை
  • மலம் பரிசோதனை மற்றும் ஊடுபொருள் நோய்த்தொற்று சோதனை
  • எக்ஸ்ரேக்கள்.

வீட்டில், ஒரு வெப்பமானியைப் பயன்படுத்தி வெப்பநிலையைப் பதிவு செய்வது, காய்ச்சலின் தன்மையைப் புரிந்து கொள்ள உதவக் கூடும். உடல் வெப்பநிலையை அளக்க, பொதுவாக, வெப்பமானியை வைக்கக் கூடிய நான்கு இடங்கள் இருக்கின்றன. அவை:

  • கக்கம் (அக்குளுக்கு கீழ்)
    வெப்பமானியின் முனை அக்குளுக்கு கீழ் வைக்கப்படுகிறது. வெப்பமானியின் நிலை மாறாமல் இருப்பதற்காக, மெதுவாக கையை கீழே இறக்க வேண்டும். 1 நிமிடத்திற்கு அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுவாக, அக்குளில் இருந்து எடுக்கப்படும் அளவீடுகள், உண்மையான வெப்பநிலையை விட, 1°செல்சியஸ் குறைவாக இருக்கும். ஆகவே, அதற்கேற்ப  இறுதி அளவீடுகளை சரி செய்து, ஒருவேளை அவர்/அவள் கேட்கிறார், என்றால், உங்கள் மருத்துவருக்காக பதிவு செய்யுங்கள்.
  • செவிப்பறை
    ஒரு குழந்தைக்காக இருந்தால், செவிப்பறை வெப்பமானிகள் சரியான முறையில் வைக்கப்பட வேண்டும். காது மெழுகு துல்லியமில்லாத அளவீடுகளைக் கொடுக்கக் கூடும்.
  • வாய்
    4 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு, வாய் மூலம் வெப்பநிலை எடுக்கப்பட வேண்டும். வெப்பமானியின் முனை நாக்கின் அடியில் வைக்கப்பட்டு, வாயில் ஏதேனும் திறப்பு இருந்தால், துல்லியமில்லாத அளவீடுகளைக் காட்டக் கூடும் என்பதால், வாயை சரியாக மூட வேண்டும். வெப்பமானியை ஒரு நிமிடம் வரை வைத்திருக் வேண்டும்.
  • மலக்குடல்
    இந்த முறை, 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு துல்லியமான அளவீடைத் தருகிறது. மலக்குடலின் வெப்பநிலை, உடல் வெப்பநிலையை விட, கிட்டத்தட்ட 1°செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். எனவே, அதற்கேற்ப அளவீடுகளை சரி செய்து கொள்ளவும்.

காய்ச்சல் சிகிச்சை - Treatment of Fever in Tamil

காய்ச்சல் மிதமானதாக மற்றும் திரும்ப வரக் கூடியதாக இல்லாமல் இருந்தால், அது தானாகவே குறைந்து விடும் என்பதால், எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை. காய்ச்சல் என்பது, நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட, உடலின் ஒரு பாதுகாப்பு வழிமுறையாகும். உடலின் வெப்பநிலை ஏற்ற இறக்கத்தால், நுண்ணுயிரிகளால் உயிர் வாழ முடியாது. காய்ச்சல் அல்லது அதிலிருந்து எழும் அறிகுறிகளை சமாளிக்க, எடுக்கப்படக் கூடிய சில எளிய படிகள் உள்ளன. அவை:

  • உங்கள் உடலைக் குளிர்ச்சியடைய வைக்கவும், நீர் வற்றிப்போதலைத் தடுக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
  • காய்ச்சல் குறைகிற வரை, செரிமானமாக எளிதான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • போதுமான அளவு ஓய்வு எடுங்கள்.
  • வெதுவெதுப்பான தண்ணீரில் குளியுங்கள்.
  • குளிர்ந்த அழுத்தங்களைக் கொடுங்கள். உடலின் வெப்பநிலையைக் குளிர்ச்சியடைய வைக்க, ஈரமான துணியை நெற்றியின் மீது வையுங்கள்.
  • சுத்தமான காற்று பரவுவதற்காக, ஒரு மின்விசிறியை ஓட விடுங்கள்.

பாராசிட்டமால் போன்ற ஓ.டி.சி (மருந்துக்கடையில் வாங்கும்) மருந்துகள், மிதமான காய்ச்சலைக் குறைக்க, திறனுள்ளதாக இருக்கக் கூடும். ஆனால், இரத்தப் பரிசோதனை மூலம் நோய் கண்டறிதலில், ஒரு நோய்த்தொற்று இருப்பது வெளிப்பட்டால், அதன் பின், மருத்துவரின் அறிவுரையின் அடிப்படையில் பொருத்தமான சிகிச்சைத் திட்டம் பின்பற்றப்பட வேண்டும். மருத்துவர், நோய்க்கு சிகிச்சையளிக்க உதவக் கூடிய, சில நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும், அதே போன்று காய்ச்சல் எதிப்பு மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.

சிசுக்களுக்கு, ஒரு சில நாட்களுக்குக் காய்ச்சல் தொடர்ந்தால் கூட, மருத்துவனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

காய்ச்சல் என்பது, ஒரு அந்நியமான பொருளின் காரணமாக, உடல் செயல்படும் முறையில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதலினால் ஏற்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும். அதனால், இதை சமாளிக்க உருவாக்கிய, கணிசமான மாற்றங்கள் எதுவும் இல்லை. வழக்கமாக காய்ச்சல், மன அழுத்தம் அல்லது உடலின் அதீத உழைப்பு அல்லது போதுமான ஓய்வின்மையின் காரணமாக ஏற்படுகிறது. அப்படியென்றால், காரணத்தை அழிப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுங்கள். போதுமான அளவு ஓய்வு எடுங்கள் மற்றும் தியானம் செய்யுங்கள். இருமல் அல்லது வெப்ப வாதம் போன்ற தங்கி விடும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய, தூசு மற்றும் அதிகமான சூரிய ஒளி/வெப்பம் போன்ற ஒவ்வாமைகளுக்கு எளிதில் இலக்காகக் கூடியவர் என்றால், அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கவும். சிறிய நோய்த்தொற்றுக்களைப்  பிடித்துக் கொள்ளும் அபாயம் அதிகரிப்பதால், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதைத் தவிருங்கள்.

போதுமான அளவு ஓய்வு எடுப்பது மட்டுமே, கையாள போதும் எனும் அளவுக்கு காய்ச்சல் எளிதானது, என்பது சில நேரங்களில் நிரூபணமாகிறது. உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், இரத்தத்தில் எலக்ட்ரோலைட் அளவுகளைப் பராமரிக்கவும், திரவ பானங்கள் எடுத்துக் கொள்வதை அதிகரியுங்கள். எளிதான ஆடைகளை அணியுங்கள், அதாவது, சுத்தமான ஆடைகளை அணியுங்கள் மற்றும் அறையைக் காற்றோட்டமாக வைத்திருங்கள். சுய சுகாதாரத்தைப் பராமரியுங்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்தால், தடுப்பூசி அட்டவணையைத் துல்லியமாகப் பின்பற்றுங்கள்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. American College of Emergency Physicians [Internet] Texas, United States; Fever
  2. DimieOgoina. Fever, fever patterns and diseases called ‘fever’ – A review. Journal of Infection and Public Health Volume 4, Issue 3, August 2011, Pages 108-124. Elsevier B.V. [Internet]
  3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; When & How to Wash Your Hands
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Healthy Habits to Help Prevent Flu
  5. Merck Manual Consumer Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Inc.; c2018. Fever in Adults.
  6. Health Harvard Publishing; Updated: April 30, 2018. Harvard Medical School [Internet]. Fever in adults. Harvard University, Cambridge, Massachusetts.

காய்ச்சல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for காய்ச்சல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.