மயக்கம் (உணர்விழப்பு) என்றால் என்ன?
மயக்கம் என்பது மருத்துவ முறையில் உணர்விழப்பு என அழைக்கப்படுகிறது, இந்நிலையில் ஒரு நோயாளி தற்காலிகமாக தன் நினைவுகளை இழந்துவிடுவார்கள். பொதுவாக, பல்வேறு காரணங்களால் இது ஏற்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மயக்கம் என்பது ஒரு மருத்துவ நோயின் அறிகுறியாக கருதப்படுகிறது, எனவே உடனடியாக கவனிப்பது நல்லது.
மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட குறைபாடு ஏர்படும்போது, மயக்கம் ஏற்பட்டு, சில விநாடிகளுக்கு நீடிக்கிறது. இரத்த ஓட்டம் தடைபட பல காரணங்கள் உண்டு. அதிர்ஷ்டவசமாக இந்த தடங்கல் தற்காலிகமானது மற்றும் ஆபத்தற்றது, இருப்பினும், உயிருக்கு கேடு விளைவிக்க கூடிய காரணங்களினாலும் மயக்கம் ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மயக்கத்தின் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- வெளிறிய தன்மை.
- குமட்டல்.
- தலைசுற்றல்.
- இதய துடிப்பில் மாற்றம் ஏற்படுதல் (மேலும் படிக்க: குருதி ஊட்டக்குறை சிகிச்சை).
- தெளிவற்ற அல்லது மங்கலான பார்வை.
- காய்ச்சல்.
- சளி, மிகவும் ஈரமான தோல்கள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் மயக்கம் ஏற்படுகிறது. இரத்த ஓட்டம் தடைபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை:
- மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக இதயம் இரத்ததை உந்தும் திறனை இழப்பது.
- பக்கவாதம் காரணமாக மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன்-இல் குறைபாடு.
- உடலில் இரத்தம் மற்றும் திரவ குறைபாடு (நீர்ச்சத்துக் குறைவு, கடுமையான வயிற்றுப்போக்கு).
- மூளைக்கு இரத்தம் அனுப்பும் இரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடு.
மயக்கத்தை தூண்டும் மற்ற பொதுவான காரணிகள்:
- மிகுந்த வெப்ப தாக்குதலினால் நீண்ட நேரம் ஆட்கொள்ள படுவது.
- அதிக அழுத்தம் அல்லது சிரமம்.
- பலவீனம் அல்லது இரத்த பற்றாக்குறை.
- நீர்ச்சத்துக் குறைவு.
- மதுபானம் அதிகப்படியாக குடிப்பது.
- காலை உணவை தவிர்ப்பதனால் இரத்தத்தில் குறையும் சர்க்கரை அளவு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பல மருத்துவ நிலைமைகளுக்கு மயக்கம் ஏற்படுதல் என்பது ஒரு முக்கியமான மற்றும் பொதுவான அறிகுறி ஆகும் என்பதால் இதனை கண்டுபிடிக்க எந்த பரிசோதனைகளும் தேவையில்லை. எனினும், மயக்கத்திலிருக்கும் நோயாளியை மருத்துவரிடம் காட்டும் போது, மருத்துவர் அந்நோயாளியின் உடல்நிலையை ஆராய்ந்து, மயக்கத்திற்கான காரணங்களை கண்டறிவார்.
மீண்டும் மீண்டும் மயக்கமடைவதை தடுக்க அடிப்படை காரணத்தை முன்னிலைப்படுத்துவது அவசியம்.
உடல் நிலை சீராக உள்ளதா என்பதை சரிபார்க்க மருத்துவர் சில பரிசோதனைகளை பரிந்துரைப்பார். அவை;
- இதய செயல்பாடுகளை சரிபார்க்க எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ECG).
- இரத்த சோகையை பரிசோதிக்க இரத்த பரிசோதனை.
- நீரிழிவு அல்லது தொற்று, ஹார்மோன் குறைபாடு மற்றும் பல நோய்களை கண்டுபிடிக்க இரத்த பரிசோதனை.
- மண்டை ஓட்டின் எக்ஸ்ரே (எக்ஸ் - ரே) சோதனை அல்லது சிடி ஸ்கேன் ஆகியவைகளும் தேவைப்படலாம்.
அடிப்படை காரணங்களை பொறுத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் மயக்கம் சில நொடிகளுக்கு நீடிக்கும், ஒருவேளை மீண்டும் மீண்டும் மயக்கம் வருவது அல்லது நீண்ட நேரம் நீடிக்கிறது எனில், உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். உணவு மாற்றங்கள், இதய நோய் அல்லது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் காரணங்களை பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன.