காதில் மெழுகால் ஏற்படும் அடைப்பு என்றால் என்ன?
காதிலிருக்கும் மெழுகு என்பது காதுகள் தாமாகவே சுத்தம் அடைய இயற்கையாகவே மனித உடலில் உள்ள ஒரு பொருளே ஆகும். இது காதுப்பீளை என்றும் அழைக்கப்படுகின்றது. இது பாக்ட்ரியா எதிர்ப்பு மற்றும் மசகு பண்புகளைக் கொண்டுள்ளது. எனினும், காதுப்பீளை அதிகமாகச் சேர்ந்து, அதனை சுத்தம் செய்யாவிட்டால், அது காதில் மெழுகால் ஏற்படும் அடைப்பிற்கு வழிவகுக்கும். இது மேலும் பல சிக்கல்களை விளைவி.க்கிறது.
பெரும்பாலும், இது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்குமே அதிகம் ஏற்படும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இது பொதுவாக ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும். உங்களுக்கு காதில் உள்ள மெழுகினால் ஏற்படும் அடைப்பு ஏற்பட்டால், கீழ்காணும் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை உணரக்கூடும்:
- காது கேட்பதில் தொந்தரவு.
- காதடைப்பு.
- காதுகளை மீண்டும் மீண்டும் குடைய வேண்டும் அல்லது தேய்க்க வேண்டும் என்பது போன்ற உணர்வு.
- ஓயாத அரிப்பு.
- காதில் ஓயாத இரைச்சல் இருப்பது (காதிரைச்சல் எனவும் அழைக்கப்படுகிறது).
- தலைச்சுற்றல்.
- நோய் தீவிரமடைந்த நிலையில் காதுகளில் இருந்து திரவம் வெளியேறுதல்.
- காது கால்வாயின் சோதனையின் போது, அதிக அளவிலான காத்துப்பீளை அடைத்திருத்தல்.
ஒருவேளை முற்றிலுமாக காது அடைபட்டுவிட்டால், உங்களுக்கு காது குறைவாகத் தான் கேட்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
எளிதில் சரிசெய்யக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- அடிக்கடி காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதால், காதிலுள்ள அழுக்கு பின்தள்ளப்பட்டு, சேர்ந்துவிடுகிறது.
- பொதுவாக அதிகப்படியான காதுப்பீளை உற்பத்தியாகுதல்.
- செவிச்செருகியை அடிக்கடி பயன்படுத்துவதால், காதிலுள்ள அழுக்கு பின்தள்ளப்பட்டு, சேர்ந்துவிடுகிறது.
- ஊக்கு அல்லது அது போன்ற பொருட்களின் பயன்பாடு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மேற்கண்ட அறிகுறிகள் அல்லது தாக்கங்கள் உங்களுக்கு ஏற்பட்டால், அது மோசமடைவதற்கு முன் உங்கள் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். செவியாக நோக்கியை பயன்படுத்தி காதில் காதுப்பீளை எங்கு அடைத்திருக்கிறது என மருத்துவர் பரிசோதிப்பார். இதனை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் இரத்த அல்லது இயல்நிலை வரைவு பரிசோதனைகள் தேவையில்லை.
நோய் கண்டறிதலுக்குப் பின், உங்கள் காதுகளை சுத்தம் செய்யும் மருந்துகளையோ, நீங்களாகவே சுத்தம் செய்யும் முறையையோ மருத்துவர் பரிந்துரைப்பார்.
காதிலிருக்கும் மெழுகை சுலபமாக அகற்ற, காது சொட்டு மருந்துகளையும் பரிந்துரைப்பார். தேவைப்பட்டால், நீங்கள் மருத்துவரிடமே காதிலிருக்கும் மெழுகை அகற்றலாம்.