தேவைக்கு அதிகமான அளவு மருந்து உட்கொள்ளுதல் என்றால் என்ன?
இது நச்சுத்தன்மை அல்லது விஷமாக மாறக்கூடிய அளவில் அதிகப்படியான மருந்து (இது சட்டவிரோத மருந்துகள், மருந்துக்குறிப்பு, மற்றும் மருந்துக்குறிப்பு இன்றி வழங்கப்படும் மருந்துகள், அல்லது குறிப்பிட்ட மூலிகை மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம்) உட்கொள்ளுதளே ஆகும், இது சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தக் கூடும். தேவைக்கு அதிகமான அளவு மருந்து உட்கொள்ளுதலின் விளைவு நபருக்கு நபர் வேறுப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
உட்கொண்ட மருந்துகளின் வகை மற்றும் அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு காரணிகளைப் பொறுத்து, மற்றும் நபரின் ஆரோக்கிய நிலை, ஆரம்ப நிலை தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் வேறுபடலாம். பொதுவான அறிகுறிகள் சில பின்வருமாறு:
- வயிற்றுப்போக்கு, வாந்தி அல்லது குமட்டல்.
- அடிவயிற்று தசைப்பிடுப்புக்கள்.
- உட்புறத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு.
- தலைச்சுற்றுதல் அல்லது மயக்கம்.
- சுவாசிப்பதில் சிரமம்.
- சமநிலையின்மை.
- வலிப்புத்தாக்கங்கள்.
- குழப்பம் அல்லது மாயத்தோற்றம்.
- கண்பார்வை இடையூறுகள்.
- சத்தமாக குறட்டை விடுதல்.
- நீல நிறமாக மாறுதல் (தோலில் ஏற்படும் நீல நிற மாற்றம்).
- கோமா.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தேவைக்கு அதிகமான அளவு மருந்து உட்கொள்ளுதல் பின்வரும் காரணங்களால் ஏற்படக்கூடும்:
- வேண்டுமென்றே தனக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்டு அல்லது சுயஇன்பத்திற்காக மருந்துகளை தவறாக பயன்படுத்துதள் (இது தற்கொலை முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்).
- ஒருவர் தற்செயலாக, தன்னை அறியாமல் பின்வருவனவற்றை உட்கொள்ளக்கூடும்:
- தவறான மருந்து.
- தவறான மருந்துகளின் கலவை.
- தவறான அளவிலான மருந்து.
- மருந்துகளை தவறான நேரத்தில் எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அதிகப்படியான மருந்தை உட்கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், உடனடியாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும். மருத்துவர் அல்லது சுகாதாரக் குழுவானது நோயாளியின் முழுமையான நிலையை மதிப்பீடு செய்ய பின்வரும் சோதனைகளை மேற்கொள்ளுவார்கள்:
- பல வகையான இரத்தப் பரிசோதனைகள்.
- நோயாளியை கூர்ந்து கவனித்தல்.
- ஒரு உளவியல் ஆய்வு மேற்கொள்ளுதல்.
அதிகப்படியான மருந்து உட்கொள்ளுவதற்கான சிகிச்சையானது, உட்கொண்ட வகை மற்றும் மருந்தின் அளவு (மருந்துகள்) போன்றவற்றின் விளைவுகளை சார்ந்துள்ளது. இது மருந்துடன் வேறு என்ன உட்கொள்ளப்பட்டது, எப்படி உட்கொள்ளப்பட்டது மற்றும் எப்போது இது உட்கொள்ளப்பட்டது என்பது போன்ற பல காரணிகளையும் உள்ளடிக்கியது. சிலருக்கு இந்த சிகிச்சையானது குறுகிய காலமாக இருக்கிறது, ஆனால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு நீண்டகால சிகிச்சை முறை தேவைப்படுகிறது.
இதற்கான முதல் உதவி சிகிச்சை நடவடிக்கைகள் பின்வருமாறு:
- பாதிக்கப்பட்ட நபரை சுற்றி காற்றோட்டமாகவும், அமைதியாகவும் இருக்கும்படி வையுங்கள், அவரின் தலையை சாய்த்து, கன்னத்தை உயர்த்தி பிடிக்கவும். பாதிக்கப்பட்ட நபர் சில மருத்துவ உதவிகளைப் பெறும் வரை அவரின் சுவாச திறனை கண்காணிக்கவும். பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவில் இல்லை ஆனால் சுவாசிக்கிறார் என்றால், அவர்களை ஒரு பக்கமாக படுக்க வைக்க வேண்டும், அதுவே அவர் குணமாவதற்கான ஏற்ற நிலை இருப்பு ஆகும். பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுக்கவோ, சாப்பிடவோ அல்லது எதுவும் குடிக்கவோ கூடாது.
- அளவுக்கும் அதிகமாக உட்கொண்ட மாத்திரைகள் சேகரிக்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும்.
இதற்கான சிகிச்சை பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:
- உடலில் இருந்து மருந்து அகற்றப்படுதல் (கரைசல் போன்ற ஒரு பொருள் போதை மருந்துடன் பிணைக்க உதவுகிறது, எனவே உடல் அதை உறிஞ்ச முடியாது. சில சமயங்களில் கிளர்வுற்ற கரியின் பயன்பாடு மலச்சிக்கலுக்கு காரணமாகிறது, அதனால் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.இந்த கரி சில மருந்துகளின் செயல்பாட்டுடன் இணைந்து அதன் செயல்திறனை மாற்றுகிறது. இந்த கரிமம் குறிப்பிட்ட சில மருந்துகளின் செயல்பாட்டை தடுக்கிறது [குறிப்பாக பெண்களுக்கு வாய்வழி கருத்தடை முறைகள் பயன்படுகின்றன ]).
- ஒரு மாற்று மருந்து கொடுத்தல் (ஒரு மாற்று மருந்து கொடுப்பது விஷ தன்மையிலிருந்து எதிர்த்து போராட உதவுகிறது) நல்லது, ஒப்பியேட் மருந்து அதிகப்படியாக உட்கொண்டிருக்கும் படச்சத்தில், நாலோக்சன் ஹைட்ரோகுளோரைடு போன்றவை உள்ள மருந்தை தேவைப்படும் பொது கொடுக்க வேண்டும்.
- அவரை தொடர்கண்காணிப்பில் வைப்பது குணமடைவதற்கு அவசியமாகும். இதனை வைத்து, மருத்துவர் சிகிச்சை தேவைப்படுமா அல்லது வேறு உதவி வேண்டுமா என்று முடிவெடுக்க உதவும்.
- நோயாளி முழுமையாக குணமடைந்த பின்னர், ஒருவேளை அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது மிகவும் முக்கியம்.