நீரிழிவு நெப்ரோபதி என்றால் என்ன?
நீரிழிவு நெப்ரோபதி என்பது சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும் மிக பொதுவான கோளாறாகும். சிறுநீரகத்தின் முதன்மை பணியானது இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதே. நீரிழிவு நோய் நீண்ட காலம் நீடித்திருக்கும் போது சிறுநீரகத்தின் ஃபில்டரிங் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, அதிலிருக்கும் திசுக்களுக்கு பாதிப்பை விளைவிப்பதால் சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கம் (நெப்ரோபதி).
இதன் முக்கிய அறிகுறிகளும் அடையாளங்களும் என்ன?
பெரும்பான்மையான சிறுநீரகத்தின் செயல்பாடு செயலிழக்கும் வரை சிறுநீரக நோய்களுக்கான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. மேலும், இறுதியில் தோன்றும் அறிகுறிகள் குறிப்பிடத்தக்கது அல்ல. திரவம் கட்டுதலே நெப்ரோபதியின் முதல் அறிகுறியாகும். மற்ற அறிகுறிகள் கீழே:
- தூக்கமின்மை.
- வயிற்றில் அசௌகரியம்.
- பசியின்மை.
- பலவீனம்.
- இரத்த அழுத்தத்தில் சமநிலையின்மை.
- சிறுநீரில் இருக்கும் புரதம்.
- கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது குழப்பம்.
- தொடர்ந்திருக்கும் அரிப்புத்தன்மை.
- அதிகமாக சிறுநீர் கழித்தல்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
நீரிழிவு நெப்ரோபதியின் முக்கிய காரணங்கள் என்ன?
சிறுநீரகத்தில் பல நுண்குழாய்கள் இருக்கின்றன இவை இரத்தத்தில் உள்ள கழிவுகளை ஃபில்டர் செய்கின்றன. இந்த நுண்குழாய்கல் சிறிய துவாரங்களை கொண்டிருப்பதால், அதன் வழியாக கழிவுப்பொருட்கள் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. இரத்த அணுக்கள் மற்றும் புரதங்கள் இந்த துவாரங்களை விட உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவதில்லை.
அதிகரித்திருக்கும் சர்க்கரை அளவு இந்த துவாரங்களை பெரிதாக்கி சேதத்தினை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவாக இரத்தமும் சிறுநீர் வழியாக வெளியேறக்கூடும். இது குளோமருளி எனப்படும், சிறுநீரக ஃபில்டர்களில் சேதத்தை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், இந்த ஃபில்டர்களில் கசிவு ஏற்பட ஆரம்பிப்பத்தோடு சிறிய அளவிலான முக்கியமான புரதங்களும் சிறுநீரில் வெளியேறுகின்றது (மைக்ரோபுபூமினூரியா). சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டுவிட்டால், இந்நிலையே அதிகளவிலான மைக்ரோபுபமின் இழப்புக்கு காரணமாகின்றது, இதனை தொடர்ந்து இறுதி-நிலை-சிறுநீரக-நோய் (இ எஸ் ஆர் டி) ஏற்படுகிறது.
பின்னர், சிறுநீரகங்களில் ஏற்படும் அழுத்தங்கள் ஃபில்டரிங் திறனை இழக்க செய்கின்றது. இதனால் இரத்தத்தில் கழிவு பொருட்கள் குவிந்துவிடுவதோடு இறுதியில், சிறுநீரக செயலிழப்பு உண்டாகிறது.
நீரிழிவு நெப்ரோபதியின் கண்டறியும் முறை மற்றும் சிகிச்சைமுறை யாவை?
உங்கள் மருத்துவர் உடலியல் பரிசோதனை மேற்கொள்வதால் மருத்துவ வரலாற்றை எடுத்துக்கொள்ளக்கூடும். உங்களுக்கு அறிவுறுத்தப்படும் சோதனைகளுள் அடங்குபவை பின்வருமாறு:
- சிறுநீரகங்களின் நிலையை பரிசோதித்து அதன் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய இரத்த பரிசோதனைகள்.
- சிறுநீரில் உள்ள புரதங்களை பரிசோதிக்க சிறுநீர் சோதனைகள். சிறுநீரில் இருக்கும் மைக்ரோபுபமின் என்றழைக்கப்படும் அதிக அளவான புரதம் நெப்ரோபதியின் ஆரம்ப கட்டத்தை குறிக்கின்றது.
- எக்ஸ்-கதிர்கள், எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை சிறுநீரகங்களில் இருக்கும் இரத்த ஓட்டத்தை பரிசோதிக்க உதவுகின்றன.
- ஃபில்டரிங் திறனை பரிசோதிக்க சிறுநீரக செயல்பாட்டு சோதனை.
- சிறுநீரக திசுப்பரிசோதனை.
நெப்ரோபதியின் ஆரம்ப கட்டங்களில் பயன்படுத்தப்படும் மருந்துகள்:
- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதலுக்கான மருந்துகள்.
- உயர் இரத்த சர்க்கரை அளவை கையாளக்கூடிய மருந்துகள்.
- இரத்தக் கொழுப்பு அளவுகளை குறைப்பதற்கான மருந்துகள்.
- சிறுநீரில் இருக்கும் புரத அளவுகளை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள்.
இறுதி கட்டங்களில், சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் அறிவுறுத்தப்படலாம்.