சுருக்கம்
சிக்கன்குனியா, ஏடிஸ் கொசுவின் மூலம் பரப்பப்படுகிற ஒரு வைரஸ் நோயாகும். கடந்த பத்தாண்டு காலத்தில், ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியா, கரீபியன், மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் சிக்கன்குனியாவின் திடீர் பெருக்கங்களில், ஒரு கணிசமான அதிகரிப்பு இருப்பதாக அறிக்கைகள் இருக்கின்றன. இந்த கொசுவால் கடிக்கப்படும் பெரும்பாலான மக்கள், அறிகுறிகளைக் காட்ட முனையும், சிக்கன்குனியா வைரஸை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அறிகுறிகளில், கடுமையாகக் கூடிய, காய்ச்சல் மற்றும் மூட்டுவலி அடங்கும். பெரும்பாலான மக்கள், 7-10 நாட்களுக்குள் இந்த நோயிலிருந்து குணமடைய ஆரம்பிக்கிறார்கள். பிறந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள், சிக்கல்கள் உருவாவதற்கான அதிகளவு அபாயத்தில் இருக்கிறார்கள். ஏடிஸ் கொசு, சுற்றுப்புறங்களில் சேர்ந்துள்ள தேங்கிய தண்ணீரில் பல்கிப் பெருகவும், இனப்பெருக்கமும் செய்கிறது. அதனால், நோய் வரும் அபாயத்தைக் குறைக்க, சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3-4 முறைகள், குளிரூட்டிகள், பூத்தொட்டிகள், ஜாடிகள் மற்றும் மீன் தொட்டிகளில் உள்ள எந்தத் தண்ணீரையும், அதில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க, வெளியேற்றி விட்டு, புதிய தண்ணீரை நிரப்புவது கட்டாயமானதாகும். மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், கொசு வலை, கொசுத் தடுப்பு களிம்புகள்/க்ரீம்களைப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பளிக்கும் ஆடைகளை அணிவது ஆகியன அடங்கும். சிக்கன்குனியாவைத் தடுப்பதற்கு தடுப்பூசி இல்லை மற்றும் குணப்படுத்துவதற்கு மருந்தும் இல்லை. அதனால், சிகிச்சை, அறிகுறிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. சிக்குன்குனியா மற்றும் டெங்குவின் அறிகுறிகள், காய்ச்சல் இரண்டிலும் பொதுவாக இருப்பதால், ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. ஆகவே, ஒரு நோயை மற்றொன்றுடன் குழப்பிக் கொள்வதற்கு சாத்தியம் இருக்கிறது. இதனால், சிகிச்சையை ஆரம்பிக்க ஒரு முறையான நோய் கண்டறிதல் முக்கியமானதாகும். சிகிச்சை மற்றும் மீண்டு வருதலில் ஒரு முறையான மார்க்கத்தைப் பின்பற்றினால், அறிகுறிகள் வழக்கமாக 2-3 வாரங்களில் குறைகிறது. சிக்கன்குனியாவில் சிக்கல்கள் அரிதானவை மற்றும் தடுப்பு யுக்திகள், பாதிக்கப்படக் கூடிய சமூகத்தில் திடீரென்று சிக்குன்குனியா அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதில், பெரிதும் உதவிகரமாக இருக்கக் கூடும்.