சாண்டலர்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?
கருவிழியில் வீக்கம், கருவிழிப் படலம் உருக்குலைவு அடைதல் மற்றும் கண்களைச் சுற்றி வழக்கத்துக்கு மாறான வகையில் உயர்ந்த அழுத்தம் ஏற்படுதல் போன்ற மாற்றங்கள் கண்களில் ஏற்படும் நிலைமையே சாண்டலர்ஸ் சிண்ட்ரோம் ஆகும். இது ஒன்றுக்கொன்று இணைப்புடைய மூன்று கண் கோளாறுகளில் ஒன்றான ஐரிடோகார்னியல் சிண்ட்ரோம் என்பதைச் சார்ந்தது ஆகும். இதில், கருவிழியின் உள்படலம் (கருவிழியின் ஒரு மெல்லிய திசு) வழக்கத்துக்கு மாறாகவும் சுத்தியால் அடிக்கப்பட்ட வெள்ளியைப் போன்றும் தோற்றமளிக்கும். இது ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிக்கிறது மற்றும் நடுத்தர வயதினர்கள் முதல் இளைஞர்கள் வரை இது பொதுவாக காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- மங்கலான பார்வை.
- கருவிழியின் வீக்கம்.
- அசாதாரண கருவிழிப்படலம்.
- விளக்குகளைச் சுற்றி வானவில் நிறங்களில் ஒளிவட்டம் தெரிதல்.
- புற பார்வை இழப்பு.
கண்ணின் கருமணி அதன் சாதாரண நிலைப்பாட்டிலிருந்து இடம்பெயர்ந்து, வடிவம் மற்றும் அளவுகளில் சிதைந்து காணப்படும். இது போன்ற மற்ற கண் கோளாறுகளை விட இதில், கருவிழிப்படலத்தின் அளவு குறைப்பு சற்று குறைவாக காணப்படுகிறது. அசாதாரண கருவிழியின் உள்படலம், ஒரு சுத்தியால் அடிக்கப்பட்ட வெள்ளி மேற்பரப்பை போன்று கருவிழியின் பின்புறத்தில் தோன்றுகிறது.
ஐரிடோகார்னியல் சிண்ட்ரோமின் மற்ற இரண்டு வகைகளிலும் இது போன்ற அறிகுறிகள் காணப்படும். அவை பின்வருமாறு:
- அதிகரிக்கும் கருவிழிப் படலத்தின் பிழையூட்ட நலிவு.
- கோகன்-ரீஸ் சிண்ட்ரோம்.
சாண்டலர்ஸ் சிண்ட்ரோம் உள்ள நோயாளிகளில் 82% அதிகமான நோயாளிகளுக்கு கண்விழி விறைப்பு நோய்/விழியிறக்கம் அல்லது கண்களுக்குள் அதிகரித்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் காணப்படுகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அழற்சி அல்லது நீண்டகால வைரஸ் தொற்று இதன் சாத்தியமான காரணமாக இருக்கக்கூடும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர். உட்சுரப்பியல் மேற்பரப்பு வழக்கமாக கருவிழிப்படலத்திலிருந்து விழி முன்னறை நீர்ப்படலத்தை வெளிக்கொணர்கின்றது. இந்த நடவடிக்கை தோல்வியடைந்தால், கருவிழிப்படலத்தில் திரவம் குவிதல் ஏற்படுகிறது மற்றும் தெளிவற்ற பார்வைக்கு வழிவகுக்கிறது. இது தலைவலி மற்றும் பார்வை மங்கலாக்குதல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட கண்விழி விறைப்பு நோய்/விழியிறக்கம் நோய்க்கு வழிவகுக்கலாம்.
இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
இந்த நிலை பொதுவாக நோய்தாக்கத்தின் கவனமான மதிப்பீடு மற்றும் ஒரு முழு கண் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியப்படுகிறது. சாண்டலர்ஸ் சிண்ட்ரோம் பொதுவாக ஒருதலைப்பட்சமான, இரண்டாம் நிலை கோண மூடுதல் கண் அழுத்த நோய் உள்ள நோயாளிகளிடத்தில் கண்டறியப்படுகிறது. இதே போன்ற மற்ற கோளாறுகளில் இருந்து வேறுபடுத்தி இதனை கண்டறிய வேறுபட்ட கண்டறிதல் முறைகள் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சோதனைகள் பின்வருமாறு:
- கோணம் காண்டல்.
- உள்விழி அழுத்தம் மற்றும் கருவிழியின் தடிமன் அளவீடு.
- காட்சி புலம் சோதனை.
- கண்நரம்பு இயல்நிலை வரைவு.
கண் அழுத்த நோயின் மதிப்பீட்டிற்கு பொதுவாக கண்ணில் உள்ள வீக்கம் மற்றும் அழுத்தத்தை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
இதன் சிகிச்சையானது வீக்கத்தை குறைக்க உதவுகிறது, இது கண் அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேற்பூச்சு மருந்துகள் முதலுதவி சிகிச்சையாக பயன்படுத்தப்படுகின்றன. கண்களின் அழுத்தத்தை குறைக்க சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. நோய் கடுமையாக இல்லாத போது, லென்ஸ்கள் மற்றும் ஹைபெர்டோனிக் (அழுத்தமிகு) உப்புக்கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
அறுவை சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- கண்ணில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க டிராபெகுலெக்டோமி.
- கருவிழி மாற்று அறுவை சிகிச்சை.
நோய் அறிகுறிகளின் விளைவு, சிக்கல்களின் வளர்ச்சியைப் பொறுத்தது. இதையொட்டி, நோய் கண்டறிதல் மேற்கொள்ளப்படும் நேரம் மற்றும் சிகிச்சையின் வெற்றி அல்லது தோல்வி ஆகியவற்றை சார்ந்துள்ளது. ஒரு கண் அழுத்த நோய் நிபுணர், நிலைமையை ஆராய்ந்து பார்த்து, பார்வை திறனை மேம்படுத்த மற்றும் சிறந்த விளைவுகளை வழங்கக்கூடிய ஒரு சிகிச்சை திட்டத்தை வழங்குவார்.
சுய பராமரிப்பு குறிப்புகள் பின்வருமாறு:
- சிரமப்பட்டு கண்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- யோகா, தியானம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை/உளைச்சலை எளிதாக்கலாம்.
- தினமும் உடற்பயிற்சி செய்தல் கண்ணில் ஏற்படும் அழுத்தத்தையும், பார்வை இழப்பு நேரிடும் வாய்ப்புகளையும் குறைக்கலாம்.
- வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி, துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை அடங்கிய உணவுத்திட்டம் மேற்கொள்வது கண்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.
- நோயின் முன்னேற்றத்தை தடுக்க முறைப்பட்ட தொடர்ந்த கண் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.