கர்ப்பப்பை வாய் புற்றுநோய் - Cervical Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 29, 2018

October 29, 2020

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை அல்லது கருப்பையின் அடி நிலைப்பகுதியனான கர்ப்பப்பை வாயில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும். பெரும்பாலான புற்றுநோய்கள் செதிள் உயிரணு வகையாகும். அதே சமயம் சுரப்பிச்சுவர் புற்றுநோய் அடுத்த மிகப் பொதுவான புற்றுநோய் வகையாகும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது உலகளவில் பெண்களில் காணப்படும் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோய் ஆகும். இந்தியாவில், இது பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களில்  6-29% பங்களிக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆரம்ப கட்டங்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளை ஒருவர் கவனிக்க முடியாது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வளர்ச்சி அடையும் போது, அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன. அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெரும்பாலாக மனித காம்புவடிவக்கட்டி வைரஸ் (எச்.பி.வி) தொற்று காரணமாக ஏற்படுகிறது, இது ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு யோனி, வாய்வழி அல்லது குத உடலுறவு வழியாக பரவுகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் சில காரணிகள் பின்வருமாறு:

  • புகை பிடித்தல்.
  • மிகக் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி.
  • 5 வருடங்களுக்கும் மேலாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை பயன்படுத்துதல்.
  • 3 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்தல்.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

இதில் ஆரம்ப அறிகுறிகள் அல்லது தாக்கங்கள் இல்லை; இருப்பினும், வழக்கமான சோதனையானது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை கண்டறிய உதவும். 30 மற்றும் 49 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் ஸ்கிரீனிங்/நோய்ப்பாதிப்பு ஆய்வு  குறைந்தபட்சம் ஒரு முறையாவது மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கான கண்டறிதல் முறைகள் பின்வருமாறு:

  • உடல் பரிசோதனை மற்றும் மருத்துவம் சார்ந்த வரலாறு: நோயாளியின் பொது வரலாறு மற்றும் பரிசோதனை.
  • இடுப்பு சோதனை: நோய்த்தொற்று அல்லது நோயின் அறிகுறிகளை கண்டறிய யோனி மற்றும் கருப்பையை  பரிசோதித்தல்.
  • பாப் சோதனை (பேபேசு-பாபனிகொலாவு சோதனை): நோய், நோய்த்தொற்று அல்லது புற்றுநோயை கண்டறிய கருப்பை வாயில் இருந்து செல்களை சேகரித்தல்.
  • எச்.பி.வி சோதனை: எச்.பி.வி பரிசோதனை, செல்களின் நுண்ணிய பரிசோதனை, அசிட்டிக் அமிலத்தை பயன்படுத்தி பார்வை சோதனை.
  • கருப்பை வாயில் சுரண்டும் மருத்துவம்: கருப்பை வாயில் ஏற்படும் புற்று நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய உதவுகிறது.
  • கோல்போஸ்கோபி: யோனி மற்றும் கருப்பை வாயில் உள்ள அசாதாரண பகுதிகளை சரிபார்க்க உதவுகின்றது.
  • திசுப் பரிசோதனை: புற்று நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய கருப்பை வாய் திசுவை எடுத்தல்.

சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

புற்று நோயின் தீவிரத்தை பொறுத்து, ஒரு மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கலாம் அல்லது பல மருந்துகளின் கலவை கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

நிலையான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

  • அறுவை சிகிச்சை:
  1. கூம்பகற்ற அறுவை சிகிச்சை: கருப்பை வாயின் கூம்பு வடிவிலான திசுவை அகற்றுதல்.
  2. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை: கருப்பை வாய் உள்ளிட்ட முழு கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுவதை உள்ளடக்கியது.
  • கதிர்வீச்சு சிகிச்சை: புற்றுநோய் செல்களை அழிக்க அதிக ஆற்றல்மிக்க கதிர்களை பயன்படுத்துகிறது.
  • கீமோதெரபி/வேதிய சிகிச்சை முறை: மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்களை தடுக்க அல்லது கொல்ல பயன்படுத்தப்படுகின்றன.
  • இலக்கு சிகிச்சை: ஒரு செல் எதிர்ப்பான்களின் உதவியோடு, புற்றுநோய் செல்களை கண்டறிந்து அதற்கு இலக்கு வைக்கிறது.

எச்.பி.வி தடுப்பூசி (இனக்கலப்பு மருந்துகள்) உரிமம் பெற்றவை, பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதால், 9-26 வயதுடைய பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. புற்றுநோய் உருவாக பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால், அதனைத் தடுக்க முடியும்.

சுய பராமரிப்பு குறிப்புகள் பின்வருமாறு:

  • கருப்பை வாயில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களைக் கவனிக்க ஒரு கண்ணாடி மற்றும் பிரகாச ஒளி பயன்படுத்தி சுய பரிசோதனை செய்தல்.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க, ஆணுறை போன்ற மருந்து அல்லாத கருத்தடை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • எச்.பி.வியினால் ஏற்படும் நோய்த்தொற்றைத் தடுக்க ஒன்றுக்கும் மேற்பட்டவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்வதை  தவிர்க்கவும்.
  • எந்தவொரு சக-தொற்றுநோயையும் தவிர்ப்பதற்கு தன்னுடைய சுகாதார நிலைமைகளை பராமரிக்க வேண்டும்.
  • நோய்க்கான நிலையை கண்டறிய தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். நோய் கணடறிதலுக்கு பிறகான முதல் 2 ஆண்டுகளில், நோயாளிகளுக்கு ஒவ்வொரு 3-4 மாதங்களுக்கு தொடர் மேற்பார்வை இருத்தல் வேண்டும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒரு சமூக அவதூறாக கருதக்கூடாது, மேலும் புற்றுநோயை முன்கூட்டியே  கண்டறிய மற்றும் ஸ்கிரீனிங்/ நோய்ப்பாதிப்பு ஆய்வு செய்ய  மகப்பேறு மருத்துவருடன் கூச்சம் இல்லாமல் கலந்தாலோசிக்க வேண்டும். ஒரு நேர்மறையான அணுகுமுறையும், ஒழுங்கான பரிசோதனையுடனும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க முடியும்.



மேற்கோள்கள்

  1. Saurabh Bobdey et al. Burden of cervical cancer and role of screening in India. Indian J Med Paediatr Oncol. 2016 Oct-Dec; 37(4): 278–285. PMID: 28144096
  2. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Cervical cancer
  3. National Cervical Cancer Coalition. Cervical Cancer Overview. America; [Internet]
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cervical Cancer
  5. The American Association for Cancer Research. Cervical Cancer. Philadelphia; [Internet]

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் டாக்டர்கள்

Dr. Akash Dhuru Dr. Akash Dhuru Oncology
10 Years of Experience
Dr. Anil Heroor Dr. Anil Heroor Oncology
22 Years of Experience
Dr. Kumar Gubbala Dr. Kumar Gubbala Oncology
7 Years of Experience
Dr. Patil C N Dr. Patil C N Oncology
11 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for கர்ப்பப்பை வாய் புற்றுநோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.