வாய்ப் புண் (கங்க்கர் புண்கள்) என்றால் என்ன?
வாய்ப் புண் என்பது ஈறின் அடிப்பகுதியில் உள்ள திசுக்களில் உண்டாகும் சிறிய காயம் அல்லது புண் ஆகும். ஆஃப்தோஸ் புண்கள் என்றும் அழைக்கப்படும் இவை, தொற்றுநோய் அல்ல, ஆனால் வலி மிகுந்ததாகவும், சாப்பிடுவது, பேசுவது போன்ற அடிப்படைப் செயல்பாடுகளில் அதிக சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
வாய்ப் புண்கள் வழக்கமாக நாக்கிற்கு கீழ், உதடுகள் அல்லது கன்னத்தின் உட்பக்கத்தில் அல்லது ஈறுகளின் அடியில் உருவாகின்றன. அது நீள்வட்ட வடிவில், நடுவில் வெள்ளை-மஞ்சள் நிறத்திலும் மற்றும் ஓரங்களில் சிவப்பு நிறத்திலும் இருக்கும். புண்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒரு கூச்ச உணர்வு அல்லது எரிச்சல் இருக்கும். பல்வேறு வகையான வாய்ப்புண்களுக்கான அறிகுறிகள் பின்வருமாறு:
சிறிய புண்கள்:
- மிகச் சிறியது.
- நீள்வட்ட வடிவமானது.
- ஒரு வாரத்தில் தானாகவே குணமடைந்துவிடும்; வடுக்கள் இருக்காது.
பெரிய புண்கள்:
- பெரியது மற்றும் ஆழமானது.
- நன்கு வரையறுக்கப்பட்டது
- கடுமையான வலி.
- குணமடைய பல வாரங்கள் எடுத்துக் கொள்ளும், பெரும்பாலும் பெரிய வடுக்கள் ஏற்படலாம்.
தோலழற்சியினால் ஏற்படும் புண்கள்:
- மிகச்சிறியது.
- கொத்தாக உருவாகி ஒரு பெரிய புண்ணாக மாறும்.
- வடுக்கள் இல்லாமல் இரண்டு வாரங்களில் குணமடையும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வாய்ப் புண்கள் வெவ்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன, பெரும்பாலும் கீழ்கொடுக்கப்பட்டவற்றின் ஒரு கலவையாக இருக்கும்.
- கன்னத்தை கடித்ததினால் ஏற்பட்ட காயம்.
- வெகுநேரமாக, கடினமாக அல்லது வேகமாக பல் துலக்குதல்.
- பற்பசையில் காணப்படும் சோடியம் லாரில் சல்பேட்.
- அதிகமான எண்ணெய், காரம், அமிலத்தன்மை நிறைந்த உணவு அல்லது பால் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பொழுது கூச்ச உணர்திறன்.
- துத்தநாகம், வைட்டமின் பி 12 அல்லது ஃபோலிக் அமிலம் போன்றவற்றின் குறைபாடு.
- புண் ஏற்படுத்தும் பாக்டீரியா இருத்தல்.
- பெண்களில் ஹார்மோன் மாற்றங்கள்.
- மன அழுத்தம்.
- செலியக் நோய் (பசையம் உணர்திறன்), குடல் அழற்சி நோய், பெசெட்ஸ் நோய், அல்லது எச்.ஐ.வி தொற்று / எய்ட்ஸ் போன்ற நோய்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
வாய் மற்றும் புண்களை ஆய்வு செய்வது மட்டுமே வாய்ப் புண்களை கண்டறிய போதுமானது ஆகும். இந்த நிலை ஏற்படுவதற்கு ஏதேனும் காரணம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், அல்லது புண்கள் மிக நீண்ட காலம் இருந்தால், மருத்துவர் சில சோதனைகளை பரிந்துரை செய்வார்.
சிகிச்சை பலவற்றின் கோவையாக இருக்கும், மருத்துவர் பொதுவாக பின்வருவனவற்றை பரிந்துரை செய்வார்:
- அழற்சி மற்றும் வலிக்கு டெக்ஸாமெதேஸான் கொண்டு வாய்க் கொப்புளித்தல்.
- ஹைட்ரஜன் பெராக்சைடு, ஃப்ளோசினோனைட் அல்லது பென்சோக்கைன் கொண்டிருக்கும் மேற்பூச்சு மருந்துகள் அல்லது ஜெல்களை தடவுதல்.
- சந்தேகத்திற்கிடமான காரணத்தை பொறுத்து கொடுக்கப்படும் வாய்வழி மருந்துகள்.
- புண்களை எரிப்பது அல்லது அழிப்பது.
- குறைபாட்டிற்கான பிற்சேர்வு, எ.கா. வைட்டமின் பி12, ஃபோலேட் அல்லது துத்தநாகம் போன்றவை அடங்கிய பிற்சேர்வு.
- காரம், பால், பருப்பு வகைகள், எண்ணெய் நிறைந்த உணவு அல்லது அமிலத் தன்மை நிறைந்த உணவுகளை தவிர்த்தல் மற்றும் குறைபாடுள்ள ஊட்டச்சத்தை உங்கள் உணவில் சேர்த்தல் உள்ளிட்ட உணவு முறை மாற்றங்கள்.
- மேம்படுத்தப்பட்ட வாய்வழி சுகாதாரம்.
- மன அழுத்தத்தை சிறந்த முறையில் போக்குதல்.
(மேலும் படிக்க: வாய்ப்புண்ணுகான சிகிச்சைகள்)