குடல் கட்டுப்பாடிழப்பு என்றால் என்ன?
குடல் கட்டுப்பாடிழப்பு என்பது மலம் அல்லது கழிவுகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை. இதனால், மலம் வெளியேற்றம் தானாக அல்லது தற்செயலாக நிகழ்கிறது. பொதுவாக முதியவர்களிடம், குறிப்பாக பெண்களில் காணப்படுகிறது. இது எப்போதாவது ஏற்படலாம் மற்றும் அதன் தீவிரத்தை பொறுத்து, மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம். சங்கடம் வந்துவிடும் என்ற அச்சம் காரணமாக இந்த இக்கட்டான நடவடிக்கை சமூக வாழ்விலிருந்து நம்மை தனிமைப்படுத்தலாம்.
நோயுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இரண்டு வகையான குடல் கட்டுப்பாடிழப்பு உள்ளது, வகைகளை பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.
- அவசர மலக் கட்டுபாடிழப்பு:
மலம் கழிக்கவேண்டுமென்கிற அவசர உணர்வு இருக்கும் ஆனால் கழிவறைக்குச் செல்லும்வரை கட்டுப்படுத்த இயலாது.
- குடல் மலக் கட்டுபாடிழப்பு:
இந்த வகையில் மலம் கழிப்பதற்கு முன் ஒரு அவசரமோ அல்லது மலம் கழியும் உணர்வோ இருக்காது.
வாயுக்கோளாறை கட்டுப்படுத்துவதில் சிரமம் மற்றும் மலத்தின் துளிகள் அல்லது கறைகள் ஆகியவை குடல் கட்டுப்பாடிழப்புடன் தொடர்புடைய பிற அறிகுறிகளாகும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
குடல் கட்டுப்பாடிழப்புக்கான பல்வேறு காரணங்கள்:
- வயிற்றுப்போக்கு.
- கடுமையான மலச்சிக்கல்.
- அறுவைசிகிச்சை அல்லது காயத்தால் மலவாய் தசைகள் பலவீனமடைவது.
- அறுவைசிகிச்சை அல்லது காயம் காரணமாக மலவாய் மற்றும் மலக்குடல் நரம்புகளில் சேதம் ஏற்படலாம்.
- மூல நோய்.
- மலக்குடல் இறங்குதல்.
- பெண்களில் யோனி வழியாக மலக்குடல் வெளியே தோன்றுவது.
- கிரோன்'ஸ் நோய், பெருங்குடல் அழற்சி மற்றும் கடைப்பெருங்குடல் அழற்சி போன்ற இரைப்பை-குடல்வழி பிரச்சினைகள்.
- நீரிழிவு, பார்கின்சனிஸம், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் திசு பன்முகக் கடினமாதல் (மல்டிபிள் ஸ்க்ளீரோசிஸ்) போன்ற நோய் நிலைகள்.
- சுகப்பிரசவம்.
- செயல்பாடுகள் அதிகமில்லாத வாழ்க்கைமுறை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர் உங்கள் அறிகுறிகள் மற்றும் பிற மருத்துவ நிலைமைகளின் வரலாற்றை தெரிந்துகொண்டு, பின்னர் ஒரு உடல் பரிசோதனை செய்வார். நோயின் நிகழ்வு மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் மருத்துவர், ஆனோஸ்கோபி (மலவாயின் உள்ளே பார்க்க), அனோரெக்டல் மானோமெட்ரி (மலவாய் தசைகளில் உள்ள பலவீனங்களை அடையாளம் காண), ஆண்டோ ஆனல் அல்ட்ராசோனோகிராபி மற்றும் டெபோகோகிராஃபி (உறுப்புகளின் உருவங்களை உருவாக்கி, மலவாய், மலக்குடல் அல்லது அதன் தசைகளில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் காண).
சிகிச்சைகள்:
- உணவு பழக்கங்களில் மாற்றம் செய்து நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வாழ்க்கைமுறை மாற்றங்கள்.
- தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி.
- ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிப்பதை நீங்களே பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
- தேவையான மருந்துகள்.
- காரணம் மற்றும் தீவிரத்தை பொறுத்து அறுவை சிகிச்சை.