சுருக்கம்
ஒரு அதிகமான இரத்த அழுத்தத்தை அல்லது உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருப்பது ஒரு பொதுவான உடலநலப் பிரச்சினையாக இருந்தாலும், இரத்த அழுத்த அளவுகளில் ஒரு இறக்கம் ஏற்படுவது கூட (குறைந்த இரத்த அழுத்தம் எனவும் அறியப்படும்), சிலசமயங்களில் உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம். இரத்த அழுத்தம் என்பது, இதயத்தின் சுருங்குதல் (இதயம் சுருங்கும் நிலை) மற்றும் விரிதல் (இதயம் விரியும் நிலை) நடைபெறும் போது, இரத்த நாளங்களின் (தமனிகள்) சுவர்களில் இரத்தம் செலுத்தப்படும் அழுத்தமாகும். இரத்த அழுத்த அளவுகள் இரண்டு எண்களைப் பயன்படுத்தி குறிப்பிடப்படுகின்றன, மேலும், இயல்பான அளவு எச்ஜிக்கு 120/80 எம்எம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை, அழுத்த அளவுகள் எச்ஜிக்கு 90/60 எம்எம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அது குறைந்த இரத்த அழுத்தம் எனக் கருதப்படுகிறது. குறைந்த இரத்த அழுத்தம் பொதுவாக ஒரு சிலருக்கு இருந்தும், கவனிக்கப்பட முடியாமல் இருக்கலாம், மற்றவர்கள் தலைசுற்றல், மயக்கம் (உணர்விழப்பு), லேசான-தலை உணர்வு போன்ற அறிகுறிகளை உணர முடியலாம். வழக்கமாக, இரத்த அழுத்த அளவில் ஏற்படும் இறக்கம், ஒரு காயத்தின் காரணமாக, இரத்த இழப்பு, திரவ இழப்பு அல்லது குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படக் கூடும். ஒருவேளை, இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் தீவிரமடைந்தால்; முழுமையான உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கும், மறைமுகக் காரணத்தை தெரிந்து கொள்ளவும் ஒரு மருத்துவரை பார்ப்பது நல்லது. குறைந்த இரத்த அழுத்தத்துக்கான சிகிச்சைகளில் முக்கியமானவை, அதிக அளவில் உப்பு மற்றும் சர்க்கரை நீரை அல்லது திரவ பானங்களை உட்கொள்வது ஆகியன. குறைந்த இரத்த அழுத்தத்துக்கு மறைமுகமான காரணம் ஏதேனும் இருந்தால் அந்த மறைமுகமான காரணத்திற்கு சிகிச்சை அளிப்பது, வழக்கமாக இரத்த அழுத்தத்தை திரும்ப இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.