கொப்புளம் என்றால் என்ன?
கொப்புளம் என்றால் சருமத்தின் மேற்பரப்பில் (மேலோட்டமான அடுக்கு) திரவங்களின் கூட்டாக உருவாகும் சிறிய தசைகளோ அல்லது புள்ளிகளோ ஆகும். கொப்புளங்கள் எளிதில் உருவாகக்கூடிய மிகவும் பொதுவான பகுதிகள் கைகள் மற்றும் கால்கள். கொப்புளங்கள் வழக்கமாக தெளிவான திரவத்தினாலோ (சீரம்), இரத்தத்தினாலோ அல்லது சீழாலோ நிரம்பியிருக்கின்றன. அடிக்கடி எரிச்சல் அல்லது உராய்வு தோலை சேதப்படுத்தி திரவம் சேர வழிவகுக்கிறது, மேலும் இது அடிப்படை திசுவில் எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இதைச் சார்ந்த முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
காரணத்தைப் பொறுத்து, பல்வேறு அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் கொப்புளங்களுடன் தொடர்புடையதாக உள்ளன.
- வலி மற்றும் சிவந்திருத்தல் பொதுவாக கொப்புளங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது.(எ.கா தவறான பொருத்தமில்லாத காலணிகள், தீக்காயங்கள், காயம் போன்றவை).
- தீக்காயங்கள் மற்றும் தற்சார்பு எமக்கோளாறுகளினால் (எபிடெர்மோலைசிஸ் புல்லோசா) சிவத்தல் மற்றும் தோல் உரிவதுடன் கொப்புளங்கள்.
- சில வழக்குகளில் வைரஸ் தொற்றின் காரணாமாக உதடுகளின் அருகில் ஏற்படும் கொப்புளங்களுடன் சேர்ந்து காய்ச்சல் வரநேரிடலாம் (காய்ச்சல் கொப்புளம்).
- படைநோய் மற்றும் தோல் தொற்றுநோய் காரணமாக (சிரங்கு புண்கள்) ஏற்படும் கொப்புளங்களில் அரிப்புத்தன்மை இருக்கும்.
- தோலுறைவு கொப்புளங்களில் தோல் வெள்ளை நிறமாகவும் மற்றும் பளபளப்பாகவும் மாறும் மேலும் அதனுடன் உணர்வின்மையும் தொடர்புடையதாக இருக்கிறது.
- வெங்குருவினால் ஏற்படும் கொப்புளங்கள் தோல் பதனிடுதல் மற்றும் சுருக்கங்களுடன் தொடர்புடையது.
- அக்கி (அக்கி அம்மை), சின்னம்மை போன்றவற்றில் கொப்புளத்தின் மேல் ஏற்படும் போருக்கு மற்றும் எரியும் வலி இருக்கலாம்.
கொப்புளங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
தோலில் கொப்புளங்கள் உருவாவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கின்றன.
- நீடித்த உராய்வோ அல்லது தோலினை தேய்த்தலோ கூட காரணமாக இருக்கலாம்.
- வெப்பத்தின் வெளிப்பாடு, இரசாயனங்கள், புற ஊதா கதிர்கள், உறைபனி வெப்பநிலை போன்றவை காரணமாக உண்டாகும் காயங்கள்.
- சின்னமை, அக்கி அம்மை மற்றும் தோல் நோய்த்தொற்றுகள் போன்ற நோய்கள்.
- பெம்பீக்ஸ், எபிடர்மோலைசிஸ் புல்லோசா போன்ற நோய் எதிர்ப்பு மண்டல கோளாறுகள்
- சில தாவரங்களின் மூலமோ (விஷம் ஐவி, கருவாலி, முதலியன), இரசாயனங்கள் மூலமோ ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினையின் வெளிப்பாடு.
கொப்புளங்கள் எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றன?
உடல் பரிசோதனை, அறிகுறிகளின் வரலாறு, மற்றும் பல்வேறு சோதனைகள் மருத்துவர்களுக்கு நோயை கண்டறிய உதவுகின்றன.
- பரிசோதனை மற்றும் வரலாறு:
- தோற்றம் - தெளிவான திரவம், இரத்தம், அல்லது சீழ் போன்றவற்றைக் கொண்டிருக்கும் கொப்புளங்கள்.
- இருப்பிடம் - உடலின் ஒரு பகுதியிலோ அல்லது குறிப்பிட்ட இடத்திலோ அல்லது உடல் முழுவதிலும் ஏற்படும் கொப்புளங்கள்.
- அறிகுறிகளின் வரலாறு - வலி, அரிப்பு, காய்ச்சல் போன்றவைகளுடன் தொடர்புடைய கொப்புளங்கள்.
- பரிசோதனைகள்:
- முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை.
- ஒவ்வாமை,ஐஜிஜி,ஐஜிஎம் போன்றவைகளை கண்டறிய ஐஜிஇ யின் நிலைகள் மற்றும் தற்சார்பு எமக்கோளாறுக்கான பிற மேம்பட்ட பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டும்.
- கொப்புளத்திலிருந்து எடுக்கும் மாதிரி திரவம் பாக்டீரியாவின் வளர்ப்பு ஊடகம் மூலம் இந்த தொற்றுக்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிய உதவுகிறது மற்றும் சிகிச்சைக்கான நுண்ணுயிர் எதிர்ப்பியை முடிவு செய்யவும் உதவுகிறது.
- கொப்புளங்களை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா அல்லது வைரஸ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை அல்லது பிசிஆர் சோதனையை மேற்கொள்ளலாம்.
- இரத்த ஒவ்வாமை சோதனை மற்றும் தோல் ஒவ்வாமை சோதனைகள், ஒவ்வாமையூக்கிகளை கண்டறிய உதவுகின்றன.
- தோல் திசுச்சோதனை - தோலின் மாதிரியை நுண்ணோக்கின் கீழ்கொண்டு பரிசோதிப்பதன்மூலம், காரணிகள் மற்றம் கொப்புளத்தின் பிற காரணங்களை கண்டறியலாம்.
- கொப்புளம் உருவாக்கத்துடன் தொடர்புடைய ஆன்டிஜென்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் இருப்பை கண்டறிவதற்கு சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- பரம்பரை பிரச்சினைகளை கண்டறிய மரபணு சோதனைகள் செய்யப்படுகின்றன.
கொப்புளங்கள் பொதுவாக மருந்துகள் இல்லாமல் தானாகவே குணமடைந்துவிடுகின்றன. மருந்துகள் பயன்படுத்தப்படும் நிலைகள் பின்வருமாறு:
- நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு:
- கொப்புளத்தில் சலம் நிரம்பியிருந்தால் அந்த தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
- மீண்டும் உருவாகும் கொப்புளத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
- ஒவ்வாமை,ஒளி உணர்திறன் அல்லது எரிச்சலினால் ஏற்படும் மிக கடுமையான கொப்புளங்கள்.
- வாய் அல்லது வேறு அசாதாரணமான இடங்களில் கொப்புளங்கள் தோன்றுவது.
- ஆன்டிவைரல் மருந்துகள்:
- சின்னம்மை, அக்கி அம்மை அல்லது காய்ச்சல் கொப்புளங்கள் காரணத்தினால் ஏற்படும் கொப்புளங்களுக்காக பயன்படுத்தும் மருந்துகள்.
- தற்சார்பு எமக்கோளாறுகள் காரணமாக உண்டாகும் கொப்புளங்களுக்கு கார்டிகோஸ்டிரொயிட்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மாற்றும் மருந்துகள்.
- அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வலியை குறைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
- ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் அரிப்பினை குறைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
- சன்ஸ்கிரீன் களிம்புகள் வெங்குருவை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
- கடுமையான நிலைகளில் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் அதனால் ஏற்படும் குறைபாடுகளுக்கு அறுவைசிகிச்சை மற்றும் தோல் ஒட்டுதல் தேவைப்படுகிறது, குறிப்பாக தற்சார்பு எமக்கோளாறுக்கு இது மிகவும் அவசியம்.
சுய பாதுகாப்பு:
- கொப்புளத்தை வெடிக்காமலும் கொப்புளத்தின் தோலை உரிக்காமலும் தடுக்கவும்.
- வெடித்த கொப்புளத்தின் மேல் திரவம் வெளியேறிய பின் மென்மையான காயக்கட்டு மூலம் மூடவேண்டும்.
- கொப்புளங்களை ஏற்படுத்தக்கூடிய பொருத்தமில்லாத காலணிகளை பயன்படுத்த வேண்டாம்.
- கொப்புளங்கள் வெடிக்காமல் இருக்க சரியான தடுப்பு திணிப்பை குறிப்பாக கால்களில் உபயோகப்படுத்தவும்.