புரோஸ்டேட் வீக்கம் என்றால் என்ன?
ஆண்களிடம் இருக்கும் மிகவும் மென்மையான ஒரு பகுதி தான் புரோஸ்டேட் சுரப்பி ஆகும். அது விந்தணுக்களுக்கு ஊட்டமளிக்க ஒரு திரவத்தை விந்துப் பாய்மத்தில் (செமென்) சுரக்கும். இது சிறுநீரை தாங்கிச் செல்லும் குழாயான யூர்த்ராவைச் சுற்றி அமைந்துள்ளது. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் புரோஸ்டேட் வீக்கம் பொதுவாகக் காணப்படுகிறது. இது வயதானவர்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
இதற்கு தீங்கற்ற புரோஸ்டாடிக் ஹைபர்பிளாசியா என்ற பெயரும் உண்டு, ஏனெனில் இது புற்று நோயை உண்டாக்காது. இது பிற்காலத்தில் புரோஸ்டேட் புற்று நோயாக உருவெடுக்கவோ அல்லது அதை உண்டாக்கும் வாய்ப்பையோ ஏற்படுத்தாது.
இதை அறிந்துகொள்ளும் அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
புரோஸ்டேட் வீக்கம் முதலில் யூரெத்ராவை குறுக்கி சிறுநீர் கழிப்பதையே பாதிக்கும்.
- சிறுநீர் கழிப்பது முதலில் அதிகமாகும், அதுவும் சிறுநீரை எந்த குறுகிய காலத்திற்குக் கூட அடக்க முடியாமல் போகும். (மேலும் படிக்க: அடிக்கடி சிறுநீர் கழித்தலுக்கான காரணங்கள்)
- சிறுநீர் ஒரே நேரத்தில் கழிக்க முடியாமல் விட்டு விட்டு முழுமையாக கழிக்க முடியாததை போன்ற உணர்வு ஏற்படும்.
- சிறுநீர் கழிக்கும் பொழுது வலி மற்றும் இரத்த கசிவு ஏற்படும்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
புரோஸ்டேட் வீக்கத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் அது வயதானவர்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
- டெஸ்டிகுலர் செல்கள் மற்றும் ஆண் ஹார்மோன் டெஸ்டோஸ்டெரோனில் ஏற்படும் மாற்றம் புரோஸ்டேட் சுரப்பியை விரிவடையச்செய்கிறது.
- ஆராய்ச்சியின் படி, ஆண்கள் எதாவது நோயின் காரணமாக விதைப்பையை அகற்ற நேரிடும்போது, அவர்கள் இப்பிரச்சனையை எதிர்கொள்வதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த நிலை 75 வயதுக்கு மேற்பட்டர்வர்களில் இது மிகவும் பொதுவானது மற்றும் எந்த ஒரு ஆபத்தையும் இது குறிக்காது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
புரோஸ்டேட் வீக்கம் விலக்கல் அடிப்படையிலும், அறிகுறிகள் மற்றும் உடல் பரிசோதனைகள் மூலமாகவும் அறியலாம்.
- சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரக கோளாறு, சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் யூரெத்ராவில் ஏற்படும் அடைப்பு போன்ற வேறு காரணங்களாலும் ஏற்படலாம். உங்களின் ஆய்வை கண்டு இக்காரணங்கள் அனைத்தையும் சிறுநீரக மருத்துவர் கண்டறிவார்.
- உங்கள் மருத்துவர் உங்களது மருத்துவ வரலாற்றை ஆராய்ந்து உங்களின் அறிகுறிகள் மற்றும் பிற மருத்துவ காரணங்களை ஆராய்ந்து உங்கள் நிலையை கண்டறிவார்.
- குறிப்பிட்ட புரோஸ்டேட் ஆன்டிஜென் அல்லது பிஎஸ்ஏ என்றழைக்கப்படும் குறிப்பிட்ட புரதத்திற்கான உடல் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்த பரிசோதனைகள் ஆகியவை புரோஸ்டேட் வீக்கம் இருப்பதைக் கண்டறியும் சாவிகள் ஆகும்.
இதன் சிகிச்சை, அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்தே அளிக்கப்படும். குறைவான அறிகுறிகளுக்கு எந்த வித சிகிச்சையும் தேவையில்லை.
- சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வழியை குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பெரும்பாலும் ஆல்பா பிளாக்கர்ஸ் ரக மருந்துகளை பயன்படுத்துவார்கள்.
- புரோஸ்டேட்டை குறைக்க சிறுநீரக மருத்துவர் வேறு ரக மருந்தை பரிந்துரைப்பார் இது 5-ஆல்பா ரிடக்டேஸ் இன்ஹிபிடர்ஸ் இது பெரும்பாலும் ஆறு மாத காலத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் புரோஸ்டேட்டின் ஒரு பகுதியை அகற்றினால் யூரெத்ராவை சுற்றி உள்ள அழுத்தம் குறையும்.
(மேலும் படிக்க: ஆண்கள் பாலியல் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்)