படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்றால் என்ன?
படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது நைட்-டைம் இன்கான்டினென்ஸ் (இரவு-நேரத்தில் அடிக்கடி சிறுநீர்கழித்தல்) எனவும் அல்லது நொக்டர்னல் எனுரேசிஸ் (இரவுநேர சிறுநீர்க் கட்டுப்பாடின்மை) எனவும் அழைக்கப்படுகிறது அதாவது தூங்கும்போது தன்னிச்சையின்றி அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்று பொருள். இது வழக்கமாக 5லிருந்து - 7 வயதுக்கு மேல் ஏற்படாது. உலகளவில் பள்ளி-பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு இது ஒரு பொதுவான நிலையே. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது பொதுவானது என்றாலும், இந்தியாவில் இதற்கான போதுமானளவு தகவல்கள் வெளியிடப்படவில்லை. உலகளாவில் உள்ள மக்களிடத்தில் இருக்கும் இதற்கான பாதிப்பு 1.4% -28% சதவிகிதம் ஆகும். இந்திய மக்களிடம் இதனால் இருக்கின்ற பாதிப்பு 7.61% -16.3% சதவிகிதம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் யாவை?
குழந்தைகள் பொதுவாக அவர்களது 5ஆவது வயதில் எவ்வாறு கழிவரையை உபயோகிப்பது என்று கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் முழுமையான சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை அடைவதற்கு நிலையான எந்த குறிப்பிட்ட வயதும் இல்லை. சில குழந்தைகள் 5 மற்றும் 7 ஆண்டுகளுக்கு இடையில் இந்த சிக்கலை சந்திக்கலாம். உடனடியான மருத்துவ கவனத்தை மேற்கொள்வதற்கான அடையாளம் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- குழந்தை 7 வயதிற்கு பிறகும் படுக்கையை ஈரமாக்குவது.
- படுக்கையில் சிறுநீர் கழித்தல் குணமாகிய சில மாதத்திற்கு பிறகு மீண்டும் படுக்கையை ஈரப்படுத்த ஆரம்பிப்பது.
- படுக்கையில் சிறுநீர் கழித்தலோடு வலியுடன் சிறுநீர் கழித்தல், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் கழித்தல், அதிகமாக தாகம் கொள்தல், கஷ்டப்பட்டு மலம் கழித்தல் அல்லது குறட்டைவிடுதல்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இதற்கான காரணங்கள் தெளிவில்லாதவை, ஆனால் பின்வருபவை சாத்தியமான காரணிகளாக இருக்கலாம்:
- சிறிய சிறுநீர்ப்பை: சிறுநீர்ப்பை முழுமையாக வளர்ந்த நிலையில் இல்லாதது.
- சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் திறன் இல்லாதது: முழுமையாக நிரம்பியிருக்கும் சிறுநீர்ப்பை குழந்தையை விழித்துக்கொள்ள தூண்டாதது அதாவது சீறுநீர்பையை கட்டுப்படுத்தும் நரம்புகள் மெதுவாக முதிர்ச்சியடைதல்.
- ஹார்மோன் சமநிலையின்மை: சிலருக்கு ஆண்டிடையூரிடிக் ஹார்மோனின் (ஏஹெச்டி) பற்றாக்குறையினால் இரவில் சிறுநீர் உருவாக்கமானது மெதுவாக இருப்பது.
- சிறுநீர் பாதையில் நோய் தொற்று: நோய்தொற்றின் காரணமாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதில் குழந்தைக்கு ஏற்படும் சிரமம். (மேலும் வாசிக்க: சிறுநீர்ப்பாதைத் தொற்று சிகிச்சை).
- தூக்கத்தில் மூச்சுத்திணறல்: அழற்சி அல்லது பெரிய டன்சில்ஸ் அல்லது அடினாய்டுகளின் காரணமாக தூங்கும் போது ஏற்படும் மூச்சடைப்பு.
- நீரிழிவு: வழக்கமாக உங்கள் குழந்தை படுக்கையை ஈரமாக்குவதில்லை எனில் படுக்கையில் சிறுநீர் கழித்தலே நீரிழிவுக்கான முதல் அறிகுறியாகும்.
- நீண்டகால மலச்சிக்கல்: நீண்ட மலச்சிக்கலானது சிறுநீர் மற்றும் மலம் கழித்தலை கட்டுப்படுத்தும் தசையின் செயல்பாட்டை முடக்கிவிடுவது.
- மன அழுத்தம்: பயத்தினால்-தூண்டப்படும் மன அழுத்தம் கூட பெட்வெட்டிங்கை தூண்டலாம்.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
உங்கள் குழந்தையின் வழக்கமான சிறுநீரகவியலை கவனிக்கவும் மற்றும் அதற்காக தனி டயரியை பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படலாம்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
- அடிக்கடி மலம் கழித்தல் மற்றும் அதன் நிலைத்தன்மை.
- படுக்கை நேரத்தில் திரவம் உட்கொள்ளல்.
சோதனைகளுள் அடங்குபவை:
- யூரின் கல்ச்சர் மற்றும் பகுப்பாய்வு: நோய்த்தொற்று, நீரிழிவு, இரத்தத்தின் தடயங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்களுக்கான சோதனை.
- இரத்த பரிசோதனைகள்: இரத்த சோகை, நீரிழிவு, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பிற நிலைமைகளை சரிபார்த்தல்.
- சிறுநீர்ப்பை அல்ட்ராசவுண்ட்: சிறுநீர்பையில் சிறுநீர் கழித்தப்பின் எவ்வளவு சிறுநீர் இன்னும் மீதி இருக்கிறது என்பதைக் கண்டறிதல்.
- யூரோடைனமிக் சோதனை: சிறுநீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது என்பதை சரிபார்த்தல்.
- சிஸ்டோஸ்கோபி: சிறுநீர்பையில் கேமராவை வைப்பதன் மூலம் சிறுநீர்பையின் நிலைகளை சரிபார்த்தல்.
குழந்தை வளர்ச்சிக் கட்டத்தை உணர்த்துவதால் படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது ஒரு பெரிய பிரச்சினை அல்ல, ஆனால் குழந்தைகள் தர்மசங்கடமாகவோ அல்லது தாழ்வு மனப்பாண்மையையோ கொண்டிருக்கலாம். இத்தகைய சூழ்நிலையை சரிசெய்ய முடியாமல் பெற்றோர்கள் அவர்களையே உதவியற்றவர்களாக எண்ணுகிறார்கள்.
மேலாண்மைக்குள் அடங்குபவை:
- பெற்றோர்களுடனும் பிள்ளைகளுடனும் படுக்கையில் சிறுநீர் கழித்தலைப்பற்றி கலந்தாலோசித்து அவை குணப்படுத்த கூடியவை என்று அவர்களுக்கு நம்பிக்கையளித்தல்.
- மருத்துவர் ஏடிஹெச் ஒத்த மருந்தினை பரிந்துரை செய்யலாம். அது ஏடிஹெச்சினால் ஏற்படும் அதே விளைவையே அளிக்கிறது, மற்றும் இது ஒரு சிறுநீர்ப்பைத் தளர்த்தும் ஆன்டிடிப்ரெஸ்ஸாண்டாகவும் இருக்கிறது.
மருந்தில்லாத முறைகள்: ஒருவர் இது போன்ற பொருட்களை வாங்கலாம்:
- ஒருவர் கழிக்கக்கூடிய அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய உறிந்துகொள்ளும் தன்மையை கொண்ட உள்ளாடைகளை வாங்கலாம்.
- படுக்கையில் சிறுநீர் கழிக்கும்போது ஒலிக்கும் ஈரப்பதத்திற்கான அலாரங்கள்.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- காலை நேரத்தில் உங்கள் குழந்தைகளின் திரவ உட்கொள்ளலை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் மாலை நேரத்தில் திரவ உட்கொள்ளலை கட்டுப்படுத்துங்கள்.
- தூங்க போவதற்கு முன் கழிவறைக்கு செல்லும் பழக்கத்தை உங்கள் குழந்தைக்கு பயிற்றுவியுங்கள்.
- உங்கள் குழந்தைகளை ஒவ்வொரு முறையும் ஊக்குவியுங்கள், அது அவன்/அவள் சௌகரியமாகவும் நம்பிக்கையுடனும் உணர வழிவகுக்கும்.
- உங்கள் பிள்ளை சிறுநீர் கழித்தாலும், திட்டவோ அல்லது தண்டிக்கவோ அல்லது வேறேதும் செய்யக்கூடாது ஏனெனில் அது நோக்கத்தை பாழாக்கிவிடும்.
- ஷீட்களை சுத்தம் செய்வதில் உங்களுக்கு உதவ உங்கள் குழந்தைகளையும் ஊக்கப்படுத்துங்கள், அதனால் அவன்/அவள் சௌகரியமாக உணர்வார்கள்.