பாக்டீரியல் வஜினோஸிஸ் (பி.வி.) என்றால் என்ன?
யோனி மைக்ரோஃப்ளோரா என்பது பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் கலவையாகும். பி.வி என்பது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா நன்மை பயக்கும் பாக்டீரியாவை வெற்றி கொள்ளும் போது யோனி/புணர்புழையில் ஏற்படும் தொற்றே ஆகும்.
இந்த பாக்டீரியாவுக்கு இடையில் உள்ள சமநிலையின்மை காரணமாக யோனி பகுதியில் ஒரு வீக்கம் ஏற்படுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் யாவை?
இதனால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. சில பெண்களில், அறிகுறிகள் அடிக்கடி தோன்றி மறையும் . அறிகுறி உள்ள பெண்களில் இருக்கும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சிறுநீர் கழித்தலின் போது எரிச்சல்.
- யோனியில் இருந்து 'மீன்' வாசனையை போன்ற துர்நாற்றம்
- வெள்ளைநிற அல்லது சாம்பல்நிற யோனி திரவ வெளியேற்றம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
- யோனியில் உள்ள மிகவும் பொதுவான பாக்டீரியம் வகை கார்ட்னரெல்லா ஆகும். பி.வி இன் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு இந்த பாக்டீரியம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பாற்குச்சியம்/லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியாவே புணர்புழை சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. லாக்டோபாசிலஸ் எண்ணிக்கை குறைவதும் வஜினோஸிஸ் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கக்கூடும்.
இந்த தொற்றுடன் தொடர்புடைய சில ஆபத்தான காரணிகள் உள்ளன:
- புகைபிடித்தல்.
- பலருடனான பாலியல் தொடர்பு.
- பொழிச்சல்.
- கருப்பையகமான சாதனங்கள் (ஐ.யூ.டி கள்) பி.வி இன் அபாயத்தை உயர்த்துகின்றன என்பதை நிரூபிக்க போதுமான ஆய்வுகள் இல்லை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
- மகப்பேறு மருத்துவர் உங்கள் அறிகுறிகளையும், ஒரு யோனி பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டு பி.வி. நோயை கண்டறிவார்.
- பாக்டீரியாவை கண்டறிய இந்த வெளியேற்றமானது நுண்ணோக்கியால் பரிசோதிக்கப்படுகிறது. இந்த ஆய்வானது, மற்ற பாக்டீரியா தொற்று அல்லது மேக வெட்டை நோய் போன்ற பாலியல் தொற்று நோய் (எஸ்.டி.டி) ஆகியவற்றை தவிர்க்க உதவுகிறது.
- பி.வி. பெரும்பாலும் ஈஸ்ட்/மதுவம் தொற்று என்று தவறாக கருதப்படுகிறது, இதில் உதிரம்/வெளியேற்றம் மிகவும் அடர்த்தியானதாகவும் வாசனையற்றதாகவும் இருக்கும்.
பி.வி. க்கான சிகிச்சை முற்றிலும் அறிகுறிகளைப் பொறுத்ததே ஆகும்.
- எந்த அறிகுறிகளையும் வெளிகாட்டாத பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.
- யோனி அரிப்பு, அசௌகரியம் அல்லது வெளியேற்றத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு தொற்றுநோயை குணப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதற்கான மருத்துவம், மாத்திரைகள் மற்றும் மேற்பூச்சு கிரீம்கள் முதலியனவாகும். இது சுமார் 6-8 நாட்கள் கொடுக்கப்பட வேண்டும்.
- தொற்றுநோய் மீண்டும் வந்தால், நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுப்பதை நீட்டிக்க வேண்டும். இது மீண்டும் நிகழ்வதை தடுக்க, ஒவ்வொரு நோயாளியும் பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
மறுநிகழ்வை தடுக்க மேற்கொள்ளவேண்டிய சுய பாதுகாப்பு நடவடிக்கைகள்:
- தொடர்ந்து எஸ்.டி.டி கான சோதனைகளை செய்து கொள்ளவும், பலருடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
- பொழிச்சல் செய்ய தேவை இல்லை. தண்ணீர் கொண்டு தூய்மைப்படுத்துவது போதுமானது.
- உங்கள் ஐ.யூ டீ. யை உங்கள் மருத்துவர் மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
- யோனி பகுதியை சுத்தம் செய்ய மிதமான, வாசனையற்ற சோப்புகள் பயன்படுத்தவும்.
(மேலும் படிக்க: யோனி ஆரோக்கியம்) பாக்டீரியல் வஜினோஸிஸ் (பி.வி.) என்றால் என்ன?
யோனி/புணர்புழை மைக்ரோஃப்ளோரா என்பது பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் கலவையாகும். பி.வி என்பது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா நன்மை பயக்கும் பாக்டீரியாவை வெற்றி கொள்ளும் போது யோனி/புணர்புழையில் ஏற்படும் தொற்றே ஆகும்.
இந்த பாக்டீரியாவுக்கு இடையில் உள்ள சமநிலையின்மை காரணமாக யோனி பகுதியில் ஒரு வீக்கம் ஏற்படுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் யாவை?
இதனால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. சில பெண்களில், அறிகுறிகள் அடிக்கடி தோன்றி மறையும் . அறிகுறி உள்ள பெண்களில் இருக்கும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- சிறுநீர் கழித்தலின் போது எரிச்சல்.
- யோனியில் இருந்து 'மீன்' வாசனையை போன்ற துர்நாற்றம்.
- வெள்ளைநிற அல்லது சாம்பல்நிற யோனி திரவ வெளியேற்றம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
- யோனியில் உள்ள மிகவும் பொதுவான பாக்டீரியம் வகை கார்ட்னரெல்லா ஆகும். பி.வி இன் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு இந்த பாக்டீரியம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பாற்குச்சியம்/லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியாவே புணர்புழை சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. லாக்டோபாசிலஸ் எண்ணிக்கை குறைவதும் வஜினோஸிஸ் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கக்கூடும்.
இந்த தொற்றுடன் தொடர்புடைய சில ஆபத்தான காரணிகள் உள்ளன:
- புகைபிடித்தல்.
- பலருடனான பாலியல் தொடர்பு.
- பொழிச்சல்.
- கருப்பையகமான சாதனங்கள் (ஐ.யூ.டி கள்) பி.வி இன் அபாயத்தை உயர்த்துகின்றன என்பதை நிரூபிக்க போதுமான ஆய்வுகள் இல்லை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
- மகப்பேறு மருத்துவர் உங்கள் அறிகுறிகளையும், ஒரு யோனி பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டு பி.வி. நோயை கண்டறிவார்.
- பாக்டீரியாவை கண்டறிய இந்த வெளியேற்றமானது நுண்ணோக்கியால் பரிசோதிக்கப்படுகிறது. இந்த ஆய்வானது, மற்ற பாக்டீரியா தொற்று அல்லது மேக வெட்டை நோய் போன்ற பாலியல் தொற்று நோய் (எஸ்.டி.டி) ஆகியவற்றை தவிர்க்க உதவுகிறது.
- பி.வி. பெரும்பாலும் ஈஸ்ட்/மதுவம் தொற்று என்று தவறாக கருதப்படுகிறது, இதில் உதிரம்/வெளியேற்றம் மிகவும் அடர்த்தியானதாகவும் வாசனையற்றதாகவும் இருக்கும்.
பி.வி. க்கான சிகிச்சை முற்றிலும் அறிகுறிகளைப் பொறுத்ததே ஆகும்.
- எந்த அறிகுறிகளையும் வெளிகாட்டாத பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.
- யோனி அரிப்பு, அசௌகரியம் அல்லது வெளியேற்றத்தை அனுபவிக்கும் பெண்களுக்கு தொற்றுநோயை குணப்படுத்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதற்கான மருத்துவம், மாத்திரைகள் மற்றும் மேற்பூச்சு கிரீம்கள் முதலியனவாகும். இது சுமார் 6-8 நாட்கள் கொடுக்கப்பட வேண்டும்.
- தொற்றுநோய் மீண்டும் வந்தால், நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுப்பதை நீட்டிக்க வேண்டும். இது மீண்டும் நிகழ்வதை தடுக்க, ஒவ்வொரு நோயாளியும் பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
மறுநிகழ்வை தடுக்க மேற்கொள்ளவேண்டிய சுய பாதுகாப்பு நடவடிக்கைகள்:
- தொடர்ந்து எஸ்.டி.டி கான சோதனைகளை செய்து கொள்ளவும், பலருடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
- பொழிச்சல் செய்ய தேவை இல்லை. தண்ணீர் கொண்டு தூய்மைப்படுத்துவது போதுமானது.
- உங்கள் ஐ.யூ டீ. யை உங்கள் மருத்துவர் மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
- யோனி பகுதியை சுத்தம் செய்ய மிதமான, வாசனையற்ற சோப்புகள் பயன்படுத்தவும்.
(மேலும் படிக்க: யோனி ஆரோக்கியம்)